இப்படங்களை இராணுவத்தினர் எடுத்து தமது நண்பர்களுக்கு அனுப்பினார்கள். அது இப்போது பகிரங்கமாகி விட்டது.....
சிங்களக் கொடுங்கோலரசு நடாத்தும் வதை முகாம்களிள் தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் அளப்பரியன. ஒரு சில முகாம்களை சர்வதேச தரத்திற்கு அமைய அமைத்து விட்டு வெளி நாட்டு இராச தந்திரிகளுக்கு அவற்றை காட்டிவிட்டு மற்றவற்றில் பெரும் கொடுமைகள் நடக்கின்றன. மிக நெருக்கமாக மக்களை அடைத்து வைத்து விட்டு அவர்களுக்கு ஒழுங்காக உடை உணவு கொடுப்பதில்லை. சாப்பாட்டை எறிந்து விட்டு அவற்றை சண்டட பிடித்து எடுக்கும் படி மக்கள் பணிக்கப் படுகிறார்கள். அவர்கள் சண்டை பிடிப்பதை சிங்களவர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். சண்டை பிடிக்காதவர்களுக்கு அடி உதை. இதில் ஒருநாள் இரு சிறார்கள் கொல்லப் பட்டனர். பலர் நோய் வாய்ப்பட்டு இறக்கின்றனர். பட்டினிச் சாவும் நடப்பது உண்டு. இளம் ஆண்கள் நிர்வாணமாகக் கட்டி வைக்கப் படுகின்றனர். தப்பி ஓடாமல் இருக்க இந்த ஏற்பாடு.
..
தருணம் பார்த்து அறிக்கை விட்ட அசோக் மேத்தா.
பிரித்தானிய பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருவதற்கு முன்கூட்டியே புலிகளை ஒழிக்க இதுதான் தருணம் இதைத் தவற விட்டால் வேறு தருணம் கிடைக்காது என இந்திய அமைதிப் படை எனும் அட்டூழியப் படைய இலங்கையில் வழிநடாத்திய அசோக் மேத்தா அவர்கள் அறிக்கை விட்டார். இது உடனடியாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் வலயத் தளத்தில் பதியப் பட்டது. இரு வெளியுறவுத்துறை அமைச்சர்களினதும் போர் நிற்த்தக் கோரிக்கைய இலங்கையை நிராகரிக்க தூண்டுவதற்காக இந்திய உளவுத் துறையின் சதி இது என நம்பப் படுக்கிறது.
No comments:
Post a Comment