
சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
தப்பிக்கும் தப்புக்கள்
மருத்துவ மனைகள்மேல் குண்டுகள்
மருத்துவர்கள் கைதுகள்
தண்ணீருக்கும் தடைகள்
மறைந்து போன உண்மைகள்
இனப் பிரச்சனைத் தீர்வும்
அதிகாரப் பரவலாக்கமும்
இணைந்து கொண்டன
காணாமற் போனோர் பட்டியலில்
மோதலுக்குப் பின் தேர்தல்
தேர்தலுக்குப் பின்னும் முன்னும் பிளவுகள்
ஒற்றுமையை வலியுறுத்திப் பிரிந்தனர்
முதுகெலும்பிழந்த அரசியல்வாதிகள்
தெளிந்து நிற்பர் மக்கள்
துணிந்து மீண்டும் எழுவர்
தேவை அவர்களுக்கு
ஒரு மூச்சு விடும் இடைவெளி
2 comments:
கடைசி வரியில் மனம் கணக்கிறது ....
awesome!
Post a Comment