
தந்தை செல்வநாயகம் 1970களில் தமிழ்த்தேசியப் போராட்டத்தை தீவிரப் படுத்தும் போது எமக்கு 35மைல் தொலைவில் மூன்றரைக் கோடி தமிழர்கள் எமக்குத் தோள் கொடுக்க இருக்கின்றார்கள் என்றுரைத்தார். அந்த மூன்றரைக் கோடி இருமடங்காகி விட்டது ஆனாலும் தமிழ்த்தேசிய போராட்டம் மழுங்கடிக்கப் பட்டது ஏன்?
தமிழகத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தனர். கொட்டும் மழையில் கை கோத்து நின்றனர். சிலர் தீக் குளித்தனர். இவையாவும் ஈழத் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்ட போது ஏற்பட்ட உணர்வலை மட்டுமே! இது அதிர்வலை அல்ல. அதிர்வு ஏற்பட்டிருந்தால் 10,000 ஆரியப் பிணந்தின்னி பேய்கள் சிங்களவரோடு தோளோடு தோளாக நின்று போரிட்டிருக்க முடியாது.
1983 ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் கொல்லப் பட்டபோது, இலங்கை முழுவதிலும் உள்ள சிங்களவர்கள் கொதித்து எழுந்தனர். அரச படைகளுடன் இணந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர். இது தான் அதிர்வலை!
ஈழத்தில் 125000 தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் என்ன நடந்தது? இந்தக் கொலைக்கு உதவிசெய்தவர்களை தமிழ்நாட்டுத் தேர்தலில் வெற்றி பெற்றனர். இலங்கைக்கு துணைநின்ற சோனியா காந்தியின் கட்சி ஆட்சி பீடம் ஏற்றப் பட்டது. தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த சோனியா காந்தி தனது அரசு இலங்கையில் தமிழர்கள் கௌரவமாக ஆவன செய்யும் என்றார்.
செய்தாரா?
இலங்கை அரசு ஆகஸ்ட் மாதம் முடிக்க எண்ணியிருந்த போரை மே மாதத்தில் இந்தியத் தேர்தலுக்கு முன் முடிக்க வேண்டும் என்று இந்தியா இலங்கையை வேண்டிக் கொண்டது. அதற்காக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடிய நச்சு ஆயுதங்கள் பாவிக்கப் பட்டன. குழந்தைகள் உட்படப் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கருகி மாண்டனர்.
சிங்களப் பேரினவாதிகள் பகிரங்க அறிக்கை விடுகிறார்கள் கருணாநிது உட்பட அனைத்து இந்தியாவும் தமது கைக்குள் என்று.
இப்போது சோனியா காந்தி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரப் போகிறார். அந்த அன்னையை, கலைஞரின் சொர்க்கத் தங்கத்தை தமிழ்நாடே வரவேற்கப் போகிறதே! ஏன்? தமிழ்நாடு ஒரு திரைப் படம் என்றால் அதைத் தாயாரிப்பது நடிகர்கள்; இயக்குபவர்கள் பார்பனர்கள்; நிதி வழ்ங்குபவர்கள் சாமியார்கள்; விநியோகிப்பவர்கள் அரசியல் வாதிகள்.
தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகள் யார்? கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த். இவர்களில் எவர் தமிழர். தமிழ்நாடு வந்தேறு குடிகளால் ஆளப்படுகிறது. ஒரு குடியேற்ற (காலனித்துவ) ஆட்சியின் கீழ்தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருக்கிறது. அந்தத் தமிழ்நாட்டை ஈழமக்கள் நம்பலாமா?
11 comments:
நண்பரே தமிழர்களை நம்பலாம், தமிழ் அரசியல் வாதிகளை நம்பாதே
உங்கள் ஆதங்கம் அல்லது கேள்வி மிகவும் அர்த்தம்பொதிந்த்தே. தமிழக (தமிழ்னாட்டு)இந்திய அரசியல்வாதிகள், தேர்தல் நேரத்தில் மட்டுமே, அல்லது வியாபாரத்திற்காக மட்டுமே ஈழத்த்மிழர்களின் சோகத்தைக்கையில் எடுக்கிறார்கள். இப்போதைக்குத்தமிழ்னாட்டிடம் தீர்வு இல்லையெனிலும், ஒரு நாள் தமிழன் தீர்வு காணப்பயன்படுவான் என்பதே என் நம்பிக்கை. நீங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லோரும் மனிதரே அல்லரே...
