
பிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 வெளியிட்ட காணொளிக்காட்சிகள் இந்த வருடம் நடந்த இனக் கொலைகளை காட்டுகிறது. இதை சிங்களம் ஏற்கப் போவதில்லை. இது இந்த வருடம் ஆரம்பித்ததுமல்ல 1983இல் ஆரம்பித்ததுமல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நடக்கிறது. 1956இல் தமிழ் குழந்தையை கொதிதாரில் போட்டது எந்த காணொளிக் கருவிகளிலும் பதியப் படவில்லை. சனல்-4 இல் காட்டியதிலும் பார்க்க மோசமான கொலைகள் கொடூரங்கள் சிங்களவரால் மட்டுமல்ல இந்திய அமைதிப் படையாலும் நடத்தப் பட்டது.
1948இல் இருந்து "அபே ஆண்டுவே" (எங்கள் அரசு) மனப்பாங்கு சிங்கள மக்கள் சகலரிடையும் பரவியுள்ளது. மதவாதி சிங்களவன் கம்யூனிசவாதி சிங்களவன் அப்பாவிச் சிங்களவன் படித்த சிங்களவன் என எல்லோரிடையும் இது உண்டு. சிங்கள மக்களுடன் பழகியவர்கள் இதை நன்கு உணர்வர்.
தமிழனைக் கொன்றால் சொர்க்கத்திற்கு செல்வாய் எனப் போதிக்கும் பௌத்தம் சிங்கள பௌத்தம்.
தமிழர்கள் மீது மிகமோசமான வன்முறைகள் 1956இல் இருந்து கட்டவிழ்து விடப்பட்டுவருகிறது. இது முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை. தொடர்ந்து தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப் படுவர்.
இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சில நாடுகள் தமிழினக் கொலைக்கு உதவிக் கொண்டே இருக்கும்.
பல இன மக்கள் வாழும் நாட்டுக்கு சமஷ்டி ஆட்சி சிறந்த முறை என்று லெனின் சொல்லியிருக்க இலங்கையில் சமஷ்டி என்ற வார்த்தையையே கொச்சைப் படுத்தியவர்கள் சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்).
மர்க்சிசத்தை கரைத்துக் குடித்த சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்) அதிகாரம் சிறிதளவு கையில் வந்தவுடன் பேரினவாதிகளாக மாறிவிடுவர் என்பதற்கு என் எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோர் எடுத்துக் காட்டு.
சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற பேரினவாதிகளாக மாறிய பொதுவுடமை வாதிகள் பல பேர்கள்.
80விழுக்காட்டுக்கு மேல் சிங்கள மக்களைக் கொண்ட இலங்கையில் மக்களாட்சி முறைப்படி தமிழர்கள் எதையும் பெறமுடியாது. தமிழர்கள் மேலும் மேலும் ஒடுக்கப் படுகிறார்கள் என்று உணர்ந்து தமிழர்கள் தமது உரிமைகளை ஆயுத போராட்டத்தின் மூலம்தான் பெறமுடியும் என்று முடிவெடுத்தனர் எழுபதுகளில்.
அப்போது தமிழர்கள் மீது மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தமிழர்களின் ஆயுத போராட்டத்தி மேலும் கூர்மைப் படுத்தியது.
ஊருடுவும் கொள்கை(Penetration Policy)
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த எழுபதுகளில் வல்லாதிக்க அரசுகள் மற்ற நாட்டு அரசுகளில் மற்ற நாட்டு அரசு எதிர்ப்பு இயக்கங்களில் ஊருடுவும் கொள்கையை வகுத்துச் செயற்பட்டன. இதனால் தமிழர்களிடை 30 மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் உருவானது. தமிழ் மக்களின் விழிப்புணர்வற்ற தன்மையை பயன்படுத்தி இக்குழுக்கள் யாவும் தமிழர்களின் செல்லப் பிள்ளைகள் ஆயின. "இயக்கப் பெடியங்கள்" என்று அன்பாக அழைக்கப் பட்டு ஆதரிக்கப் பட்டனர். இவர்களை அரசிற்கு காட்டிக் கொடுக்க மக்கள் மறுத்தனர். பொதுவுடமை வாத அறிஞர்கள் தமிழரிடையே ஆயுதப் புரட்சிக்குரிய சூழ்நிலை நிலவுவதாக பறை சாற்றினர். திசைமாறிய கம்யூனிச அரசு ஆட்சி செய்யும் நாடுகள் அவர்களின் கைக்கூலிள் மூலமாக இந்த இயக்கங்கள் எனப் படும் ஆயுதக் குழுக்களிடை ஊருடுவினர். இந்தியாவும் ஊருடுவியது. பல நாடுகள் ஊருடுவின.
சோற்றுப் பார்சல் இயக்கம்
எந்த வெளிச் சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் விடுதலைப் புலி அமைப்பு வளர்ந்தது. மற்ற இயக்கங்கள் விடுதலைப் புலி அமைப்பிற்கு எதிராக செயற் படத் தொடங்கின. விடுதலிப் புலிகளுக்கு பண உதவி செய்வோரைக் கொல்வது கொள்ளை அடிப்பது என்று ஆரம்பித்தன்ர். புளொட் என்ற பெயரில் ஒரு இயக்கம் அதிக ஆளணிகளையும் பணவரவையும் கொண்டிருந்தது. இது தனது உறுப்பினர்களுக்கு எந்த பணக் கொடுப்பனவும் செய்வதில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து பெறுவதன் மூலம் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டும் என்று உறுப்பினர்களைப் பணித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று தமக்கு உணவுப் பொதிகள் வழங்குமாறு கேட்பர். இதனால் இவர்கள் சோற்றுப் பார்சல் இயக்கம் என்றழைகப் பட்டனர். இவர்கள் எந்த ஒரு தடவையாவது இவரகள் வரலாற்றில் ஒரு சிங்களவனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியது கிடையாது. ஆனால் பல விடுதலைப் புலிகளைக் கொன்றிருக்கின்றனர். இவர்கள் செயற்பாடுகள் முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே இருந்தது. இவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எனச் சேர்த்த பணத்தை என்ன செய்தார்களோ?
புலிகளை அழிக்க வளர்த்த இயக்கம்.
இன்னும் ஒரு தமிழீழ விடுதலை அமைப்பை இந்திய சாதிய வெறியர்களின் கைப்பொம்மையான ஒரு உளவு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க உருவாக்கியது. சாதி குறைந்த ஒருவன் தலைமையில் ஒரு தமிழ் விடுதலை அமைப்பு இருக்கக் கூடாது என்பது அந்தச் சாதி வெறியர்களின் நோக்கம்.
திசை மாறிய கம்யூனிச(பொதுவுடமை வாத)
நாடுகளின் கைப்பொம்மைகள்
சில இயக்கங்கள் திசைமாறிய கம்யூனிச நாடுகளின் கைப்பொம்மைகளாக உருவெடுத்தன. இவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செயற்பட்டனர்.
மேற்படிநாடுகளின் கைக்கூலிகள் தமிழீழ விடுதலிப் புலிஅமைப்புக்குள்ளும் ஊருடுவினர். தமிழீழ விடுதலைப் புலிகள் பலமுனையில் எதிரிகளை முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். தம்மை ஒழிக்க முயலும் எதிரிகளுக்கு எதிராக தயவு ஏதுமில்லாமல் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இந்த நடவடிக்கையை மற்ற கையாலாகாத இயக்கங்களும் திசைமாறிய கம்யூனிச நாடிகளின் கைக்கூலிக்ளும் முற்போக்கு என்ற போர்வையைப் போர்திக்கொண்டு புலிப்பாசிசம் என்று புலம்புகின்றர்.
பாசிசம் என்றால் என்ன என்பதோ,
ஆயுதப் புரட்சி என்றால என்ன என்பது பற்றியோ,
ஆயுதப் புரட்சிக்காலத்தில் ஆயுதப் புரட்சி செய்யும் அமைப்பு எப்படிச் செயற்பட வேண்டும் என்பது பற்றியோ,
அறிந்திராத புத்தியில்லா ஜீவிகள் இவர்கள்.
4 comments:
பல முட்டாள்கள் வர்க்கம் என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு தமிழர்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்திக் கொண்டு வருகின்றனர் நெடுங்காலமாக...
வி. பொன்னம்பலம் போன்ற உன்னதமான பொதுவுடமைவாதிகள் 1977-ம் ஆண்டுக் கலவரத்துடன் இனப் பிரச்சனை தொடர்பாக தமது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டனர். நிறையக் பார்பன சாதி வெறியர்களின் கைக்கூலிகள் இன்றும் எமது உரிமைப் போராட்டத்தை முற்போக்குப் போர்வை போர்திக் கொண்டு விமர்சிக்கின்றனர்.
இவர்கள் புத்திஜீவிகள் இல்லை
துரோகிகள் அல்லது முறை மாறி பிறந்தவர்கள் அல்லது வளர்பவர்கள் , வாழ்பவர்கள்
என்பதெ பொருத்தம்
வி. பொன்னம்பலம் போன்ற உன்னதமான பொதுவுடமைவாதிகள் ///
என்ன சொல்ல வாறிங்கள். இவரின் மகன்கள் தான் கனடாவில் நக்குற வேலை பாக்கிறாக்கள். சிங்களவனுக்கும் இந்திய பார்ப்பானுக்கும். தமிழக தமிழர்கள் ஆதரவை பெருக்க வேண்டும் நாம்.
Post a Comment