Wednesday, 7 October 2009
தமிழர்களை தனிமைப் படுத்திய இந்தியா தனிமைப் படுகிறது.
இலங்கைத் தமிழர்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு "ரவுண்டு கட்டித்" தாக்கியது.
இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் ஆளும் குடும்பத்தினதும் ஆதிக்கச் சாதியினரதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.
இதை நான் சொல்லவில்லை. இந்தியாவின் முன்னாள் படை அதிகாரி ஆர். கரிகாலன் சொல்லுவது இது:
How much of a worry is it for India that China is investing in these ports(around India in tha name of "string of pearl")?
While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilising to its strategic security, introduced in its area of influence. And Hambantota in Sri Lanka is one such case. Unfortunately, our political decision making process on strategic issues is often influenced more by concerns other than national strategic security. India can develop Trincomalee on eastern coast of Sri Lanka as major commercial pub for Indian Ocean traffic. This would balance Chinese influence. But we seem to be lethargic in acting on such issues and we will pay the price when the time comes.
இந்தியத் தலைமையின் தீர்மானம் எடுக்கும் முறைமை தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் வேறு விடயங்களை கருத்தில் கொள்கிறதாம். அது என்ன வேறுவிடயங்கள்? குடும்ப நலன், கட்சி நலன், அதிகாரிகளின் ஊழல், முக்கிய அதிகாரிகள் தமது சாதி நலன்களைப் பேணுதல்....இவற்றைத்தவிர வேறு உண்டா?
இந்தியாவைச் சுற்றிவர சீனா கட்டும் துறை முகங்கள் சீனா இந்தியாவிற்குப் போடும் சுருக்குக் கயிறு என பல இராணுவ வல்லுனர்கள் கூறினர். ஆனால் இந்திய அதிகாரிகள் அவை வெறும் வர்த்தகத் துறைமுகங்களே என்று கூறுகின்றனர். ஆனால் இராணுவ வல்லுனர்கள் அவை வர்த்தகத் துறை முகங்கள் என்ற போர்வையில் உள்ளன என்றும் அவை தேவை ஏற்படும் கட்டத்தில் இராணுவ நிலைகளாக மாற்றப் படக்கூடியன என்கின்றனர்.
ஒபாமாவின் அமெரிக்கா.
பராக் ஒபாமா தேர்தலில் போட்டியிடும் போது தன்னை ஒரு இந்திய விசுவாசியாகக் காட்டிக் கொண்டார். அவர் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுகக் கூடும் என்று கூட எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் அமெரிக்கக் கொள்கைவகுப்பாளர்களோ இராணுவ வல்லுனர்களே அமெரிக்க் இராணுவ வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டு வேறுவிதமாகச் செயற்படுகின்றனர். பராம் ஒபாமாவும் அதையே ஏற்றுக்கொண்டு செயற்படுகிறார். அமெரிக்காவின் தற்போதைய கருத்துப் படி இந்திய ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாதவர்கள். இதற்கான காரணம்: குடும்பம், கட்சி, கூட்டணி, சாதிவெறி பிடித்த அதிகாரிகள் என்ற சிக்கலுக்குள் இந்தியாவின் அதிகாரம் சிக்குண்டிருக்கின்றது. இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்தத்தை சிக்கலாக்கியது இந்த சிக்கலான கட்டமைப்பே என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது. அதனால் இந்தியாவை நம்பி சீனாவையோ பாக்கிஸ்த்தானையோ பகைத்துக் கொள்ள அமெரிக்கா தயாரில்லை. பல அமெரிக்காவின் இராணுவ பொருளாதார வல்லுனர்கள் அமெரிக்கவிற்கு போட்டியாக வளரும் சீனாவுடன் முரண்பட்டு மோதுவதிலும் பார்க்க சீனாவின் பங்காளனாக அமெரிக்கா செயற்பட்டு சீனாவைச் சுரண்டுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசமும் அமெரிக்காவும்.
அருணாச்சலப் பிரதேசம் இந்திய சீனப் பிணக்கின் உச்சப் பிரச்சனையாக மாறிவருகிறது. இதை மையாமாகக் கொண்டு ஒரு போர் மூளலாம். இதில் அமெரிக்கா தான் நடுநிலை வகிக்கப் போவதாக அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்து விட்டதாம். இரசியாவும் சீனாவுடன் நட்புறவைப் பேணி தனது கிழக்குப் பிராந்திய நாடுகளில் (முந்தைய சோவியத் ஒன்றிய நாடுகள்) அமெரிக்கா காலூன்றாமல் தடுப்பதற்கு முயல்கிறது. இன்நிலையில் இரசியா இந்தியாவிற்கு கைகொடுக்கும் நிலையில் இல்லை.
பாக்கிஸ்த்தானிய அணு ஆயுதங்கள் அங்குள்ள தீவிரவாதிகளின் கைகளுக்கு மாறுமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவிற்கு எதிராகப் பவிக்கப் படுமா? அடுத்து ஈரான் சீனாவுடன் தனது உறவை வலுப் படுத்திக் கொண்டு போகிறது.ஆக் மொத்தத்தில் இந்தியா தனிமைப் படுத்தப் படுகிறது.
தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர்களிலும் பார்க்க டெல்லியில் உள்ள சிங்களவர்களின் தூதுவராலயத்தில் உள்ள பூந்தொட்டிகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேறு என்ன நடக்கும்?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
5 comments:
நண்பர் சந்திரஹாசன் இது பற்றித் தெரிவித்த கருத்து:
நிச்சயம் இந்தியாவின் சிதறலை இந்தியாவால் தடுக்க முடியாது அண்மைய நகர்வுகள் கஷ்மீர் பிரச்சனையில் 52 அரபுநாடுகள் கஷ்மீரை தனிநாடக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. அது மட்டுமல்லது அதற்கான ஒரு தூதரையம் நியமனம் செயதுள்ளன. சீனா மிகவிரைவாக போர்தொடுக்கும் அபாயம் உள்ளது. "இந்தியாவின் சிதறலில் தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரு வழிபிறக்குமாயின் அதற்காக ஈழத்தமிழீனம் ...........தவறில்லை?????????
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழர்களுக்கும் எதிரான இந்தியாவும் அதன் அருவருடிகளும் இந்தியாவின் சிதறல்களின் மூலமே எமது வலியை அனுபவிப்பார்கள்
அப்போது முள்ளிவாய்காலில் உறங்கும் பிணங்கள் எழுந்து கரகோசம் செய்யும்
China has a plan of splitting india.
இன்ப தேன் வந்து பாயுது நெஞ்யினிலே
-துறவி
தமிழாக அரசியல்வாதிகள் பெரும்பாலனவர்கள் ஒன்று தமிழ எதிரிகள் அல்லது தமிழின துரோகிகள்.
Post a Comment