இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டம் தமிழ்நாடு வாழ் தமிழர்களினதும் புலம் பெயரந்து வாழும் தமிர்களினதும் ஆதரவின்றிச் சாத்தியப் பட்டிருக்காது.
.
விடுதலைப் புலிகளின் எதிரிகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இலண்டன் தமிழர்களைத் தாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்து கொள்வர். இவர்கள் பொதுஉடமைவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டு இலண்டன் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை வர்கரீதியல் அணுகாத பிற்போக்கு வாதிகள் அரசியல் அறிவற்றவர்கள் என்று கூறிவருகின்றனர். அத்துடன் நின்று விடுவதில்லை இன்றைய தமிழர்களின் அவல நிலைக்கு புலம் பெயர் தமிழர்கள் புலிப் பாசிச வாதிகளுக்கு வழங்கிய ஆதரவு தான் காரணம் என்றும் குற்றம் சாட்டி மகிழ்கின்றனர்.
இலங்கை இனப் பிரச்சனைக்கு வர்க்க ரீதியான அணுகு முறை என்பது சிங்கள தமிழ் மக்களுக்கிடையில் உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்து அவர்கள் தமக்கிடையில் உள்ள பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வதுதான்.
இலங்கையின் இனப்பிரச்சனையைப் பற்றி தெரிந்தவர்களுக்கு ஒன்று தெரியும் இலங்கையில் நடந்த சகல இனக் கொலைகளிலும் இனக் கலவரங்களிலும் சிங்களப் பாட்டாளி வர்க்கமும் முதலாளி வர்க்கமும் தமிழர்களை வர்க்க பேதமின்றி தாக்கியது. தனிச் சிங்கள சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்தது தன்னை இடது சாரி எனக் கூறிய ஒரு அரசுதான். இலங்கை பொது உடமைக் கட்சி இலங்கை சமசமாஜக் கட்சி ஆகியன தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை பலமாக எதிர்த்தவர்கள். "பொதுஉடமைவாத" ஆயுதப்புரட்சியில் ஈடுபட்ட ரோஹண விஜயவீர தமது இயக்கத்தில் தமிழர்களை இணைக்கவில்லை. அவரது தோல்விக்கு அடையாளம் காணம்பட்ட ஐந்து காரணங்களில் தமிழர்களை இணைக்காததும் ஒன்று. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பவர்கள் சிங்கள மக்களால் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. வாசுதேவ நாணயக்காரவும் கலாநிதி விக்கிரம பாகுவும் இதற்கு நம்முன் உள்ள நல்ல உதாரணங்கள்.
சிங்கள மக்கள் இலங்கைப் பிரச்சனையை வர்க்க ரீதியாக அணுகும் தலைவரைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் பின்னால் தமிழ்ப் பாட்டாளி வர்கம் திரளும். தமிழர்களுக்கு பிரச்சனை இருக்காது. இலண்டன் தமிழர்கள் அப்போது செல்லாக் காசாகிவிடுவார்கள். அவர்களும் தாயகத்துப் பிரச்சனைகளை மறந்து தமது வாழ்கையை அநுபவிப்பார்கள்.
.
ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழ்த் தேசியவாதத்தை அழிப்பதற்கு வர்கக் கண்ணோட்டம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து வைத்திருக்கின்றனர்.
1 comment:
Nice... blog TRy to visit My blog...
Post a Comment