Monday 1 March 2010

புலம் பெயர்ந்த தமிழர்கள் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள்.


ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் இப்போது முக்கியத்துவம் வகிப்பது புலம் பெயரந்த தமிழர்களின் பலத்தை சிதறடிப்பதும் அவர்களுக்கு எதிராக ஈழம் வாழ் தமிழர்களைத் திருப்புவதும்தான். அது இப்போது தீவிரப்படுத்தப் பட்டுள்ளது என்பதற்கு:

  • இந்தியாவின் பிராந்திய நலன்களை மீறி மேற்குலகானது எதுவித நகர்வுகளையும் மேற்கொள்ளாது என்பதை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என்ற சில ஆய்வாளர்களின் ஆலோசனையும்;
  • வெறுமனவே மேற்குலக வீதிகளில் கொடிபிடித்து நிற்பதால் எதையும் சாதித்துவிடமுடியாது என்று புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்ச்சிகளைக் கொச்சைப்படுத்தி சில ஊடகங்கள் வெளிவிடும் கருத்துக்களும்
நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

வட்டுக்கோட்டைச் சதியை முறியடித்த புலம் பெயர்ந்த தமிழர்கள்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒன்றை அரைகுறையாக நடாத்தி அதைத் தோல்வியில் முடிவுறச் செய்து தமிழர்கள் மத்தியில் தனிநாட்டுக்கு ஆதரவு இல்லை என்ற பொய்ப்பிரச்சாரத்தை செய்ய ஆரிய சிங்களக் கூட்டமைப்பு தம் அடியாட்கள் மூலம் முயன்றது. ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் தீவிரமாகப் பங்கெடுத்து அதை முறியடித்தனர். ஆனாலும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடியாட்கள் அத்துடன் விடவில்லை மூன்று இலட்சம் மக்கள் வாழும் நாட்டில் அறுபத்து நான்காயிரம் மக்கள் மட்டும் வாகளித்தனர் என்று அடுத்த பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கினர். மூன்று இலட்சம் மக்களில் அரைபங்கினர் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் என்பதையோ எந்த ஒரு தேர்தலிலும் நூறு விழுக்காடு வாக்களிப்பு எங்கும் நடந்ததில்லை என்பதையோ ஆரிய சிங்களக்க்கூட்டமைப்பு ஏன் உணர மறுக்கிறது. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் ஒரு சிறுபங்கினரின் கருத்தை வைத்தே முடிவு செய்யலாம்.

இந்திய வல்லாதிக்கம் தனது ஈழத்தமிழர்கள் மீதான பிடியை இறுக வைத்திருந்த 1980களின் இருபதிற்கு மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் 1990களில் தமிழர்கள் இந்திய ஆதிக்கத்தில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். சென்ற பாராளமன்றத் தேர்தலில் தமிழர்கள் ஒன்றுபட்டுத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கீழ் வெற்றி பெற்றது ஆரிய சிங்களக் கூட்டமைப்பை மிகவும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்திய ஆதிக்கம் ஈழத் தமிழர்கள் மீது மீண்டும் இறுகிவருகிறது என்பதற்கு வடகிழக்கு இலங்கையில் உள்ள 27 பாராளமன்ற ஆசானங்களுக்கு 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது நல்ல ஆதாரம்.

பிரித்தானிய அரசியல்வாதிகளின் கருத்து மாற்றம்
பெப்ரவரி 24-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றத்தில் உலகத் தமிழர் பேரவை அங்குரார்பணம் செய்து வைக்கப் பட்டதும் அதற்கு பிரித்தானியப் பிரதமர் வருகைதந்ததும் பிரித்தானியத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சியடையக்குடிய செய்தி. இதை ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் கொச்சைப் படுத்தத் தவறவில்லை. இது பிரித்தானியப் பொதுத் தேர்தலுக்கு முன்னோடியான ஒரு நிகழ்வாக வர்ணிக்க முயல்கின்றனர். உலகத் தமிழர் பேரவையுடன் ஒத்துழைக்க அமெரிகாவும் தயார் என்று கூறுவதை அமெரிக்கவின் எந்தத் தேர்தலுடன் இவர்கள் சம்பந்தப் படுத்தப் போகிறார்கள்? பிரித்தனியாவில் தமிழர்கள் "வீதியில் வெறுமனே கொடி பிடித்து நின்றபடியால்தான்" தமிழர்களின் பலத்தையும் திடசங்கற்பத்தையும் புரிந்து கொண்டு பிரித்தானிய அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். இது ஒரு அரச கொள்கை மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் பணி இப்போது புலம் பெயர்ந்த தமிழர்கள் முன் இருக்கிறது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழர்களின் நிலை உணராமல் செயற்படுகிறார்கள் என்றும் இலங்கையில் இருந்துகொண்டும் இந்தியாவின் கொடுமைகளையோ சதிகளையோ உணராத அறிவாளிகள் புலம்புகிறார்கள். பிரித்தானியாவில் பல நாட்டினரும் வாழ்கிறார்கள் அவர்களில் ஈழத்தவர்கள் மட்டுமே பழைய மாணவர்கள் சங்கங்கள் தமது ஊருக்கான நலன் புரி அமைப்புக்கள் அமைத்து தாய் நாட்டுக்குச் சேவை செய்கிறார்கள். இதைப் பார்த்து மற்ற நாட்டு மக்கள் வியப்பதுண்டு. ஈழத் தமிழர்கள் இப்போது அடக்கு முறைக்கு உட்பட்டு இருப்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் நன்கு உணர்வர். ஆரிய சிங்களக் கூட்டமைப்பு அவர்களை வாயில்லாப் பூச்சிகளாககியதையும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அறிவர்.

