Thursday, 18 June 2009

இலங்கையில் மேலும் இறுகும் சீனப் பிடி



ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை உரையாடும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டமை இலங்கையில் சீனாவின் பிடி இறுகுகின்றதென்பதற்கு மேலும் ஒரு அறிகுறியாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு சபை சீனா, கஷகஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்த்தான் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பார்வையாளராக கலந்துகொள்ளும் உரித்துடையன. இலங்கைக்கு இந்த அமைப்பில் உரையாடும் உறுப்புரிமை வழங்கப்பட்டமை இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டது.
.
இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சீனா பலமான ஒரு வர்த்தக உறவை 1960களில் இருந்தே ஏற்படுத்தி வருகிறது. ஆபிரிக்காவின் மூலவளமும் மத்திய கிழக்கின் எரிபொருள் வளமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின , பங்காற்றி வருகின்றன. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் வழியாக இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா விரும்புகிறது.

ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டமை மேற்குலகிற்கு எதிராக இலங்கை எடுத்து வைக்கும் ஒரு அடி அல்ல என்று இலங்கை வெளியுறவுச்செயலர் தெரிவித்திருந்த போதிலும் அதுதான் உண்மை என்றும் கருதப்பட வேண்டியுள்ளது. மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுப்பும் போர் குற்றச்சாட்டிலிருந்து தப்ப இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு புகலிடம் தேவை. அது சீனாவைத்தவிர வேறு எந்த நாட்டாலும் முடியாது. உண்மையில் இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவின் தீவிரஆதரவாளர்களாக இருப்பதால்தான் மேற்குலகு இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்குற்றம் என்ற ஆயுதத்தை எடுத்துள்ளனர்.
.
ஏற்கனவே ஈரானிய-சீனக் கூட்டமைப்பில் இலங்கையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...