யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கைக் குடியரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ச அங்கு தமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக நல்ல அறிவிப்புக்களைச் செய்வார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். யாழ் மக்களுக்கு பெரும் தொல்லைகள் கொடுத்து வந்த உயர் பாதுகாப்பு அரண்களை விலக்கி, பாதுகாப்பு வலயத்தைச் சுருக்கி, அப்பிர தேசங்களை நடமாட்டத்துக்குத் திறந்து விடும் பணிகள் நேற்று ஆரம்பமாகுமென நம்பப்பட்ட போதும் அது இடம்பெற வேயில்லை.
கெடுப்பதில்தான் போட்டி கொடுப்பதில் போட்டியில்லை.
சரத் பொன்சேக்கா தமிழ்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளுக்கு போட்டியாக மஹிந்தவும் ஏதாவது சொல்வார் அல்லது செய்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ச தனது பேச்சை ஆரம்பித்தபோது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. எனினும், உயர் பாது காப்பு வலயப் பிரச்சினை குறித்து ஜனா திபதி தமது உரையில் ஒரு சொல் கூடக் குறிப்பிடவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தோ அல்லது அதற்கு அப்பால் செல் வது குறித்தோ ஜனாதிபதி எதையுமே சுட்டிக்காட்டவில்லை.
தமிழ் மக்களின் வாக்குகளில் பெரும்பாலானவை மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக திரும்பிவிட்டதை இப்போது மஹிந்த தரப்பினர் உணர்ந்து விட்டனர். தமிழ் மக்களின் வாக்குகளுக்கு போட்டி போடுவதிலும் பார்க்க சிங்கள வாக்குகளை அதிகரிப்பதில் மஹிந்த தரப்பினர் இறங்கி விட்டனர். சிங்கள வாக்குக்கள் சரிபாதியாகப் பிரிந்து நிற்கின்றன. சிவாஜிலிங்கத்தை களத்தில் இறக்கியது எதிர்பார்த்த அளவு வேலை செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தம்மை மஹிந்த முன்பு புறந்தள்ளியமைக்கு தருணம் பார்த்து மஹிந்தவைப் பழிவாங்கிவிட்டது. இந்தியாவின் உத்தரவின் பேரில் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்த தோட்டாத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவாகத் தாவிவிட்டனர். முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு மஹிந்தவிற்கு இல்லை. இப்போது மஹிந்தவிடம் இருப்பது இரு ஆயுதங்கள்:
1. தமிழினத்துக்கு எதிராக இனவாத நஞ்சைக் கக்குதல்
1970-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அப்போதைய தமிழரசுக் கட்சியின் பிரச்சார பீராங்கியான அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு கருத்தை பலமாக முன்வைத்தார்: "இந்த முறை எந்த சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெல்லப் போவதில்லை. சிங்களக் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு தனது தமிழரசுக் கட்சியையே நாடி வரவேண்டும்."அமிர்தலிங்கத்தின் இந்த உரையை சிறிமாவோ பண்டார நாயக்காவின் சுதந்திரக் கட்சி ஒரு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு நாம் ஒரு தமிழ் கட்சியிலா தங்கியிருக்க வேண்டும்? எமக்கு பெருவாரியாக வாக்களித்து சிங்களவர்களின் மானத்தைக் காப்பற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தது. இந்தமாதிரி பல இனவாத பிரச்சாரங்கள் மூலம் பெரு வெற்றியீட்டியது. இந்தப்பாணியை மஹிந்த இம்முறையைப் பின்பற்றுவார். ஏற்கனவே சில கொழும்புப் பத்திரிகைகள் இம்முறை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழர்களே அரசு உருவாக்குபவர்களாக (King Makers) இருக்கிறார்கள் என்று கூறத் தொடங்கிவிட்டன. இத எந்த ஒரு சிங்களவனும் ஏற்கப் போவதில்லை. அதனால் மஹிந்த:
- தமிழர்களுடன் சரத் இணைது விட்டார்.
- நாடு இரண்டாகப் பிளவு படப் போகிறது.
- மீண்டும் புலிகள் உருவாகப் போகிறார்கள்.
- சிங்கள இராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகப் போகிறது.
- நாடு மீண்டும் ஆபத்தை நோக்குகிறது.
- நாட்டைக் காப்பாற்ற எனக்கு வாக்களியுங்கள்.
2. அமெரிக்க விரோதம்.
சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அமெரிக்க விரோதத்தை மஹிந்த பயன்படுத்துவார்.
- சரத் பொன்சேக்கா ஒரு அமெரிக்க ஆதரவாளர்.
- அவர் நாட்டை அமெரிக்காவிற்கு அடகு வைக்கப் போகிறார்.
- வெளிநாடுகள் சரத்தைப் பாவித்து மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்கப் போகிறார்கள்.
ஐநாவில் இருந்து மஹிந்தவிற்கு எதிராக அழைப்பாணை பெற முயற்ச்சி.
ஐக்கிய நாடுகள் சபைக்ககான இலங்கையில் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹென்ன ஐநாவில் இருந்து மஹிந்தவின் நண்பரான பான் கீ மூன் மூலமாக மஹிந்தவிற்கு எதிராக போர்குற்றம் தொடர்பாக ஒரு அழைப்பாணை பெற முயற்ச்சிப்பதாகப் பேசப் படுகிறது. அந்த அழைப்பாணை மஹிந்த இலங்கையில் பயங்கரவாதிகளை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளை சரத் பொன்சேக்கா காட்டிக் கொடுத்ததால் ஏற்பட்டது என்று சிங்கள மக்களிடம் கூறி வாக்குப் பெறும் முயற்சியில் மஹித தரப்பினர் முயற்ச்சி செய்யலாம்.
1 comment:
யாழ். நகரிலேயே ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.சிங்கள மக்களின் வாக்குகள் சரி பாதியாக இருப்பது உண்மை தான்.ஆனாலும் அவர்களும் தமிழ் மக்கள் போல் தெளிவாக இருப்பதாகவே படுகிறது.அவருடைய(மகிந்தர்)தொகுதியில் இன வாத பேச்சுக்கள் கை கொடுக்கக் கூடும்.தலை நகர்,மலையகம்,வடக்கு,கிழக்கில் சரியாக வராது.மேலும் மகா நாயக்கர்கள் சுருதி மாறியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.பார்ப்போம்.வந்தால் மலை இல்லாவிட்டால்............................................!
Post a Comment