இந்தியப் பேரரசின் பட்டத்துக்குரிய இளவரசர் ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது பெரிதாக விருப்பம் இல்லை. அவருக்கு தமிழ்நாட்டில் தனது பரம்பரைச் சொத்தான காங்கிரஸ் கட்சியை தனிப் பெரும் கட்சியாக வளர்த்தெடுக்கவேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார். திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் வரை அது சாத்தியம் அற்றது என்பதை அவர் உணர்ந்து கொண்டுள்ளார். இந்திய மைய அரசு திமுகவின் ஆதரவின்றி ஆளும் பலம் பெற்றிருக்கும் இப்போதைய நிலையை அவர் பயன்படுத்தக் கூடும். அவருக்குச் சாதகமான நிகழ்வுகள் நடப்பதற்கு வேண்டியவை:
- திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி அவர்கள் இறக்க வேண்டும்.
- திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி அவர்களது வாரிசுகளான ஸ்டாலினும் அழகிரியும் அடிபட்டு இருகூறாகப் பிரிய வேண்டும்.
- இந்த பிரிவுகளில் சேராமல் மாறன் குடும்பத்தை காங்கிரசுடன் இணையவேண்டும்.
காங்கிரஸ் தனது செல்வாக்கை தமிழ்நாட்டில் உயர்த்த தடையாக இருப்பது இலங்கைத் தமிழர் பிரச்சனை. காங்கிரஸ் திமுகவைத் தனது கூட்டணியில் இருந்து கழற்றி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக தமிழின உணர்வாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து இலங்கைப் பிரச்சனையை மீண்டும் கையில் தூக்கி நாடகமாடும். அதற்கு எதிராக காங்கிரசுக்கு உள்ள ஒரே வழி இலங்கைப் பிரச்சனைக்கு மீண்டும் ஒரு அரை வேக்காட்டுத் தீர்வுத் திட்டத்தை இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தைத் "தாஜா" செய்து அதை தமிழ் மக்கள் மீது திணித்து அது சிறந்த திட்டம் என தனது சில இலங்கைத் தமிழ் கைக்கூலிகள் மூலம் பறைசாற்றச் செய்து அதைப் பெரு வெற்றியாக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது. இப்படித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய சிரமமான காரியமில்லை. ஏற்கனவே இப்படிப் பல நாடகங்கள் நடந்தேறியுள்ளது. நாலு சினிமா நடிக நடிகைகளைக் காங்கிரசில் இணைத்துவிட்டால் அது சுலபமாக நடந்தேறிவிடும்.
இந்தியக் காங்கிரஸ் ஆட்சி இதற்கு ஏற்ப காய்களை இலங்கையில் இப்போது நகர்த்திக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு அம்சமாகவே நிருபமா ராவின் இலங்கைப் பயணமும் அமைகிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை விருப்பங்களுக்கும் இந்தியக் காய் நகர்வுகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரியது. இலங்கையில் இந்தியக் காய் நகர்வுகள் வெற்றியளிகும் சாத்தியங்கள் குறைவு. இலங்கையில் பெருகிவரும் சீன ஆதிக்கம் இதற்குத் தடையாக இருக்கும். சீனாமட்டுமல்ல இலங்கையின் பக்கத் துணை. இரசியா ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கையின் பக்கத் துணைக்கு இருக்கின்றன. தமிழர் ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப் பட்டபின் இந்தியாவின் தயவில் இலங்கை இல்லை. ஆனால் இபோது இலங்கையில் தயவில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் வற்புறுத்தல்களுக்கு செவிசாய்க்க வேண்டிய நிலையில் இலங்கை இல்லை. 1983முதல் ஒரு நாலு வருடங்கள் தமிழ் ஆயுதக் குழுக்களால் இந்தியாவின் பிடியில் இலங்கை இருந்தது. இந்தியப் பிடியில் இருந்து இலங்கை கைநழுவிப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சீனாபக்கம் இலங்கை சாயாமல் இருக்க இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இந்தியா அகப்பட்டுவிட்டது. இளவரசர் ராகுல் காந்தியினது கனவு மட்டுமே.
2 comments:
இந்தியா இலங்கயில் தனக்குத் தானே குழி வெட்டிக் கொண்டு விட்டது.
மலையாளப் பார்ப்பனியக் கொள்கைவகுப்பாளர்களும் இத்தாலியாளின் பாவாடைக்குள் அகப்பட்ட ஆட்சியாளர்களும் தாங்கள் இலங்கையில் விட்ட தவறை இனி அநுபவிப்பார்கள்
Post a Comment