Tuesday, 27 October 2009

தலையிடியாகிய கருணா


இலங்கை அரசின் இன ஒழிப்புப் போரில் உறுதுணயாக இருந்த கருணா இப்போது தலையிடியாக மாறியுள்ளார். இலங்கை அரசிற்கு எதிராக வைக்கப் படும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களில் கருணாவும் முக்கிய இடம் வகிக்கிறார். கருணா வயதில் குறைந்த பிள்ளைகளைத் தனது இயக்கத்தின் ஆயுத நடவடிக்கைகளுக்காக இணைத்தார் என்பது இப்போது மறுக்கப் படமுடியாத உண்மை. கருணா யூனிசெவ்வுடன்(UNICEF) கையொப்பமிட்டு செய்து கொண்ட பிள்ளைகளை சேர்ப்பது சம்பந்தமான உடன்பாடு இதற்கு அத்தாட்சியாக இருக்கிறது. கருணா அரசின் அமைச்சர்களில் ஒருவர். ஆளும் கட்சியின் உபதலைவர். இதன்படி இலங்கை அரசிற்கும் பிள்ளைகளைப் படை நடவடிக்கைகளில் இணைப்பதற்கும் பங்குண்டு. அது மட்டுமல்ல கருணாவின் இந்த சட்ட விரோத செயல்களுக்கு எதிராக இலங்கை அரசு எந்த நடவைக்கையும் எடுக்கவில்லை. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல மனித உரிமை அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக வைக்கும் குற்றச் சாட்டில் உள்ளடக்கப் படுகின்றன.

இலங்கை அரசு தனது படைத்துறையில் இருந்து தப்பி ஓடி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவைக்கைகள் எடுக்கும் போது பயங்கரவாதி கருணாவிற்கு மந்திரிப் பதவி இவர்களுக்கு எதிராக நடவடிக்கையா என சிங்களத் தேசியவாதிகள் குரல் எழுப்புகின்றனர்.

இலங்கையின் கூட்டுப் படைத் தலைம அதிகாரி சரத் பொன்சேகாவிற்கு விளையாட்டுத் துறை அமச்சு செயலர் பதவி வழங்கப் பட்டபோது எதிர் கட்சியினர் கருணாவிற்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவிற்கு செயலர் பதவியா என்று குரல் எழுப்பினர்.

அண்மையில் இலங்கைக்கு சென்ற இந்தியப் பாராளமன்றக் குழுவின் கிழக்கு மாகாணப் பயணம் திடீர் என இரத்துச் செய்யப் பட்டமைக்குக் கருணா-பிள்ளையான் மோதல்தான் காரணம்.

ஆக மொத்தத்தில் கருணா இப்போது இலங்கை அரசிற்கு ஒரு தலையிடி.
மொத்தத்தில்

4 comments:

ஈழவன் said...

இருபது வருடமாக அண்ணை அண்ணை என்று உருகியவன் அவருக்கே துரோகம் செய்துவிட்டான்

இப்போ ஒருத்தர் மல்லி மல்லி என்கிறார் அவருக்கு எப்போ ஆப்போ தெரியாது

senthu said...

17 வருடமா சாப்பிட்ட கோப்பைக்குள் மலம் களித்தவன் இந்த கோப்பைக்குள் என்னென்ன களிக்கிரானோ தெரியல

Anonymous said...

இதெற்கெல்லாம் காரணம் ............தமிழீழ தேசிய தலைமையும் அல்ல கருணாவும் அல்ல ...அந்த தலைமையின் கீழிருந்த ஒரு சிலராலும் ,..யாழ்ப்பணியமும்தான் ....பாதிக்கபட்ட கருணா உங்க யாழ்ப்பணியத்தால் கசங்கி இருந்தவர்களை தனக்கு சாதமாக பயன்படுத்தி ஈர்த்ததால்...போராட்டம் ஆள்பலத்தாலும் ..ரகசியங்களை இழந்ததாலும் வீழ்ச்சியை எட்டியது....... யாழ்ப்பாணியமே தோல்விக்கு காரணம்.

வெத்து வேட்டு said...

if Karuna didn't defect... there would have been Batticolo/Trinco camps estabilished too..Karuna made a wisechoice (may be that is what could have made him to change his mind :) )

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...