Saturday, 12 September 2009
திஸ்ஸநாயகத்திற்கு ஏன் இந்த முக்கியத்துவம்
இதுவரை அறிவிக்கப் பட்ட தகவல்களின் படி இலங்கையில் கொல்லப் பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியல்:
2004
1. Aiyathurai A. Nadesan – Journalist / 31 May
2. Kandaswamy Aiyer Balanadaraj – Writer / 16 August
3. Lanka Jayasundera – Photo journalist / 11 December
2005
4. Dharmaratnam Sivaram – Editor / 28 April
5. Kannamuttu Arsakumar – Media worker/ 29 June
6. Relangee Selvarajah – Journalist / 12 August
7. D. Selvaratnam – Media worker/ 29 August
8. Yogakumar Krishnapillai – Media Worker / 30 September
9. L. M. Faleel (Netpittimunai Faleel) – Writer / 02 December
10. K. Navaratnam – Media worker / 22 December
2006
11. Subramaniam Suhirtharajan – Journalist / 24 January
12. S. T. Gananathan – Owner / 01 February
13. Bastian George Sagayathas – Media worker / 03 May
14. Rajaratnam Ranjith Kumar – Media worker / 03 May
15. Sampath Lakmal de Silva – Journalist / 02 July
16. Mariadasan Manojanraj – Media worker / 01 August
17. Pathmanathan Vismananthan – Singer and musician / 02 August
18. Sathasivam Baskaran – Media worker / 15 August
19. Sinnathamby Sivamaharajah – Media owner / 20 August
2007
20. S. Raveendran – Media worker / 12 February
21. Subramaniam Ramachandran – Media personnel / 15 February
22. Chandrabose Suthakar – Journalist / 16 April
23. Selvarasah Rajeevarman – Journalist / 29 April
24. Sahadevan Neelakshan – Journalist / 01 August
25. Anthonypillai Sherin Siththiranjan – Media worker / 05 November
26. Vadivel Nimalarajah – Media worker / 17 November
27. Isaivizhi Chempian (Subhajini) - Media worker / 27 November
28. Suresh Limbiyo - Media worker / 27 November
29. T. Tharmalingam - Media worker / 27 November
2008
30. Paranirupesingham Devakumar – Journalist / 28 May
31. Rasmi Mohamad – Journalist / 06 October
2009
32. Lasanntha Wickrematunga - Editor / 08 January
33. Punniyamurthy Sathyamurthy - Journalist / 12 February
34. Sasi Mathan – Media worker / 06 March
இப்போது இலங்கையில் ஊடகவியாலாளர்களைக் கொல்வதிலும் பார்க்க வேறுவிதமாகத் தண்டிப்பது என்ற முடிவு எடுக்கப் பட்டுள்ளது போலிருக்கிறது.
அவசரகால நிலைச் சட்டம், பயங்கர வாதத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றுடன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஒரு அரசால் ஒருவரை பொய்க் குற்றச் சாட்டுகளின் கீழ் தண்டிப்பது இலகுவான காரியம்.
இலங்கயில் சிங்களமும் தமிழிலும் எழுதக்கூடிய ஊடகவியலாளர்கள் குறைவு. அந்த வகையில் திஸ்ஸநாயகம் ஒரு முக்கியமான ஊடகவியலாளர்.
ஆனால் மேல் கூறப் பட்டுள்ள 34 ஊடகவியலாளர்களுக்கும் கொடுக்காத முக்கியத்துவம் திஸ்ஸநாயகம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ஏன்?
இவை மட்டுமல்ல இலங்கையில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் தொழுது கொண்டிருந்த பாரளமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் கொல்லப் பட்டார். மேலும் பல பாராளமன்ற உறுப்பினர்கள் கொல்லப் பட்டனர்.
இவர்கள் கொலைகளுக்கு கொடுக்கப் படாத முக்கியத்துவம் திஸ்ஸநாயகத்திற்கு ஏன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவரை கொடுக்கப் படுவது ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்:
1. திஸ்ஸநாயகம் ஏதாவது மேற்குலக நாட்டின் உளவாளியாக இருக்கலாம். அவரின் குடும்ப செல்வ நிலை இந்தக் கருத்திற்கு வலுச்சேர்பதாக இல்லை.
2. இப்போதைய இலங்கை இருக்கும் பிராந்தியத்தில் நிலவும் பன்னாட்டு போட்டியில் இலங்கைக்கு எதிரான வாதங்களிற்கு வலுச் சேர்ப்பதற்கு திஸ்ஸநாயகத்தின் மீதான தண்டனை சில நாடுகளிற்கு தேவைப் படுகிறது. தெளிவாகச் சொல்வதானால் சீன சார்பாக மாறிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு ஆப்பு வைப்பதற்கான முயற்ச்சிக்கு திஸ்ஸநாயகம் மீதான தண்டனையையும் மேற்கு நாடுகள் பாவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
5 comments:
நீங்கள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். யார் அவரை எப்படிப் பாவித்தாலும் அவர் அவருடைய கடமையை செய்திருக்கிறார். உங்கள் தலைப்பு அவரை இழிவு படுத்துவதைப் போல இருப்பது வருத்தத்திற்குரியது.
ஒரு நல்ல பத்திரிக்கையாளனை, இலங்கை அரசின் தமிழின அழிப்பு போராட்டத்திற்கு எதிராக எழுதிய திஸ்ஸநாயகத்தைப் பற்றி ஒரு முன்னுரை கூட வழங்காமல், அவருக்கு ஏன் முக்கியத்துவம் என்று கேள்வி எழுப்புவது சரியான வாதமாக அமையாது.
இருப்பினும் சொல்கிறேன். மற்ற பத்திரிக்கையாளர் கொலையுறும் போதோ, சிறை வைக்கப்பட்ட போதோ, தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட அநீதிகள் வேறு விதமாக உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. ஆனால், இப்பொழுதோ அங்கிருக்கும் நடுநிலை பத்திரிக்கையாளர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை அளிப்பதன் மூலம், கொஞ்ச நஞ்சம் அங்குள்ள நடுநிலை பத்திரிக்கையாளர்களை உண்மை செய்திகள் வர விடாமல் தடுக்கும் நோக்கத்தில் இலங்கை அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்ல, திஸ்ஸநாயகம் அவர்கள் பத்திரிக்கைத் துறையில் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
There is nothing against Tissa..But it was argued that whether western countries uses the punishment given to Tissa for their own end i.e to counter China's domination...
Only the heading is about Tissanayakam. It is about geo-politics of western nations and srilanka..
என்ன தர்மா நீங்களுமா அந்த பட்டியலில் நம்ப முடியவில்லை ஏனோ தழிர்களுக்கு நண்பராக இருப்பவர்கள் தன்னலத்திற்காக உரு மாறி கொண்டிருக்கின்றார்கள் அந்த பட்டியலில் சம்பந்தருக்கு அடுத்ததாக நீங்களா? வாழ்த்துக்கள்?????????
Post a Comment