Wednesday, 8 April 2009

இலண்டன் நகரில் இரு தமிழர்கள் சாகும் வரை உண்ணா விரதம்


இலங்கையில் யுத்த நிறுத்தம் வேண்டி இரு தமிழ் இளைஞர்கள் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் 06-04-2009 திங்கட்கிழமை காலை அமைதியான முறையில் ஆரம்பித்த போராட்டம். பின்னர் அரச அனுமதி பெறாத சாலை மறியல் போராட்டமாக மாறியது. பிரபல வெஸ்ற்மின்ரர் பாலமும் அதை அடுத்துள்ள சாலைகளும் மூடும் நிலை ஏற்பட்டது. இரவு இரவாக 5000ற்கு மேற்பட்ட மக்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் குளிர் மற்றும் பல அசெளகரியங்களுக்கு மத்தியில் ஈடுபட்டனர். இதனால் பலத்த போக்கு வரத்து நெருக்கடி பாராளமன்றத்தை அடுத்துள்ள பகுதிகளில் ஏற்பட்டது. தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து நகர காவல் துறையினர் சாலை மறியல் போராளிகளை பலாத்காரமாக பாராளமன்ற சதுக்கத்திற்கு அப்புறப்படுத்தினர். அங்கும் அரச அனுமதி இல்லாத நிலையிலேயே போராட்டம் தொடர்ந்தது. காவல் துறையினர் வெளியேறும் படி வற்புறுத்தியும் அவர்கள் வெளியேற மறுத்தனர். பாராளமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு பாராளமன்ற சதுக்கத்தில் நடக்கும் போராட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தனர். இப்போது மூன்றாவது நாளாக இப்போராட்டம் தொடர்கிறது. இதில் இரு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.
உலகெங்கும் பரவும் தமிழர் போராட்டம்.
இலண்டனிலும் ஒஸ்லோவிலும் ஆரம்பித்த போராட்டம் இப்போது உலகின் பல பாகங்களுக்கும் பரவியுள்ளது. அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள பிரபல Central Business District எனும் வர்த்தக வளாகம் தமிழர் போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. டென்மார்க்கில் வரையறுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி சென்றார்கள் என்று கூறி 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...