ஈழத் தமிழ் இனம் வதைபடும் நேரத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அந்த அமைப்பின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம். இது தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக வைத்த குற்றச் சாட்டு.
.
பத்மநாதன் இந்திய உளவுத்துறையிடம் விலை போய் விட்டார். விடுதலைப் புலிகளின் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தார். விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் வாங்குவதாகக் கூறிப் பணத்தைச் சுருட்டிவிட்டு வெறுங் கப்பலை அனுப்பி அக்கப்பல் ஆயுதத்துடன் வருவதாக இலங்கை அரசிற்கு தகவல் கொடுத்து அக்கப்பலை அழிக்கப் பண்ணிவிட்டவர். இது போன்ற குற்றச் சாட்டுக்களை தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் பத்மநாதனுக்கு எதிராக வைக்கிறார்கள்.
.
குமரன் பத்மநாதன் விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர். இவர் ஆரம்ப காலத்திலிருந்தே விடுதலைப்புலிகளின் அமைப்பில் உறுப்பினர். 1955ம் ஆண்டு காங்கேசந்துறையில் பிறந்த பத்மநாதன் இளவயதிலேயே ஈழவிடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்கு இவர்தான் பொறுப்பாளர். பல நாட்டுக் காவல்துறைகளினதும் உளவுத்துறைகளினதும் கண்களில் விரலை விட்டு ஆட்டிய கெட்டிக்காரர். இவர் பல மொழிகள் கற்றவர். பல நாட்டு குடியுரிமை பெற்றவர். கடற்புலிகளின் மூளையாக இருந்தவர் பத்மநாதன். கப்பல் கட்டுமானப் பணியில் நிபுணத்துவம் வாய்ந்த இஸ்ரேலுக்கு இணையாக கப்பல் கட்டுவதில் புலிகளும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள் சர்வதேச ஆய்வாளர்கள்.
.
பத்மநாதனை 2007 செப்டம்பர் மாதம் பாங்கொக்கில் கைது செய்யப் பட்டதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து ஆரிய சிங்கள உளவுப் படைகள் அங்கு விரைந்தன. ஆனால் அவர் கைது செய்யப் படவில்லை என்று அவர்களிடம் தெரிவிக்கப் பட்டது. இதைப்பற்றி அதிரடி.கொம் என்ற இணையம் இப்படித் தெரிவித்தது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து (கே.பி) 20 மில்லியன் டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு தாய்லாந்துப் பொலிஸார் அவரை விடுதலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
2004ம் ஆண்டு பத்மநாதன் நோர்வேயில் மருத்துவச் சிகிச்சை பெற்றபோது அவரை தமது நாட்டிற்கு கடத்தும் படி ஆரிய சிங்களக் கூட்டமைப்பு பலத்த முயற்ச்சி எடுத்து தோல்வி கண்டதாகவும் கூறப்படுகிறது.
.
பத்மநாதனின் சாதுரியத்திற்கு ஒரு உதாரணம்:
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய நாடு ஒன்றிடமிருந்து இலங்கை அரசு நவீனரக ஆயுதங்களை வாங்கியது. அவற்றை கொழும்புக்குக் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு கப்பலை வாடகைகு அமர்த்தினர். அது விடுதலைப் புலிகளின் கப்பல். இலங்கை அரசை ஏமாற்றி இதச் செய்தவர் பத்மநாதன்! தெற்காசிய நாட்டில் இருந்து ஆயுதங்களோடு கிளம்பிய கப்பல், கொழும்பின் காலி துறைமுகத்துக்கு செல்வதற்கு பதிலாக முல்லைத் தீவுக்குப்போய் புலிகளுக்கு ஆயுதத்தை இறக்கியது. காலித் துறை முகத்திற்கு கப்பல் இன்னும் வந்து சேரவில்லையே என எதிர் பார்த்திருந்த இலங்கை அரசு, விசாரணையின் பின் நடந்ததை அறிந்து அதிர்ந்து போனது. அதிலிருந்து இன்றுவரை ஆயுதக் கொள்முதல் செய்தால் அதைத் தமது ராணுவத்தின் மூலமே கொழும்புக்குக் கொண்டுவருகிறது இலங்கை அரசாங்கம்.
.
பத்மநாதன் துரோகியாக இருந்தால் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தலை மறைவாகி இருக்கலாம். அதைவிட்டு ஏன் தொடர்ந்தும் தமிழ்த்தேசிய போராட்டத்தில் ஈடுபடுகிறார்? இத்தனைக்கும் அவர் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உளவுப் படையினரால் தொடர்ந்து தேடப்படுபவர். 17-05-2009 வரை வன்னியுடன் தொடர்பு வைத்திருந்தவர். விடுதலைப் புலிகளின் அரசியற் துறையைக் காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தவரைப் போர் வெறியர்கள் ஏமாற்றி விட்டனர்.
.
புலிகளில் எஞ்சியிருப்பதில் முக்கியமானது அதன் பன்னாட்டுக் கட்டமைப்பு. அதைச் சிதைக்க ஆரிய சிங்களக் கூட்டமைப்பு கடும் முயற்ச்சி எடுக்கும் என்பது உண்மையே! அதன் ஒரு அங்கம் தான் பத்மநாதனுக்கு எதிரான பொய்ப்பிரசாரங்கள்.
2 comments:
மிக... மிக... நன்று... இந்த இக்கட்டான நேரத்தில் பொய் பிரச்சாரங்கள் மூலம் தமிழீழ தேசியத்திற்கு அதரவானவர்களை பிரித்தாள பேரினவாதிகளும் இந்தியாவும் செய்யும் மலிவான வேலைகளை முடிந்தளவு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.
மிக... மிக... நன்று... இந்த இக்கட்டான நேரத்தில் பொய் பிரச்சாரங்கள் மூலம் தமிழீழ தேசியத்திற்கு அதரவானவர்களை பிரித்தாள பேரினவாதிகளும் இந்தியாவும் செய்யும் மலிவான வேலைகளை முடிந்தளவு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும்.
Post a Comment