உண்மைதான்... தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று சொன்னவர் இன்று உள்ளுக்குள் இருக்கலாம்.. ஆனால் அவரின் கருத்து உண்மையானது..அழுதும் தான் தான் பேரனும் பிள்ளையை..என்ன விலை கொடுத்தேனும் நாம் தான் பேரனும் எமது விடுதலையை..எவரையும் எதற்கும் நம்பகூடாது..எவரையோ எதற்காகவோ நம்பினதால்தான் இவ்வளவு அழிவும் எமக்கு.. இல்லையெனில் தேசிய தலைவர் வேறு முடிவெடுதிருபார்...
நண்பரே! தமிழ்நாட்டை எப்பொழுதும் நம்பலாம்.... தமிழ்நாட்டின் மக்களை ஒன்றினைத்து வழி நடத்த தமிழ்த்தலைவன் ஈழத்திற்கு கிடைத்ததுபோல் எம்தமிழ்நாட்டில் அமையவில்லை...
நண்பரே! தமிழ்நாட்டை எப்பொழுதும் நம்பலாம்.... தமிழ்நாட்டின் மக்களை ஒன்றினைத்து வழி நடத்த தமிழ்த்தலைவன் ஈழத்திற்கு கிடைத்ததுபோல் எம்தமிழ்நாட்டில் அமையவில்லை...
அதனால்தான் தமிழரை நம்பலாமா என்று கேள்வியை முன்வைக்கவில்லை.
தமிழ்நாடு தமிழர்கள் கையில் இல்லையே.
1983-ம் ஆண்டு நடந்த கலவரத்தின் பின் தமிழ்நாடு சென்றவன் இன்றும் அகதியாக இருக்கிறான். ஆங்கில நாட்டுக்கு சென்றவன் அங்கு மாநகர முதல்வராக இருக்கிறான். வடக்கிலிருந்து வந்தவனை மட்டும்தான் தமிழ்நாடு வாழவைக்கும்.
மத்தியிலும்,மானிலத்திலும் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது!பணம் பதினொன்றையும் செய்யும்!கொலைஞரின் பாராட்டு விழாவுக்கு வற்புறுத்தி, நெருக்குதல் கொடுத்து வர வைக்கும் சினிமாக் கூட்டம்!பணத்தால் மட்டுமே எதனையும் சாதிக்கலாமென்று தமிழனென்று?சொல்லிக் கொள்(ல்)ளு(லு)ம் அரசியல் பன்னாடைகள் இருக்கும் வரை எதுவும் நடக்காது!!!!போராட வேண்டியது நாமே தவிரவும் பான் கி மூனோ,கொலைஞரோ,சனியோ அல்ல!!!!!
செய்யும்!கொலைஞரின் பாராட்டு விழாவுக்கு வற்புறுத்தி, நெருக்குதல் கொடுத்து வர வைக்கும் சினிமாக் கூட்டம்!பணத்தால் மட்டுமே எதனையும் சாதிக்கலாமென்று தமிழனென்று?சொல்லிக் கொள்(ல்)ளு(லு)ம் அரசியல் பன்னாடைகள் இருக்கும் வரை எதுவும் நடக்காது!!!!போராட வேண்டியது நாமே தவிரவும் பான் கி மூனோ,கொலைஞரோ,சனியோ அல்ல!!!!!
ஈழத்தமிழர் நம்பிக் கெட்ட இடங்களில் முக்கய வகிபாகமளிப்பது தமிழக அரசில்வாதிகள். நாம சறுக்கி விழுந்த மிகப் பெரிய படுகுழி தமிழக அரசில்வாதிகள். மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் என்ற மாமனிதரைத் தவிர.
யாழ்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பல இலட்சம் மக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் கைகளில் அதிகாரம் இல்லை. அதிகாரம் அந்நியர் கைகளில்.
Post a Comment