Saturday, 13 June 2009

யசூசி அகாசி கூற்று இந்தியாவிற்கு செருப்படி


சிறிலங்கா தொடர்பான தெளிவு எமக்கு இருந்தனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் நாம் கலந்துகொள்ளவில்லை என்று சிறிலங்காவுக்கான ஐப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை மீறல் உலகறிந்த செய்தி.
தமிழர்களின் அவலமானது மானிட அவலத்தின் உச்சக் கட்டம்.
இது இலங்கையின் அயல் நாடான இந்தியாவிற்கு தெரியாமல் போனது ஏன்?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொண்டது. ஜப்பானியத் தூதுவர் தமக்கு இலங்கைபற்றிய தெளிவான அறிவு இருந்த படியால் தமது நாடு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபை நடத்திய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்கிறார். அப்போ இந்தியாவிற்கு ஏன் இந்த தெளிவு ஏற்படவில்லை? இந்தியாவும் இனக்கொலையை இணைந்து நடத்துகிறதா?

5 comments:

Indian said...

இந்தளவுக்கு ஆனபின்னும் புத்தி வரவில்லையென்றால் உங்களை யார் தான் ஆதரிப்பார்கள்.

நீங்கள் எங்கள் நாட்டு தலைவரை குண்டு வைத்து கொள்வீர்கள், எங்கள் தாய் நாட்டில் உங்கள் கைத்தடிகள், கூலிகள் மூலம் பிரிவினையை தூண்டுவீர்கள், இதன் பின்னும் எங்கள் தாய் நாடாம் இந்தியா உங்களுகு உதவ வேண்டுமா?

நாங்கள் உங்களை போல மூடர்களா என்ன, கொள்ளி கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்ள!

இனிமேலாவது அவனவன் பிழைப்பை பார்த்து கொண்டு வாழ்க்கையை ஓட்ட பாருங்கள்.

அதைவிட்டு சொகுழாக எங்காவது வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இதுபோல் உளாரிகொட்டிககொண்டு உங்கள் உள்நாட்டில் உள்ள உங்கள் சொந்தங்களுக்கு நீரே கேடு தேடி தராதீர்கள்.

தமிழ் said...

நல்ல பட்டறிவு அப்பா எந்தநாடு?

Anonymous said...

தமிழர்களின் உரிமைப் போராட்டம் மழுங்கடிக்கப் பட்டதற்கும் தமிழர்கள் சந்தித்த பேரவலத்திற்கும் காரணம் காந்திகுடும்பமும் நாராயணனும் மேனனும் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் கொத்தடிமைகளும்தான் காரணம். சிங்களவனுக்கு சகல உதவிகளையும் செய்து தமிழினக் கொலைக்கு உதவும் நாய்கள் யாரென்பதை நாம் அறிவோம்.

Anonymous said...

நண்பர் "indian" ஒரு இன உணர்வற்ற ஈழத்தமிழன்....
"உங்கள் சொந்தங்களுக்கு நீரே" மொழி நடையில் கோட்டை விட்டுவிட்டீரே!

தம்பி வேல்தர்மா இனவுணர்வு என்ப்பது தன்மானமுள்ளவர்களுக்கு மட்டுமே.

Anonymous said...

தமிழர்களை அழிக்க சிங்களவனுக்கு சகல உதவிகளையும் செய்ததுடன் நிறுத்தியிருக்கலாம்.

ஐநாவிலும் இந்தியா பொய்கள் பல கூறி இலங்கைக்கு பாராட்டுத் தெரிவித்தது கேவலத்தின் உச்சக் கட்டம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...