பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கம் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன்பாகவும் டயானாவின் இறுதிக்கிரியை நடந்த Westminster Abbey இற்கு அருகிலும் இருக்கிறது. தினமும் பல்லாயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் இங்கு வந்து பிக் பென் கடிகாரத்துடன் படமெடுத்துக் கொள்வர்.
பிக்பென் கடிகாரம் 12 மணிகாட்டுகிறது. வெள்ளிக்கிழமை விடை பெறுகிறது சனிக்கிழமை வருகிறது. நடன அரங்குகளிலும் விடுதிகளிலும் மதுபானச் சாலைகளிலும் உல்லாசங்கள் ஓய்கிறது. இலண்டன் நகரம் கேளிக்கையில் களைக்கிறது. களைத்தாலும் சளைக்காமல் நள்ளிரவிலும் பல நுாற்றுக் கணக்கான தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரம் மைல்களுக்க அப்பால் பரிதவிக்கும் தம் உறவுகளுக்காக. இது ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கிறது.
கடந்த ஏப்ரல் ஆறாம் திகதிபாராளமன்ற சதுக்கத்தில் சில மணித்தியாலங்களில் முடிப்பதாக அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்பாட்டம் ஈழத்தில் ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் வேதியியல் ஆயுதங்கள் பாவித்து கொல்லப் பட்டனர் என்ற சேதி வந்தவுடன். கைத்தொலைபேசிகளூடாகப் பல குறுந்தகவல்கள் பறந்தன. மேலும் பல தமிழர்கள் அங்கு திரண்டனர். தாம் தெருவில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் முதலில் காவல் துறையினரிடம் மன்றாட்டமாகக் கேட்டனர். அவரகள் மறுக்கவே அவர்களைத் தள்ளி விட்டு சாலை மறியல் போராட்டத்தில் கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் ஈடுபட்டனர். இரவு முழுக்க இது தொடர்ந்தது. மறுநாள் காலை கலைந்து செல்லும் படி காவலர்கள் விடுத்த வேண்டு கோளிற்கு செவி சாய்க்கவில்லை. விளைவு பெரும் போக்கு வரத்து நெருக்கடி. காவலர்கள் பின்னர் அவர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினர். ஆனால் தமிழர்கள் பாராள மன்ற சதுக்கத்தில் மீண்டும் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பாராளமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தனர். இந்த ஆர்பாட்டம் இன்று வரை தொடர்கிறது. இரவு பகலாக நடக்கிறது. பல பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பபை இடை நிறுத்திவிட்டு இங்கு தினசரி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்களில் தெரிகிறது அவர்கள் எவ்வளவு துாரம் களைத்துப் போய் இருக்கின்றனர் என்று. களைத்தாலும் அவர்கள் சளைக்கவில்லை.
Saturday, 9 May 2009
களைத்தாலும் சளைக்காத பிரித்தானியத் தமிழர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment