Saturday, 9 January 2010

இலங்கையில் இந்தியாவிற்கு இன்னொரு தளபதி தலையிடி?


இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான பாக்கிஸ்த்தான், மியன்மார், பங்களாதேசம் போன்ற நாடுகளில் அவ்வப்போது இராணுவப் புரட்சிகள் ஏற்பட்டு இராணுவத் தளபதிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதுண்டு. அந்தத் தளபதிகள் எல்லாம் இந்தியாவிற் எதிரானவர்களாகவே இருந்தார்கள்.

இலங்கையில் மட்டும் அரசத் தலைவர்கள் தேர்தல் மூலமாகவே தெரிந்தெடுக்கப் படுவார்கள். தேர்ந்தெடுக்கப் பட்ட இலங்கை அரசத் தலைவர்கள் மற்ற பிராந்திய நாடுகளின் இந்திய விரோதத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவை மிரட்டியும் ஏமாற்றியும் தமது காரியங்களைப் சாதித்துக் கொள்ளுவார்கள். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம், கச்சதீவு தாரை வார்ப்பு, ராஜீவ்காந்தியின் கூலிப்படை, சோனியா காந்தியின் திரைமறைவு கூலிப்படை போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

இப்போது முதல் முறையாக ஒரு இராணுவத் தளபதி ஓய்வு பெற்ற பின் தேர்தல் மூலம் பதவிக்கு வர முயற்ச்சிக்கிறார். இவர் இந்தியாமீது வெறுப்புக் கொண்டவர். பாக்கிஸ்த்தான் சீனா போன்ற இந்திய விரோத நாடுகளிடன் இலங்கை நல்ல உறவைப் பேணவேண்டும் என்று விரும்புபவர். இவர் பதவிக்கு வருவது இந்தியாவிற்கு தலையிடியாக அமையுமா? போர் முடிந்த பின் மஹிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேக்கவும் இருபெரும் நட்சத்திரங்களாக இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் உருவாகினர். இதில் சரத்தை விரும்பாத இந்தியா அவரை ஓரம் கட்ட சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக நம்பப் படுகிறது. அதில் ஒன்றுதான் சரத் ஒரு இராணுவப் புரட்சிக்குத் தயாராகிறார் என்பது. அதில் இருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கும் சரத்திற்கும் இடையில் முறுகல் தோன்றியது. சரத் ஓரம் கட்டப் பட்டார்.

காத்திருந்து காரியம் சாதிக்கும் அமெரிக்கா.
இந்திரா காந்தி இலங்கை தனது பிராந்தியத்திற்கு உட்பட்டது என்றும் அதில் தான்மட்டும் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்றும் மேற்கு நாடுகளிடம் வலியுறுத்தி வந்தார். அதை பேச்சளவில் மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டன. இலங்கையை இந்தியாவின் "பொறுப்பில்" விட்டதால் இந்திய சிவ சங்கரமேனன் நாராயணன் ஆகியோரின் திறமையற்ற செயற்பாட்டால் சீனா இலங்கையின் அம்பந்தோட்டையில் பாரிய துறை முகத்தையும் பெரிய ஆயுதக் கிடங்கையும் உருவாக்கியது. அது மட்டுமல்ல இலங்கயில் போரை இந்தியா நடத்தியவிதமும் ஏற்பட்ட அப்பாவி உயிர் இழப்புகளும் மேற்கு நாடுகளை அதிருப்தி அடைய வைத்தன. இந்நிலையில் தான் அமெரிக்கா ஒரு அதிரடிக் காய் நகர்வுகளை மேற்கொண்டது. அதுதான் சரத் பொன்சேக்காவை போர் குற்றச் சாட்டுகளை வைத்து மிரட்டி தேர்தலில் மஹிந்தவிற்கு எதிராக களமிறக்கியது. தன்னைப் பிடிக்காத சரத் பொன்சேக்கா இலங்கையில் பதவிக்கு வருவதா என்று சிந்தித்த இந்தியா மஹிந்த ராஜபக்சேயை ஆதரிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் திட்டத்தின் உள் நோக்கம் பின்வருவனவாக் இருக்கலாம்:
1. சீன நண்பர்களான ராஜபக்சவை அகற்றுதல்
2. சரத் பொன்சேக்கா தேர்தலை வென்றபின் அரசியலில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவிற்கு "முடிசூட்டுதல்". சரத் மறுத்தால் அவர்மீது போர் குற்றம் சுமத்துதல்.

இந்த இரண்டும் இந்தியாவிற்கு பாதகமானவை அல்ல. ராஜபக்சேக்கள் இன்னும் ஆற்றைக் கடக்கவில்லை அதானால் இந்தியாவுடன் அண்ணன் முறை கொண்டாடுகிறார்கள். ஆற்றைக் கடந்தபின் இந்தியாவை யார் நீ என்று கேட்பார்கள். ராஜபக்சே சகோதர்கள் சீன சார்பானவர்களே. ராஜபக்சே ராஜீவ் காந்தியின் அட்டூழியப் படை இலங்கையில் இருந்த வேளையில் இந்தியாவிற்கு எதிராக நஞ்சு கக்கியவர். காணொளிகாண இங்கு சொடுக்கவும்
ஆகக் குறைந்தது மஹிந்தவின் தோல்வி இலங்கையில் சீன ஆதிகத்தைக் குறைக்கும் என்பதை அறிந்து கொள்ளவும். இலங்கையை சீனாவுடன் பங்கு போட இந்தியா விரும்புகிறதா அல்லது சீனாவை அகற்ற விரும்புகிறதா?

