வன்னியில் இடைத் தங்கல் முகாம் என இலங்கை அரசு கூறும் வதை முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்கு இலங்கை அரசு மிக அவசரப் பட்டு ஒரு வசதியைச் செய்து கொடுத்தது. அதாவது முகாம்களுக்குள் ஒரு இலங்கை வங்கியின் கிளையைத் திறந்தது. முகாம்களில் உள்ளவர்களின் உறவினர்கள் வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் அனுப்பும் பணத்தை கறப்பதற்கு வசதியாக இந்த ஏற்பாடு. இராணுவத்தினர் அத்துடன் நிற்காமல் முகாம்களுக்குள் தமது கடைகளையும் திறந்து வியாபாரத்தையும் ஆரம்பித்தனர். அக் கடைகளில் வழமையான விலைகளிலும் பார்க்க பொருட்கள் மிக அதிகம்.
இடைத்தங்கல் முகாம்களில் சட்டத்திற்கு புறம்பான முறையில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் ஒருவரை விடுவிப்பதற்கு கொடுக்கப் பட வேண்டிய விலை ஒரு மில்லியன் ரூபாக்கள் என்று அறியப்படுகிறது. அம் முகாம்களில் உள்ள மக்களின் சொல்லவொணாத் துயரம் சில அரச சார்பு தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உலுக்கியுள்ளதாக நம்பப்படுகிறது. அவரகள் முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவிக்க தம்மால் இயன்றவற்றை பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்கள்.

தமிழ் மக்களின் அவலத்திற்கு காரணம் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளே. இதை சொல்வது பேராசிரியர் சூரியநாராயணன்: எமது கைகள் இரத்தம் தோய்ந்துள்ளதாக" இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் நிலையம், சென்னையில் கடந்த திங்கட்கிழமை நடத்திய நிகழ்வின் போது உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த மூன்று, நான்கு வருடங்களாக புதுடில்லி அரசாங்கம் தமிழ் நாட்டை கலந்தாலோசிக்காது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மூன்று, நான்கு வருடங்களாக புதுடில்லி அரசாங்கம் தமிழ் நாட்டை கலந்தாலோசிக்காது எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
7 comments:
ஆதரமற்ற செய்திகளையும், பெண்களை இழிவு படுத்தும் செய்திகளையும் தவிருங்கள்... நாளை அவர்கள் விடுவிக்கப்பட்டபின் இந்த சமூகத்துடன் தான் வாழ வேண்டும். இதையும் ஆலோசிக்காமல் பரபரப்புக்காக எழுத வேண்டாம்...
Post a Comment