Wednesday, 24 June 2009
இலங்கையின் மனித உரிமை மீறல்களை இந்தியா தூண்டியதா?
இலங்கைக்கு அனைத்துலக நாணய நிதியம் வழங்கவிருந்த கடன் தாமதமாகிக் கொண்டு வருகிறது. நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் ஆளும் கட்சிக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். நாணய நிதியம் நிபந்தனைகளின் ஒன்று ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராகக் குறைக்கப் படவேண்டும்என்பது. இதன்படி ஒரு டொலர் 122 ரூபா என்ற விகிதத்தில் வரவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அந்த யோசனையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. நாணய நிதியம் இந்த நிபந்தனையை விதிப்பது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தண்டனையாகவே கருதப்படுகிறது.
.
சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
.
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
.
உலக நாடுகளில் 169வது இடத்தில் இருக்கும் இந்தியா
இந்தியா இந்த உதவியை வழங்க முன்வருவதன் காரணம் என்ன? அன்னியச் செலவாணியை பொறுத்தவரை சீனா முதலாம் இடத்திலும் இந்தியா 169வது இடத்திலும் இருக்கிறது. அன்னியச் செலவணிக்குத் திண்டாடும் இந்தியா ஏன் இந்த உதவியைச் செய்ய முன்வருகிறது? மஹிந்த ராஜபக்சே சொன்னார் தாம் இந்தியாவின் போரைச் செய்து முடித்ததாக. அண்மையில் விடுதலைப் புலி உறுப்பினர் கூறியது: வட்டுவாய்க்கால் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். இலங்கைப் போரில் இந்தியா மறைமுகமாக தீவிர ஈடுபாடு காட்டியது. எப்படிப் போர் நடக்கவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை இந்தியா வழங்கியது. மனித உரிமைகளை மீறாமல் இந்தப் போரில் இலங்கையால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்தியாவின் ஆலோசனையின் பேரில் இலங்கை மனித உரிமைகளை மீறியதா? அதற்கான இழப்பீடுதான் இந்தியா வழங்கப் போகும் இந்தக் கடன் உதவியா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
we need to write to IMF not to give loan to india if india complensate sri lanka.
Post a Comment