4 comments:

Yoga said...

இப்போதைய சூழ் நிலையில் இலங்கையை பங்கு போடவே இந்தியா விரும்புகிறது போல் தெரிகிறது.அமெரிக்காவின் காய் நகர்த்தலை அவர்கள் புரிந்து கொண்டிருப்பது போலவே படுகிறது.போர்க் குற்ற விசாரணைகள் பற்றிய கதைகள் தற்போது விசுவரூபம் எடுத்திருப்பதன் காரணத்தையும் சற்று ஆழ நோக்கினால்,அமெரிக்கா எங்கே போகிறது? நாம் எப் பாதையால் போகலாம் என்றே இந்தியா வழி தேடுவது தெரிகிறது.கொலை செய்தவனுக்கு மட்டுமல்ல,உதவியவனுக்கும் தண்டனை சட்டத்தில் உண்டுதானே?மகிந்தர் வீட்டுக்குப் போவார் என்பது புரிந்து விட்டதால் சீனாவுடன் இலங்கையை பங்கு போடுவதே இறுதித் தெரிவாக இருக்கும்.ஆனால் உலகப் பொலிஸ்காரன் சும்மா விடுவானா?

pandiyan-tamilnadu said...

கவிஞர் வேல்தர்மா.. தமிழினத்தின் முதல் எதிரி இந்தி யாவே என்பதல் அனைத்து தமிழர்களும் உறுதியாக இருக்கவேண்டும்.. சிங்களவன் கூட இரண்டாம் பட்சம் தான்.. முதல் எதிரியை வீழ்த்துவது சாதாரணமானதல்ல.. இவர்கள் நேருக்கு நேர் சண்டையிடுபவர்களும் அல்ல.. மிகபெரிய மக்கள் சந்தை..ஆட்டு மந்தை கூட்டத்தை வைத்திருப்பவர்கள் .. பொருளாதார நலன்களுக்காக அனைத்து நாடுகளும் இன்று இவர்களுக்காக தலையாட்டு கின்றனர்.. இந்த ஆட்டு மந்தை கூட்டதை உடைப்பதே ஈழத்தவருக்கு இன்று இருக்கும் முதல் கடமை... இந்த கூட்டம் உடைக்கபட்டால் ஈழம் நாளையோ அல்லது மறுதினமோ கிடைக்கும்.. அர்த்த சாஸ்திரத்தை படைத்த பார்பனிய கும்பல்களிடம் எளிய தமிழினம் மோதுவது சிறிது கடினமான காரியமே.. ஆனாலும் தளர்வடைய கூடாது... ஜனநாயக வழியில் போராடினால் மேற்குலகில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.. பாலஸ்தீனத்தில் ஒன்று என்றால் இந்தோனிசியாவில் கண்டன குரல் எழுகிறது..அதே போல் இந்தியாவில் ஒடுக்கபடும் காஸ்மீர்.. நாகா.. தமிழ்நாடு போன்ற இனமக்களின் விடுதலை குரலுக்காக ஈழத்தவர் களமிறங்க வேண்டும்.. எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானவது? அவரை கொடியாவது சொறை கொடியாவது.. துணிந்து களம் இறங்குங்கள்.. அப்போதுதான் இவர்களை செருப்பால் அடித்த மாதிரி இருக்கும்..

Anonymous said...

தமிழினத்தின் முதல் எதிரி பார்ப்பனீயம்.அந்தப் பார்ப்பனீயத்தின் நரித்தனத்தைப் புரிந்து கொள்ளாதவரை த்மிழினம் விடுதலை பெற முடியாது.
இந்தியாவை ஆட்டிப் படைப்பது பார்ப்பனீயம்.உலகத் தமிழர்கள் பார்ப்பனீயத்தைத் தோலுரித்து ஒதுக்க வேண்டும்.
கடவுளை நம்புங்கள் ஆனால் நடுவே இந்த மாமாக்கள் எதற்கு?
பார்ப்பனீய நரசிம்ம ராம், நாரவாயன்,சிவ சங்கர நாய்,சோமாரி,தினமலம் இவற்றை தமிழன் ஒதுக்கி உலகெங்கும் பார்ப்பனீயத்திலிருந்து விடு பட வேண்டும்.
உலக அரங்கிலே தமிழீழத்திற்கு வழி வகுப்போம்,இந்த நரிகளை ஒழிப்போம்.

Selvarani said...

வணக்கம் வேல் தர்மா உங்களின் படைப்புகள்யாவும் மிக அருமையாக உள்ளன. உங்களின் நீண்ட நாள் வாசகி என்பதால் உங்களிடம் ஒரு உதவி -உங்களின் படைப்புகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளவும். பகிர்ந்து கொள்ள usertamil.fortamilseithekal@blogger.com இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கவும்..நீங்கள்
அனுப்பும் செய்தி அல்லது கட்டுரைக்கு தொடர்பான படத்தையும் இணைத்து அனுப்பி
வைக்கவும்.நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது கட்டுரையின் கீழ் உங்களின்
புனை பெயர் அல்லது உங்களின் பதிவுதளத்தின் பெயர் குறிப்பிடவும் நாங்கள்
உங்களின் பதிவை வெளியிடும் போது இவையுடன் சேர்த்து வெளியிடுவோம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...