
.
.
.
.
.
.
..
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி அங்கு சென்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். போர் நிறுத்தம் செய்ய வேண்டி இலங்கையில் கடுமையாக முயற்சித்தோம் வலியுறுத்தினோம் வலியுறுத்தினோம் ஆனால் இலங்கை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை என்றார் பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் கொளச்னர். போர் நிறுத்தம் நாம் வேண்டுவது பொது மக்களைக் காப்பபற்றவே புலிகளை அல்ல என்றும் எடுத்து உரைத்தோம் இலங்கை விட்டுக் கொடுக்கவில்லை. இது பற்றி இனி எம் நண்பர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
.
எமது இராணுவ வெற்றிக்கு இந்திய
பாக்கிஸ்தானின் உதவியே காரணம் - உதய நாணயக்காரா.
இலங்கை இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்காரா தமது இராணுவ வெற்றிக்கு இந்தியா-பாக்கிஸ்த்தானின் இடையறாத ஒதுதுழைப்பும் உதவியுமே காரணம் என்று கூறியுள்ளார். இருநாடுகளும் எமக்கு அதி நவீன தொழில் நுட்பங்களை வழங்கின என்கிறார் அவர். மேனன்-நாராயணன் ஏன் அடிக்கடி கொழும்பு செல்கிறார்கள் என்று இப்போது புரிகிறது.
..
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
..
முல்லைத்தீவு கடற் பரப்பில் கடும் சமர்.
முல்லைத்தீவு கடற் பரப்பில் இலங்கைக் கடற் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடந்துள்ளது. 5 விடுதலைப் புலிகளின் படகுகள் அழிக்கப் பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படைக்கு சொந்தமான இரு நவீன டோராப் படகுகள் அழிக்கப் பட்டதாக இன்னோரு செய்தி கூறுகிறது.
No comments:
Post a Comment