Thursday, 7 May 2009

விடுதலைப் புலிகள் இந்தியாவின் நண்பர்கள் - இந்திய அதிகாரவர்கத்திற்கு அது தேவையில்லை.




தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் இந்தியாவின் நண்பர்கள் என்பதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளனர். இந்திய ஆட்சியாளர்கள் இதைக் கருத்தில் கொள்வதில்லை. விடுதலைப் புலிகள் இந்திய நலன்களுக்கு எதிராக செயல் பட்டதுமிலை. சிங்கள அரசும் சிங்கள மக்களும் இந்தியாவிற்கு எதிரான மனப்பாங்கையே கொண்டுள்ளனர் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் நன்றாக அறிவர். இருந்தும் ஏன் இந்திய ஆட்சியாளர்களிடம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்த நிலைப்பாடு? இராஜீவ் காந்தி கொலை என்று சுலபமாகச் சொல்லிவிடலாமா? ராஜீவைக் கொன்றவர்கள் யார்? என்ற கேள்விக்கே விடையில்லை! ராஜீவ் கொலைக்கு முன்பே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தது. இந்திரா காந்தி அம்மையார் இருக்கும் போதே ரெலோ இயக்கமும் இந்தியப் படைகளும் சேர்ந்து புலிகளை அழித்தொழிக்கும் திட்டம் போடப்பட்டது. புலிகள் முந்திக்கொண்டு ரெலோ இயக்கத்தை சின்னாபின்னப் படுத்தினர். ராஜீவ் காந்தி கொலை செய்யப் படாமல் இருந்தாலும் இந்திய ஆட்சியாளர்கள் புலிகளுக்கு எதிரான நிலைப் பாட்டோடுதான் இருந்திருப்பர் என்றார் முன்னாள் காங்கிரசு உறுப்பினர் தமிழருவி மணியன். இதே கருத்தைப் பலரும் முன் வைத்துள்ளனர்.
>
ஏன் இந்த விடுதலைப் புலிகள் எதிர்ப்பு நிலைப்பாடு?
1. ஒரு சாமனியன் தலமைப் பதவிக்கு வந்துவிட்டான்.
2. சாதியத்தை உடைத்தெறிந்த இயக்கம் வெற்றி பெறக்கூடாது.
>
ஒரு குடும்பம்தான் இந்தியாவை ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைப் பாடும் உயர்தர வர்க்கத்தினர் தான் ஆட்சியாளர்களாக வரமுடியும் என்ற நம்ம்பிக்கையும் கொண்டவர்கள் விடுதலைப் புலிகளை என்றும் எதிர்ப்பர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...