
tamilspy என்னும் பெயரில் இயங்கும் இணையத்தளம்
இந்த பதிவை திருடிவிட்டது
இந்தியாவின் போலியான மீள் குடியேற்றக் கோரிக்கைகள்
இலங்கையின் இன அழிப்புப் போரின் பின் இடம் பெயர்ந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை ஆறு மாதங்களுக்குள் குடியேற்றாவிடில் இந்தியப் படைகள் இலங்கை வந்து கண்ணிவெடிகளை அகற்றி அவர்களைக் குடியேற்றும் என்று டெல்லி வீராப்பு பேசியது. ஆறுமாதங்களுக்குள் குடியேற்றுவது முடியாத காரியம் என்று இலங்கை அறிவித்தது. இந்தியாவிலிருந்து கண்ணிவெடி அகற்றுதல் என்ற போர்வையில் ஒரு தொகுதி படையினர் இலங்கை வந்தனர். எந்தனை பேர் வந்தனர் என்பதில் முரண்பட்ட செய்திகளே வருகின்றன. 500 படையினர் வந்தனர் என்றும் செய்தி வந்துள்ளது 5000 என்றும் செய்தி வந்துள்ளது. எப்படி இருந்தும் வந்தவர்கள் முதலில் தெரிவித்தது கண்ணிவெடி அகற்ற ஆண்டுக் கணக்கில் நேரம் எடுக்கும் என்பதே. இந்தியப் படையினர் மீண்டும் வந்தது மீண்டும் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவே. ஆறு மாதம் என்று முதலில் இந்தியா கூறியது அப்பட்டமான பொய். இப்போது ஆண்டுக் கணக்கில் என்று சொல்வதும் பொய். படை வல்லுனர்களின் கணிப்பின்படி 25%மான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் இருந்தன. கண்ணிவெடிகள் பரவலாக இருந்திருந்தால் இலங்கைப் படையினரால் இந்தளவு வேகமாக விடுதலை புலிகளின் பிரதேசங்களைக் கைப்பற்றி இருக்க முடியாது. கண்ணிவெடியும் மீள் குடியேற்றத் தாமதமும் இலங்கை இந்தியக் கூட்டுச் சதியே. இந்தியப் படைகள் வந்தது காடுகளில் இன்னும் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்களா என்பதை அறியவா? இருந்தால் அவர்களைத் தேடி அழிக்கவா?
இந்தியாவின் போலியான போர் நிறுத்தக் கோரிக்கைகள்
இலங்கையில் மும்முரமாக இன அழிப்புப் போர் நடந்தபோது இந்தியா பலமுறை போர்நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசிடம் முன் வைத்தது. இலங்கை அரசும் உதாசினம் செய்தது. இது இலங்கை இந்திய உறவைப் பாதிக்கவில்லை. ஏன்? இந்தியா பகிரங்கமாக போலியான போர்நிறுத்தமே கேட்டது. திரை மறைவில் இந்தையாவே போரை நடாத்தியது. சிவ் சங்கர மேனனும் நாராயணனும் இலங்கைக்கு மேற்கொண்டபயணங்கள் யாவும் இந்த அடிப்படையிலேயே நடந்தேறின.
இந்தியாவின் போலியான அரசியல் தீர்வுக் கோரிக்கைகள்
இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழர்கள் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வு காணமுடியாது அரசியரல் தீர்வு மட்டுமே சாத்தியம் என்று இந்தியா பலமுறை அறிகை விட்டது. இதுவும் போலியானதே. போர் முடிந்து விட்டது. இலங்கையை அரசியல் தீர்விற்கு இந்தியா நிர்பந்திக்கவில்லை. மாறாக பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்கு இந்தியா பணம் வழங்கியுள்ளது.
ஜேஆர்-ராஜிவ் ஒப்பந்தமும் ஒரு சதியா?
1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தியும் அப்போதைய இலங்கைத் தலைவர் குள்ள நரி ஜே. ஆர். ஜயவர்த்தனேயும் ஒரு ஒப்பந்தத்தை செய்தனர். இதன் விளைவு தான் இலங்கையின் அரசியலமைப்பிற்க்கான 13வது திருத்தம். இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப் பட்டன. இந்த ஒப்பந்தப் படி இலங்கையின் திருகோணமலையிலும் சிலாபத்திலும் அமெரிக்கா காலூன்றுவது தடுக்கப் பட்டது. ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் இதுவரை நிறை வேற்றப் படவில்லை. ஏற்கனவே இந்த ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு சாதக மான அம்சங்கள் நிறை வேற்றப் படத்தேவையில்லை என்று திரை மறைவில் இலங்கையும் இந்தியாவும் சதி செய்தனவா? என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறிவேற்றும் பணி எந்த நிலையில் உள்ளது? இந்தியாவிற்கு திராணியும் நேர்மையும் இருக்குமானால் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறை வேற்றட்டும். அல்லது தன் போலித்தனத்தை பகிரங்கப் படுத்தட்டும்.
2 comments:
இந்தியாவிற்கு விடுக்கப் படும் சவால்...மானமிருந்தால் இந்தியா இதை ஏற்றுக் கொள்ளட்டும்....
மானமிருந்தால்தானே சவாலை ஏற்றுக் கொள்வர்...
Post a Comment