Wednesday, 20 January 2010
தேர்தல் ஆராவாரத்தில் மறந்ததும் மறைந்ததும்.
(மம கப்பனவா....தேரனவாத: நான் அறுப்பேன் விளங்குதா)
தேர்தல் என்பது எமது ஆவலை மிக மிகக் கவரும். யாருக்கு வாக்களிப்பது? யார் வெல்லுவார்? என்ற வாதப் பிரதிவாதங்கள் எம்மை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும். இலங்கைக் குடியரசுத் தேர்தலில் இம்முறை தமிழர்களுக்கு இன்னும் ஒரு கேள்வியை எழச்செய்தது: யாருக்கு வாக்களிக்கக் கூடாது? மெக்சிக்கோ நாட்டுப் பழமொழி ஒன்று: இரத்தம் சிந்திய இடத்தில் மறதி என்ற மரம் வளராது.(Where blood has been spilt the tree of forgetfullness cannot flourish) எமது ஈழ பூமியில் சிந்திய இரத்தம் வேறு எங்கும் சிந்தியிருக்க முடியாது. குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் எம்மக்கள் சிந்திய இரத்தத்துடன் முடிந்ததா? தொடர்ந்த அவலம். நெருக்கமான இடத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வதைக்கப் பட்டனர் பல இலட்சம் மக்கள். மனித மலம் கலந்த உணவு கொடுத்ததை யார் மறப்பர்? உணவை வீசி சண்டை பிடித்து உண்ணுங்கள் என்று கட்டளையிட்டதை யார் மறப்பர்?
இரண்டு வருடங்கள் முன் கூட்டியே தேர்தல் ஏன் நடக்கிறது? ராஜபக்சேக்களின் புகழ் உச்சிக்குச் சென்றதால் தேர்தல் நடக்கிறது. அவர்கள் புகழ் உச்சிக்கு ஏன் சென்றது? தமிழர்களைப் போரில் தோற்கடித்ததால் நடக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்து அங்கங்கள் இழந்து உடமைகள் இழந்து மானம் இழந்து .... சிங்களம் போரில் வென்றதால் தேர்தல் நடக்கிறது.
மூன்று இலட்சம் மக்களை அடைத்து வைத்தனர். திடீரென திறந்து விட்டனர். இருக்க இடமின்றி கையில் ஏதுமின்றி வெளியில் சென்றவர் என்ன அவலப் படுகின்றனர்? நாம் கவலைப் படவில்லை. அவர்கள் அவலங்கள் தேர்தல் ஆரவாரத்தில் மறைந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்ற பட்டி மன்றத்தில் அவர்களை நாம் மறந்து விட்டோமா? அவர்களின் தற்போதைய நிலை என்ன? எந்த ஊடகமாவது தெரிவிக்கிறதா? எந்த அரசியல்வாதியாவது கவனம் எடுக்கிறார்களா? எந்த நாடாவது கவலைப் படுகிறதா?
பக்கத்து நாட்டின் பட்டமளிப்பு விழாவை எம்நாட்டுப் பிரேதங்கள் மேல் ஏறி நின்று எட்டிப் பார்த்து மகிழ்கிறோமா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment