Thursday, 13 August 2009
தமிழ் தலை(யில்லாத)வர்கள் இன்னமும் இந்தியாவை நம்புகிறார்கள்.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியத் தலைவர்கள் எப்படி நட்ந்து கொண்டனர்?
ஐம்பதுகளில் ஜவகர்லால் நேரு
பிரிந்திருக்கும் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்க முற்பட்டார். ஆ. தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே செய்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார்.
அறுபதுகளில் லால்பகதூர் சாஸ்த்திரி
சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமா பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 நாடற்றவர்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
.
இதை வன்மையாக எதிர்த்தவர் ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வா அவர்கள். அவர் இதை அதிகார அரசியலுக்காக அரை மில்லியன் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டது பன்னாட்டு அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத நடவடிக்கை என விபரித்தார்.
..
ஒருவரை நாடற்றவர் என்று சொல்வது சர்வ தேசச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. நட்ட நடுக்கடலில் செல்லும் ஒரு கப்பலில் ஒரு பிள்ளை பிறந்தால் கூட அது அந்தக் கப்பல் எந்த நாட்டிற்கு அடுத்து செல்கிறதோ அந்த நாட்டின் குடியுரிமை அப்பிள்ளைக்கு உண்டு. உலகத்தில் நாடற்றவர் என்று ஒருவர் இருக்கக் கூடாது என்பதே சர்வதேச நியமம். இப்படியிருக்க 150,000 மக்களை நாடற்றவர்களாக கையொப்பமிட்டவர் காங்கிரசுக் கட்சியின் பிரதம மந்திரி சாஸ்திரி அவர்கள். அவர் செய்த இந்த இனத் துரோகம் தமிழர்களின் வரலாற்றில் மறக்கப் படக் கூடாத ஒன்றாகும்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் இந்திரா காந்தி
இலங்கையை அமெரிக்கப் பிடிக்குள் செல்லவிடாமல் தடுப்பதற்கும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கும் இலங்கையின் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை இந்திராகாந்தி பயன் படுத்தினார். இலங்கைத் தமிழர்களில் அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொண்டார். இலங்கையில் ஒன்றுக்கு ஒன்று போட்டியான ஆயுதக் குழுக்களை வளர அனுமதித்தார். இந்த ஆயுதக் குழுக்களைப் பாவித்து முதலில் இலங்கையை அடிபணியச் செய்வதும் பின்னர் ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் ஏற்படுத்துவதும் அவரது திட்டமாக இருந்தது. அவர் கொல்லப் படாமல் இருந்திருந்தால் இவை நடந்திருக்கும். இன்றும் பலர் இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று பலரும் நம்புகின்றனர். அவர் இறந்த போது சிங்கள இராணுவம் கொண்டாடி மகிழ்ந்தது. தமிழர்கள் கண்ணீர் விட்டனர்.
எண்பதுகளின் பிற்பகுதியில் ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தியும் ஜே ஆர் ஜயவர்த்தனேயும் ஒருவருக்கு ஒருவர் முரண் பட்ட நிலையில் பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை இந்திய சிறப்புத் தூதுவராக இருந்த பார்த்தசாரதியை மாற்றும் படி ஜே ஆர் ராஜிவைப் பணித்தார். அவரும் அப்படியே செய்தார். உலக வரலாற்றில் மிகமோசமான முட்டாள்த் தனம் இது. இன்னொரு கட்டத்தில் ராஜீவ் காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த வேளை பத்திரிகையாளர் ஒருவருக்கு ராஜீவ் கொடுத்த கருத்து ஏற்கனவே அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலர் வெங்கடேசன் அவர்கள் சொன்ன கருத்துடன் முரண்பட்டிருந்தது. அதைப் பத்திரிகையாளர்கள் சுட்டிக் காட்டியபோது அப்படியாயின் நாம் ஒரு புதிய வெளியுறவுச் செயலரை பெறுவோம் என்று ஆணவமாகவும் அரசியல் நாகரீகத்திற்கு முரணாகவும் பதிலளித்தவர் ராஜீவ் காந்தி. இவையாவும் அவரது அரசில் கற்றுக் குட்டித்தனத்தை சுட்டிக் காட்டியது. இதை உணர்ந்த ஜே ஆர் ராஜீவை நாளடைவில் தந்து கைப் பொம்மைஆக்கிக் கொண்டார். விளைவு இந்திய அமைதிப் படை என்றுசொல்லிக் கொண்டு ஒரு அட்டூழியப் படை இலங்கை வந்தது.
