Wednesday, 8 July 2009
பத்மநாதன் தொடர்பாக தனது கருத்தை மாற்றினார் வைக்கோ ஐயா.
ஒரு கரந்தடிப் படைத் தலைவன் என்றும் மறைந்துதான் இருப்பான். அவன் இறந்து விட்டான் என்று பொய்க் கதை கட்டுவது சுலபம். அவன் இறந்த பின்பு இறக்கவில்லை என்று சொல்லுவதும் இலகு!
.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என அதன் சர்வதேசத் தொடர்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்த போது அவரை கடுமையாக தாக்கி அறிக்கை விட்ட வை. கோபாலசாமி ஐயா அவர்கள் இப்போது ஜுனியர் விகடனுக்கு கொடுத்த போட்டியில் அவரைத் தாக்குவதைத் தவிர்த்துள்ளார்.
.
விகடனின் கேள்வி: ''பிரபாகரன் இறந்து விட்டதாக புலிகளே சொல்லி இருப்பது பற்றி...''
.
வைக்கோ ஐயாவின் பதில்:
''தலைவர் உயிரோடு இருக்கிறார் என உறுதியாக சொன்ன செல்வராசு பத்மநாபன், இப்போது 'இல்லை' எனச் சொல்கிறார். இந்த விவகாரத்தில் நான் யாரையும் குற்றம்சாட்டும் நிலையில் இல்லை. ஆனாலும், எனக்கு வந்த உறுதியான உண்மைத் தகவல்களை வைத்து, 'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்' என்பதை இப்போதும் அடித்துச் சொல்கிறேன். அவர் மிக பத்திரமான இடத்தில் இருக்கிறார் என்பதுதான் என் நம்பிக்கை. உரிய நேரத்தில் ஈழப் போரை மறுபடியும் அவர் முன்னெடுத்து முன்னேறுவார். பாதுகாப்பு காரணங்கள் கருதி அவரைப் பற்றி நானறிந்த விவரங்களை இப்போதைக்கு சொல்ல முடியவில்லை!''
.
பிரபாகரனின் மரணம் தொடர்பாக செ. பத்மநாதனின் கருத்தில் உள் அர்த்தம் இருக்கலாம். அவர் இன்றைய சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்டு அதற்கு எற்ப செயற்பட வேண்டும் என்று முடிவு செய்திருக்கலாம்.
.
புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பைச் சிதைக்க ஆரிய சிங்களக் கூட்டமைப்பும் அதன் அடிவருடிகளும் பெரும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடிவருடிகளின் கொடுமை இன்னும் ஓயவில்லை. அவர்கள் உண்மையில் தமிழர்களின் நலனுக்காகப் போராடவந்ததாக இருந்தால் (அவர்கள் சொல்வது போல்) அவர்கள் வருடும் பாதங்களுக்கு உரியவர்களிடம் வதை முகாம்களில் இருக்கும் அப்பாவித் தமிழர்களை விடுவிக்கும் படி கெஞ்சலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
Pathmanathan was continuouly attacked by the traitors of Tamils struggle. That itsels vouch Pathmanathan's integrety.
Post a Comment