Saturday, 5 September 2009
ஈழத் தமிழர் அவலம் - அன்றே பாடினார் பட்டினத்தார்
பட்டினத்தான் அன்று பாடிய அருட்புலம்பல் இன்று ஈழத் தமிழர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்று பாருங்கள்:
சிவசங்கர மேனன் - நாராயணன்
கொள்ளைப் பிறப்பறுக்கக் கொண்டான் குருவடிவம்
கள்ளப் புலனறுக்கக் காரணமாய் வந்தாண்டி
ஆதார மோராறு மைம்பத்தோ ரட்சரமும்
சூதான கோட்டையெல்லாஞ் சுட்டான் துரிசறவே
குருவாகி வந்தானோ? குலமறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உருவழிக்க வந்தானோ?
சிங்களப் படை:
இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி.
கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும்.
என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே
பழி வாங்கிய சோனியா:
முன்னை வினையெல்லா முழுது மறுத்தாண்டி
தன்னை யறியவே தானொருத்தி யானேண்டி.
தமிழினம்:
என்னோ டுடன்பிறந்தா ரெல்லாரும் பட்டார்கள்;
தன்னந் தனியே தனித்திருக்க மாட்டேண்டி.
எல்லாரும் பட்டகள மென்று தொலையுமடி
சொல்லி யழுதாற் றுயரமனெக் காறுமடி. 6
மண்முதலா மைம்பூத மாண்டுவிழக் கண்டேண்டி !
விண்முதலா மைம்பொறிகள் வெந்து விழக் கண்டேண்டி. 7
நீங்காப் புனல்களைந்து நீறாக வெந்ததடி
வாக்காதி ஐவரையும் மாண்டுவிழங் கண்டேண்டி. 8
மனக்கரண மத்தனையும் வகைவகையே பட்டழிய
இனக்கரணத் தோடே யெரிந்துவிழக் கண்டேண்டி
நியாயங்கள் போரில் பொய்த்தன:
ஆத்துமத் தத்துவங்கள் அடுக்கழிய வெந்ததடி !
போற்றும்வகை யெப்படியோ போதமிழந் தானை.
வித்தியா தத்துவங்கள் வெந்துவிழக் கண்டேண்டி !
சுத்தவித்தை ஐந்தினையுஞ் சுட்டான் துரிசறவே.
தமிழர் படை வீழ்ச்சி:
உட்கோட்டைக் குள்ளிருந்தா ரொக்க மடிந்தார்கள்,
அக்கோட்டைக் குள்ளிருந்தா ரறுபதுபேர் பட்டார்கள்.
ஒக்க மடிந்ததடி ! ஊடுருவ வெந்ததடி !
கற்கோட்டை யெல்லாங் கரிக்கோட்டை யாச்சுதடி.
தொண்ணூற் றறுவரையுஞ் சுட்டான் துரிசறிவே
கண்ணேறு பட்டதடி கருவே ரறுத்தாண்டி.
தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !
இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி.
தமிழர் இன்றைய நிலை:
வீட்டி லொருவரில்லை வெட்டவெளி யானேண்டி !
காட்டுக் கெறித்திநிலா கனவாச்சே கண்டதெல்லாம்.
நகையாரோ கண்டவர்கள்? நாட்டுக்குப் பாட்டலவோ?
பகையாரோ கண்டவர்கள்? பார்த்தாருக் கேச்சலவோ?
இந்நிலமை கண்டாண்டி, எங்கு மிருந்தாண்டி !
கன்னி யழித்தாண்டி, கற்பைக் குலைத்தாண்டி.
கற்புக் குலைத்தமையுங் கருவே ரறுத்தமையும்
பொற்புக் குலைத்தமையும், போத மிழந்தமையும்.
என்ன வினைவருமோ? இன்னமெனக் கென்றறியேன்
சொன்ன சொல்லெல்லாம் பலித்ததடி, சோர்வறவே.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
உண்மைதான்
உண்மைதான்
Post a Comment