எண்ணாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்றொழிக்கப் பட்டனர்.
மூவாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்.
பதினையாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோ வீடிழந்தனர்.
சிங்-சோனியா ஆட்சி
இது தமிழர்களைப் பொறுத்தவரை மிகமோசமான நடவடிக்கைகளை எடுத்தது. இலங்கை அரசிற்கு படைப் பயிற்ச்சி, படைக் கலங்கள், ஆளணிகள் எல்லாம் வழங்கி தென் கிழக்காசியா கண்டிராத மாபெரும் மனித அவலத்தை உண்டு பண்ணியது. தமிழர்களின் ஆயுதபலத்தை மழுங்கடித்தது. இனி தமிழர்கள் இலங்கையில் சிங்களவர்களுக்கு அடங்கி அவர்கள் கொடுப்பதை ஏற்றுக் கொண்டு வாழவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த இப்போது முயல்கிறது.
அதுமட்டுமல்ல தொடர்ந்தும் தமிழ்த்தேசியத்தை இலங்கையிலும் பன்னாட்டு ரீதியிலும் சிதைக்க சிங்களத்துடன் சேர்ந்து செயற்படுகிறது.
இந்நிலையில் இன்னும் தமிழர்களில் சிலர் இந்தியாவை நம்புகின்றனர். இந்தியாவின் மூலமாகத்தான் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.
இந்தியாவின் குடும்ப நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாளர்களும் சாதிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதிகாரிகளைக் கொண்ட கொள்கை வகுப்பாளர்களும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு என்று எதிரானவர்களே என்பதை தமிழ்த் தலைமை இனி உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.
இந்தியாவின் உற்ற நண்பர்கள் நாம்தான்.
இந்தியாவின் நலன்களுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.
இந்தியா எமது நட்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவற்றை மீண்டும் மீண்டும் கூறிவந்த விடுதலை புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது?
அவர்கள் நீட்டிய நட்புக் கரங்களை ஏன் இந்தியா உதறித்தள்ளியது?
அவர்களை அழித்ததுடன் இந்தியா தனது பணியை நிறுத்தியாதா?
உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு இந்தியாதான் முதல் எதிரி என்பதை மனதில் கொண்டு தமிழர்களின் தலைவர்கள் தமது எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
7 comments:
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் அமெரிக்க அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியமைக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமுண்டா?
விரட்ட விரட்ட வாலைக் குழைத்துக் கொண்டு இந்தியாவின் பின் செல்கிறார்களா?
தேவை ஒரு புதிய அணுகு முறை...
1.புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் அமெரிக்க அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் சந்தித்துப் பேசியமை,
2. சீனா சிறிது முயற்சி மேற்கொண்டால்,' கூட்டாட்சி நாடு' என்று பெருமை பேசி வரும் இந்தியாவை 20 அல்லது 30 நாடுகளாக துண்டாட செய்துவிடலாம் என சீனாவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளமை,
தமிழர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் புதிய அணுகு முறைக்கான வாய்புக்கள் உண்டென்பதைக் காட்டுகிறது.
1980களில் ஏற்பட்டது போல் இந்தியா தமிழர்களைத் தேடிவரும் நாள் வரும்...
India is solely responsible for the misery of Tamils in Srilanka...
தமிழ் நாட்டு தமிழர்கள் மற்று இலங்கை தமிழர்களின் உறவுகளை அறியாத இதுபோன்ற வடநாட்டு முட்டாள்களால்தான் இன்றைக்கு ஈழத்தில் உள்ள அனைத்து தமிழினமும் அழிந்துவிட்டது. இப்போது அந்த இடத்தை மலையாள மடையர்கள் பிடித்துக்கொண்டார்கள்.
தமிழர்கள் விசயத்தில் இந்தியாவை இனி ஒருகாலும் நம்பவே கூடாது.
Post a Comment