Friday, 29 January 2010

தமிழர் தாயகத்தை வரைந்த தேர்தல் முடிவுகள்





















.



உலக வரைபடத்தை முதல் வரைந்த அறிஞர் தாலமி இலங்கையில்தமிழர்கள் வாழும் பகுதியை தனியாகக் காட்டினார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி வேறு வேறு காலங்களில் வேறு வேறு விதமாக அமைந்திருந்தது.

தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இலங்கையில் வேண்டும் என்று போராடியவர்கள் தங்கள் தாயகதை வரைபடமாக வரைய பெரு முயற்ச்சி எடுத்தனர். அதையொட்டி பலவாதப் பிரதி வாதங்களும் எழுந்தன. அந்த வரைபடம் வெளிவந்தவுடன் பல தமிழர்ககூட ஆச்சரியப் பட்டனர். உங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களா என்று அதிசயித்தனர். அந்த வரைபடம் சிங்களவர்களை ஆத்திரமூட்டியது. இலங்கையின் கடல் வளத்தில் மூன்றில் இரு பகுதி தமிழர்களுடையாதா என்று சினமுற்றனர்.

ஆனால் நடந்து முடிந்த இலங்கைக் குடியரசிற்கான தேர்தல் முடிவுகள் தமிழர் தாயகத்தை வரைந்து கொடுத்துள்ளது. இலங்கைத் தேர்தல் முடிவுகளை (மஹிந்த ராஜபக்ச வென்ற இடம், மஹிந்த ராஜபக்சவிற்கு அடிவிழுந்த இடம்)அடிப்படையாகக் கொண்டு பிரதீப் ஜயக்கொடி என்பவர் வரைந்த வரைபடம் இதைக் காட்டுகிறது. சில வித்தியாசங்கள் இருந்தாலும்(புத்தளம் சிலாபம்) சுயநிர்ணய உரிமை இல்லாத் தமிழர் தாயகம் தன்னாட்சி வேண்டி நிற்கிறது.

தொடர்புடைய பதிவு: மஹிந்த வெற்றியின் பின்னணியும் பின் விளைவுகளும்.

5 comments:

Anonymous said...

ஆமாம். புத்தளம் சிலாபத்தையும் கேட்டது தவறு என்று இம்முடிவுகள் நிரூபிக்கின்றன. நல்லது.

Anonymous said...

புத்தளம் சிலாபம் கேட்டது தவறு என்றால் மலையகத்தையும் இணைக்காததும் தவ்றோ?

Yoga said...

புத்த பெருமானே அமைதி ந்தேடிஏ_9 யாழ்_கண்டி நெடுஞ்சாலைக் கரையோரம் அமைதி தேடி வந்திருக்கிறாராம்!

ndhaya26 said...

tamilana thiruththavum mudeyathu avana thirunthavum maddan nalla thalaivankaloda sernthu nadakkavum maddan athuthan oddu poddum thothuthan, evana puththan thirummba vanthakuda thirutha mudeyathu thirunthunkada tamil maddayankala.......

Anonymous said...

Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...