Tuesday, 26 January 2010

இது ஒரு இனிய தேர்தல்


இது ஒரு இனிய தேர்தல்
இப்படி எங்குதான் நடக்கும்

கூடிநின்று கொக்கரித்து
நாம் ஆண்ட பூமியை
நாம் மாண்ட பூமியாய் ஆக்கியோர்
எதிரெதிர் அணியில் அடிபடுகின்றனர் - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒன்று என்று தான் நடக்கும்.

எக்காலமும் இனிநாம் தலைதூக்க முடியாதென்று
எக்காளமிட்ட பேய்கள் முட்டி மோதி
முக்காலமும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்ளும் - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒன்றிற்கு எத்தனை நாள் பார்த்திருந்தோம்.

வாழை இலைக்கு மேல் விருந்துமில்லை
வாழை இலைக்குக் கீழ் காசுமில்லை - எம்
வாழ்வை அழித்த நாய்கள் குரைத்துக் குதறுகின்றன - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
எம்மினம் என்றும் அறியாத் தேர்தல்.

நாமிங்கு ஒரு மூலையில் வாழலாம்
ஒரு நாளும் நாமிங்கு ஆளமுடியாதென்றோன்
தனக்கே வாக்களிக்க் வக்கத்து நிற்கின்றான் -அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இதைப் பார்த்து இரசிக்க யாருக்கு கிடைக்கும்.

எம் வீடுகள் கொழுத்திய கொடியோ
எம் குழந்தைகள் கொன்ற தீயோர்
எம் குமரிகள் கெடுத்த கயவர்
ஈரணி நின்றெனி அடிபடுவர் - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒன்று யார்தான் காண்பர்

யார் வென்றாலும் அவன் எம் முதல் எதிரி
யார் தோற்றாலும் அவனைப் பார்த்து நகைப்போம்
எம் வழி என்றும் தனி வழி எம் தலைவன் காட்டிய வழி - அதனால்
இது ஒரு இனிய தேர்தல்
இப்படி ஒரு தேர்தல் யார்தான் அறிவார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...