இலங்கையின் "ஜனநாயகம்" பற்றி 1981இல் நடந்த மாவட்ட சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். 1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. இது ஜனநாயக வழியில் தமிழர்கள் பிரச்சனை எப்படி சிங்களவர்கள் தீர்ப்பர் என்பதற்கு கிடைத்த முதல் எடுத்துக்காட்டு.
மாவட்டசபை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் மாகாணசபை முறை இந்திய நிர்பந்தத்துடன் 1987இல் அறிமுகப் படுத்தப் பட்டது. இலங்கையில் ஆயுதக் தமிழ்ப் போராளிகள் பலமான நிலையில் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் செய்யும் வல்லமை பெற்றிருந்த வேளையில், இந்தியாவின் பலமானஅழுத்தம் ஜேஆர் ஜயவர்த்தனே கைகளில் பாராளமன்ற உறுப்பினர்களின் தேதியிடப்படாத பதவி விலகல் கடிதம் ஆகியவை இருந்ததால் ஜே ஆர் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டார் தமிழர்களுக்கு மகாணசபைமூலம் ஒரு அதிகாரப் பரவலாக்கம் செய்வதென்று. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல் தமிழ்பிரதேசங்களில் 2008வரை நடத்தப் படவில்லை. 2008 இல் தமிழர் மாகாணம் துண்டாடப் பட்டு கிழக்கு மாகாணசபைக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இன்னும் இந்தியாவால் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று பிரச்சாரம் செய்கின்றனர் இந்தியக் கைக்கூலிகள். இலங்கைப் பாராளமன்றத்துக்குள் தமிழர்களுக்கு சாதகமான எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் படமாட்டது என்று ஏன் உணராமல் இந்த இந்தியக் கைக்கூலிகள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் போதிக்கிறார்கள். இந்தியா இல்லாமல் தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது என்று தமிழர்களை மிரட்டுவத்ற்கு இந்தக் கைகூலிகள் இந்திய உளவுத்துறைக்கு உதவுகிறார்கள்.

கிழக்குக்கிற்கு காவல்துறை அதிகாரமும் காணி அதிகாரமும் இல்லாத மாகாணசபையும் வடக்கிற்கு காவல் துறை அதிகாரம் இல்லாத மாகாணசபையும் கொடுக்கப் போவதாக் மஹிந்த சொல்கிறார். காவல் துறை இல்லாத மாகாணசபை அரசு எதைச் சாதிக்கும் என்பதை இந்தியக் கைக்கூலிகள் கூறுவார்களா?

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலை யமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக் கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மேற் குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கு வதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ் சாட்டுகிறாரே அது எப்படிச் சாத்தியமானது? புலம் பெயர்ந்த தமிழர்கள் வெறுமனவே மேற்குலக வீதிகளில் கொடிபிடித்து நின்றதால்தானே.

வெளி உலகு தமக்கு எதிராகவே செயற்படுகின்றது என்று சிங்களவர்கள்
ஆதாரங்களுடன் நம்புகின்றார்கள். சிறிலங்கா எழுத்தாளர் ஒருவர் இதனை
“சிறுபான்மைத் தாழ்வு மனப்பான்மையுடனான ஒரு பெரும்பான்மை இனம்” என
எழுதியுள்ளார் அமெரிக்காவின் மிகப் பழமை வாய்ந்த The Nation
ஏட்டின் ஐ. நா. வுக்கான செய்தியாளரும், New York Times ஏட்டின்
ஐ.நா.வுக்கான ஆசியச் செய்திப்பிரிவி்ன் முன்னாள் தலைமையாளருமான Barbara
Crossette.
இது எண்ணம் எப்படி உருவானது?
துரோகிகள் தலை தூக்கும் போது வன்முறையும் தலைதூக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...