இலங்கையில் நிலமை என்ன?
- கிழக்கின் உதயம் என்ற பெயரில் அங்கு சிறுவர்கள் கடத்தல்கள் கொலைகள் நடக்கின்றன.
- மக்கள் நாடெங்கும் மிகுந்த பயத்துடன் வாழ்கிறார்கள்.
- ஊடகவியலாளர்கள் கொல்லப் படுகிறார்கள்.
- போர் முடிந்த நிலையிலும் நாட்டில் அவசர கால நிலைச் சட்டம் தொடர்ந்தும் அமூலில் இருக்கிறது.
- மூன்று இலட்சம் மக்கள் வதை முகாம்களில் அடை பட்டுள்ளனர். அவர்களில் வாரந்தோறும் ஆயிரக் கணக்கில் இறக்கின்றனர். இன்னும் பல இலட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
- கடற்கரைகளில் கொலை செய்யப் பட்ட சடலங்கள் வந்து ஒதுங்குகின்றன. 12000 ஆயிரம் படையினர் தேவைப் படும் ஒரு நாட்டில் இரண்டு இலட்சம் படையினர் பணியில் உள்ளனர்.
- பாதுகாப்புச் செலவீனம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
- அரசு ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தை எதிர் பார்க்க முடியாது.
- செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகள் கட்டுப் படுத்தப் படுகின்றன.
- ஐநா ஊழியர்கள் சர்வதேச நியமங்களுக்கு முரணாகத் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கைக்கு கேட்டதிலும் அதிகமாக சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கியுள்ளது. சிலவாரங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதில் சகல தரப்பினரினதும் கருத்துக்கள் கணக்கில் எடுக்கப் படும் என்று கூறியது. பிரித்தானிய அதிகாரிகள் இலங்கையில் கடனுதவி செய்வதற்கான சூழல் இல்லை என்றனர். அமெரிக்க செனட்டிலும் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஆனாலும் இப்போது இலங்கைக்கு கடனுதவி வழங்கும் படி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை பரிந்துரை செய்துள்ளது.
பணிப்பாளர் சபை பரிந்துரை செய்தது ஏன்?
சர்வதேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை அது வழங்கும் கடனானது கடன் வாங்கும் நாடு மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் திறனை அதிகரிப்பதாகும். இலங்கையில் நடந்த போரால் கிளிநொச்சியில் Kentacky Fried Chicken, McDonalds போன்றவை வியாபாரம் நடாத்த முடியவில்லை. ஜப்பானியப் பொருட்கள் வன்னி வீடுகளில் இல்லை. அவற்றை இப்போது ஏற்படுத்த வேண்டும். அதற்கு போரால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பொருளாதர அபிவிருத்திகள் செய்யப் படவேண்டும். அதற்கு போதிய நிதி இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டும். இலங்கை அரசு போரால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் செய்யும். நாணயமில்லா நாணய நிதியம் நாணயமில்லா நாட்டிற்கு நாணய உதவி செய்கிறது.
அமெரிக்காவும் பிரித்தனியாவும் எதிர்த்தது ஏன்?
சர்வதேச நாணயா நிதியதிதின் நிபந்தனைகளுக்கு இலங்கை ஆரம்பத்தில் அடிபணிய மறுத்தது. அந்நிலையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் எதிர்த்தன. இப்போது இலங்கை நாணய நிதியத்தின் நிபந்தனகளுக்கு அடி பணிந்து விட்டன. அதனால் எதிர்ப்பு கைவிடப் பட்டதா?
No comments:
Post a Comment