
தினமணியில் இலங்கைத் தமிழர் வரலாற்றை எழுதிவரும் பாவை சந்திரன் அவ்வப்போது சில் விடயங்களை சொல்லாமல் விடுவதுண்டு. எல்லாவற்றையும் எழுத முடியாததுதான். ஆனால் சில முக்கிய நிகழ்வுகள் மறைகப் படக் கூடாது.
தமிழர்களைப் பிரித்த நேரு
இலங்கையில் வாழ் தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் என்று ஆங்கிலேயர் பிரித்து வைத்தனர். கொழும்பில் வாழ்ந்த வியாபாரித் தமிழர்கள் தம்மை கொழும்புச் செட்டி என்ற தனி இனமாக்கினர். பிரிந்திருக்கும் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்க முற்பட்டார். ஆ. தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே செய்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார்.
No comments:
Post a Comment