Saturday, 23 January 2010

ராஜபக்சவிற்கு எதிராகக் குவியும் குற்றச் சாட்டுக்கள்.


இலங்கையில் பௌத்தமதத்தில் மிக உயர்ந்தவராகக் கருதப் படும் கண்டி மல்வத்தை பீடாதிபதி அதிவணக்கத்துக்குரிய திப்பெட்டுவேம ஸ்ரீ சுமங்கள மஹாநயக்க தேரர் அவர்கள் மஹிந்த ராஜபக்சே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

The Mahanayake thera is commenting on the non compliance of the recent Supreme Court order regarding the media coverage during the run up to the presidential elections. A five-member bench chaired by the Chief Justice Asoka de Silva last Friday ordered the state and private media institutions to obey election commissioner's guidelines.

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் செயலாளர் டிரான் அலஸின் வீட்டைப் பார்வையிடுவதற்கு நேரடியாக சென்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா கார்டியன் பத்திரிகையில் எழுதிய நிலாந்த இலங்கமுவ அவர்கள் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் நல்லடையாளத்தை கொலைசெய்கிறார் என்று எழுதியுள்ளார். மஹிந்த ஒழுங்கானதாகவோ அல்லது மோசடியாகவாகவே தேர்தலை நடத்தி வெற்றி பெற்றாலும் அவரால் உருவாக்கப் பட்ட திருடர்கள் தொடர்ந்தும் நாட்டைக் கொள்ளையாடிப்பார்கள் என்று எழுதியுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைத் தேர்தலுக்கு முன்னரான அரசியல்வாதிகள்மீதான தாக்குதல்கள் நிறுத்தப் படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்சவிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றி பெற்றவர் என்று நன்சான்றிதழ் கொடுத்தவர்கள் இப்போதாவது இலங்கையில் நடந்தது ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பயங்ரவாதத்தின் வெற்றி என்பதை உணர்வார்களா?

1 comment:

Yoga said...

கடந்த மே வரை தெரிந்திருக்கா விட்டாலும்,இன்று வரை எல்லாவற்றையும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள்!வல்லரசுக் கனவும்,இலகு கடல் வழி வர்த்தகமும் எல்லாவற்றையும் மறைத்து விட்டதென்பதே உண்மை!மீண்டும் புலம் பெயர்ந்தோர் வீதியில் இறங்கினால் கூட பெரிதாக எதுவும் நடக்காது!ஆட்சி மாறினால்?00000

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...