Sunday, 24 January 2010

தமிழர்கள் பிச்சாண்டிகளா? அரசை உருவாக்குபவர்களா?


சென்ற ஆண்டு மே மாதத்திற்கு பிறகு இந்திய விற்பன்னர்கள் தமிழர்கள்மீது அநுதாபம் காட்டுவது போல் தமிழர்களைப் பற்றி கேவலமாக எழுதி வந்தனர். இனித் தமிழர்கள் பிச்சாண்டிகள் என்பது போலும் எழுதினர். It is Hobson’s Choice for Tamils என்று ஒரு கட்டுரையை கேணல் ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார். ஹொப்சன் என்னும் குதிரை வாடகைக்கு விடும் ஆங்கிலேயர் தனது ஒரு குதிரையை மட்டும் எல்லோரும் வாடகைக்கு கேட்பதால் தான் கொடுக்கும் குதிரையை மட்டுமே வாடகைக்கு பெறவேண்டும் அல்லது ஒரு குதிரையும் கிடைக்காது என்று நிபந்தனையை விதித்தாராம். அதாவது தமிழர்கள் முன் உள்ள ஒரே தெரிவு சிங்களவர்கள் கொடுப்பதைப் பெறுங்கள். அந்தளவு பிச்சாண்டிகள் தமிழர்கள். அல்லது உங்களுக்கு எதுவுமில்லை என்று ஹரிஹரன் எழுதி தமிழர்களைக் கேவலப் படுத்தினார்.

இன்று தமிழர்களிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை பலரும் உணர்கின்றனர். நடக்கவிருக்கும் இலங்கைக் குடியரசுத் தேர்தலில் தமிழர்களை அரசை உருவாக்குபவர்கள்(king makers) என்று பிரித்தானியப் பத்திரிகைகளான Guardian, Daily Telegraph, Times ஆகிய பத்திரிகைகள் எழுதின. இந்தியப் பத்திரிகைகள் தமிழர்கள் தேர்தலில் தீர்மானிக்கும் காரணிகளாக அமைந்ததில் பொறாமை கொண்டு நிற்கின்றன.

ஒழுங்காக இலங்கை குடியரசுத் தேர்தல் நடை பெற்றால் தமிழர்களின் வாக்குகளே வெற்றியை நிச்சயிக்கும்.

சிங்களவர்களும் சும்மா இருக்கவில்லை. முன்பு தமிழர்களுக்காக நான் பரிதாபப் படுகிறேன் என்று இந்திய ஊடகம் ஒன்றில் ஒரு சிங்களவர் எழுதினார். இன்று சிங்களப் பத்திரிகைகள் என்ன சொல்கின்றன? The Surprising power of Tamils! என்று சண்டே லீடர் பத்திரிகை இன்று எழுதுகிறது. தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதில் சரத் பொன்சேக்காவும் அவர் பின்னால் உள்ள மேற்குலக சக்திகளும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மஹிந்தவும் தன் அடிவருடிகள் மூலம் தமிழர் வாக்குகளைப் பெறுவதில் ஈடுபட்டுள்ளார்.

சிங்களவர்களின் ஆட்சியாளர்யார் என்பதைத் தீர்மானிப்பதால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. காரணமின்றிச் சிறையில் வைத்திருப்பவர்களை திறந்து விடுதல், தேவையில்லாமல் மூடிய தெருக்களைத் திறந்து விடுதல், சோதனைச் சாவடிகளை அகற்றுதல் போன்றவற்றிற்காக தமிழர்கள் போராடவில்லை. தாயகம் தேசியம் தன்னாட்சி அவை தான் அவர்களது தாரக மந்திரம்.

தமிழர்கள் பிச்சாண்டிகளும் அல்லர். சிங்களவர்களின் அரசை உருவாக்குவதில் அவர்களுக்கு அக்கறை இல்ல. ஆனால் அவர்கள் தம் ஆத்திரத்தை இந்தத் தேர்தலில் காட்டுவார்கள்.

3 comments:

Anonymous said...

neeyellaam eluthum nilai vanthathe intha poraaddam vanthathaalum ,arasu unkalai velinaadu sella anumathiththathaalum than!!tamilarin unmayana pirassanai parri unkalukkellaam ennadaa kavalai,athil kulirkaayum kooddam thaneda neenkalellaam!!tamilanin thalaiyil agathi,anaathai ,emaantha sonakiri enrellaam eluthiyullatho!!

Anonymous said...

மேற்படி பின்னூட்டம் இட்டவரின் தலையில் துரோகி என்று எழுதப்பட்டுள்ளதோ!!!

Anonymous said...

சரியகச் சொன்னீர்கள். முதலாவது பின்னூட்டம் எழுதியவன் தமிழினத்துரோகி என்பது என் கருத்து. போராட்டத்திற்கு மட்டும் வெளிநாடு சென்றவன் அனுப்பும் காசு வேணும். அகதியாய் நின்ற போது, அவன் அனுப்பும் அனைத்தும் வேண்டும். பின்னதாக நாயிலும் கேவலமாய் நன்றி கெட்ட தனமாக பேச எப்படித்தான் மனசு வருகிறதோ?
(டேய், ரெண்டாவதாய் கொமென்ற் போட்டவனே... நீயெல்லாம் எழுதேல எண்டு எந்த நாய்டா அழுதது? பொத்தீற்று போய் உன்ட வேலய பாரு. சிங்களவனுக்கு உடுப்பு தோச்சு, கக்கூஸ் அள்ளி கொடு. தன்மானத் தமிழனாய் வாழப் பழகு. இல்லை, நஞ்சருந்தி, செத்துத் தொலை. நீயெல்லாம் உயிரோட இருந்து யாருக்கு என்ன பயன்?)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...