Tuesday, 21 July 2009
ஈழம்: கொள்ளி வைத்த அமெரிக்கா அள்ளி வைக்குமா?
யாரோ விமானங்களைக் கொண்டு போய் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியதற்கு உலகெங்கும் உள்ள விடுதலை போராளிகளை எல்லாம் பயங்கரவாதிகளாக்கி அவர்களை அழிக்க கொள்ளிவைத்தது அமெரிக்கா.
இலங்கையில் பாவிக்கப் பட்ட பேரழிவு ஆயுதங்களை செய்மதிகள் மூலம் படம் பிடித்து வைத்திருந்தும் அவற்றை வெளியிடாமல் வைத்திருக்கிறது அமெரிக்கா.
இன அழிப்புப் போரில் தனது அந்நியச் செலவாணியை காலி செய்துவிட்டுத் தவிக்கிறது சிங்களம். அதற்கு உதவி செய்ய சீனாவிற்குப் போட்டியாகத் துடிக்கிறது ஆரியப் பேய்கள்.
மோசமான மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிந்த சிங்களத்திற்கு சர்வ தேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற எந்த அருகதையும் இல்லை.
இலங்கைக்கு கடனுதவி புரியும்படி சர்வ தேச நாணய நிதியத்திடம் வற்புறுத்த விருக்கிறது ஆரியப் பேய்கள்.
மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி சர்வ தேச நாணய நிதியத்தின் கடனுதவி இலங்கைக்கு வழங்கக்கூடாது என சில நாடுகளும் பொது அமைப்புகளும் கூறிவருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? சர்வ தேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை அது பெரும் கடனுதவியை வளர்ச்சியடந்து வரும் நாடுகளுக்கு கொடுக்கவிருக்கிறது. இப்போதைய சர்வ தேச பொருளாதர நெருக்கடியில் இப்படிக் கொடுக்கும் கடனுதவியால் வளர்ச்சியடந்து வரும் நாடுகள் பெருமளவில் இறக்குமதியை மேற்குலக நாடுகளிடமிருந்து செய்யும். இவ்விறக்குமதிகள் நெருக்கடியில் இருக்கும் மேற்குலக நாடுகளின் வியாபாரிகளின் வருவாயைப் பெருக்கும்.
அமெரிக்கப் பத்திரிகைகளும் சிங்களம் தமிழர்மீது கட்டவிழ்த்து விட்டுள்ள காடைத்தனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனலும் அமெரிக்கா இலங்கை சீனாவின் பக்கம் சாயாமல் இருக்க சர்வ தேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியை ஆதரிக்கும் என்று சந்தேகிக்கப் படுகிறது.
சர்வ தேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோமென்று வீர வசனம் பேசிய சிங்களம் இப்போது நிபந்தனைகளுக்கு கட்டுப் படுவதாக அறிவித்துள்ளது!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
ஈழ விசயத்தில் , அமெரிக்கா, இந்திய, சீன, பாகிஸ்தான் விளையாட்டில்மொத்தமாய் பலியிடப்பட்டது நம் உறவுகள் .
அமெரிக்காவின் நோக்கம் எந்த வகையிலும் சீன வலுபெற்றுவிடகூடாதுஎன்பதுதான் ,
இந்திய வைத்துள்ள அமெரிக்காவிற்க்கான சமாதான வார்த்தைகளும்இதுதான் . எனது பார்வையில் இந்தியாவின் கொள்கையும் அமெரிக்காவின்கொள்கையும் ஈழ விசயத்தில் ஒன்றைத்தான் இருக்கும் .
ஈழ தமிழன் அழிவதற்கு முழு முதற் காரணம் இந்தியாதான் , அதை ஆளும்காங்கிரஸ் தான். இதை கட்சிமாச்சர்யாங்களுக்காய் சொல்ல வில்லை . பொறுமையாய் தெளிவாய் நோக்கும்எவரும் இதை ஆமோதிப்பார்கள்.
தோழர்.
www.mdmkonline.com
உங்கள் இடுகையின் மை காய்வதற்கிடையில் சர்வதேசநாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவி செய்யப்போகும் செய்தி வந்து விட்டது.ஹிலாரி கிளின்டன் இந்தியா வந்த பிறகுதான் இது நடந்திருக்கிறது ,
இலங்கை இன்று வல்லமை மிக்க நாடுகளின் விளையாட்டுக்களம் ,அந்த விளையாட்டில் மிதிபட்டு துவம்சமாகிப் போகும் மக்களாக ஈழத்தமிழ் மக்கள் மாறி விட்டார்கள்.
ஏற்கனவே இந்த விளையாட்டில் தமிழரின் விடுதலை இயக்கம் பலியாகி விட்டது .
சிங்களவர்கள் இந்த விளையாட்டின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றி முழு நன்மை பெறுகிறார்கள் ,அவர்களுக்கு என்று
ஒரு நாடு இருப்பது அவர்களுக்கு மிகவும் வசதியான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிட்டது .அந்த சந்தர்ப்பத்தை அவர்கள் சரியான திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இத்தனைகொடுமைகளை தமிழர்களுக்கு செய்துவிட்டு ராஜபக்ஷே சகோதரர்கள் ஜம்மென்று இருக்கிறார்கள் .
பாதிக்கப்பட்ட தமிழர்களோ நாதியற்று வதைமுகாம்களிலும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளிலும் வாய் பேச முடியாத நவீன அடிமைகளாக ஆகிவிட்டார்கள்
அதைப் பற்றி ஒரு ஜனநாயக நாடும் பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.
வன்னி மக்களை மீள் குடியேற்றம் செய்யவுமில்லை,தமிழருக்கு அரசியல் தீர்வு திட்டத்தை வைக்கவுமில்லை .
ஆனாலும் இலங்கை அரசுடன் இந்த நாடுகள் எல்லாம் பழையபடி நட்பைத்தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
எம் தமிழ் மக்களில் சிலர் சிங்களவர்களை 'மோட்டு சிங்களவர்கள்' என்று சொல்லுவார்கள் ,இப்படி பேசுவது கண்டிக்கத் தக்கது என்று நான் முன்பே கூறுவேன்.
நான் இப்பொழுது சொல்கிறேன் ,தமிழர்களாகிய நாங்கள்தான் 'மோட்டுத் தமிழர்கள்.'
இத்தனை அழிவு வந்த பிறகும் எம்மில் பலருக்கு இன்னும் புத்தி வரவில்லை.
இன்னும் ஒற்றுமை இல்லாமல்தானே இருக்கிறோம் .
---வானதி
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment