Tuesday, 3 May 2011

பின் லாடன் கொல்லப்படுவதை நேரடி ஒளிபரப்பில் பார்தார் பராக் ஒபாமா


மன இறுக்கம்(Tension)என்றால் என்ன என்று தெரியாதவர்கள் அதை இப்படத்தில் உள்ளவர்களின் முகங்களில் பார்க்கலாம். Click on picture to enlarge.


அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது.

TEAM - 6
SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். அவர்களின் தலைகளில் பொருத்தப்பட்ட காணொளிப் பதிவு கருவிகள் அவர்களின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பக் கூடியவை. அதிலிருந்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிலமைகள் அறையில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உதவி அதிபர், சிஐஏ தலவர், ஹிலரி கிளிண்டன் உட்பட சில அரச உயர் நிலையில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Really Virtual என்னும் பெயரில் பக்கிஸ்தானில் இருந்து ஒருவர் பில் லாடனின் மாளிகை மீதான தாக்குதலை நேரடியாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவருக்கு பின் லாடன் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று தெரியாது. அவரது பதிவுகள்:
May - 1st

20-58: Helicopter hovering above Abbottabad at 1AM (is a rare event).

21-05: Go away helicopter - before I take out my giant swatter :-/

21-09: A huge window shaking bang here in Abbottabad Cantt. I hope its not the start of something nasty :-S

21-44: all silent after the blast, but a friend heard it 6 km away too... the helicopter is gone too.

21-48:
the few people online at this time of the night are saying one of the copters was not Pakistani...

22-02:
ince taliban (probably) don't have helicpoters, and since they're saying it was not "ours", so must be a complicated situation.

22-10:
The abbottabad helicopter/UFO was shot down near the Bilal Town area, and there's report of a flash. People saying it could be a drone.

22-15:
people are saying it was not a technical fault and it was shot down. I heard it CIRCLE 3-4 times above, sounded purposeful.

May - 2nd

3-45am:
I think the helicopter crash in Abbottabad, Pakistan and the President Obama breaking news address are connected.

4.00am: Interesting rumors in the otherwise uneventful Abbottabad air today.

4.02am: Report from a taxi driver: The army has cordoned off the crash area and is conducting door-to-door search in the surrounding

4-10am:
Another rumor: two copters that followed the crashed one were foreign Cobras - and got away.

4-21am:
Report from a sweeper: A family also died in the crash, and one of the helicopter riders got away and is now being searched for.

4-31am:
Osama Bin Laden killed in Abbottabad, Pakistan.: ISI has confirmed it << Uh oh, there goes the neighborhood :-/

5-41am:
Uh oh, now I'm the guy who liveblogged the Osama raid without knowing it.

8-19am:
The gunfight lasted perhaps 4-5 minutes, I heard. That was around 10 hours ago. There are no other gunfights that I know of.

அனுராதபுரம் விமானத் தளத் தாக்குதலை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் நேரடி ஒளிபரப்பில் பார்த்தார்.

ஹாலிவூட் விரைவில் பின் லாடன் கொலையைப் படமாக்க இருக்கிறது. Kill Bin Laden என்னும் பெயரில் படமாக்குவதற்கு ஆஸ்கர் விருது பெற்ற கத்ரின் பிகேல்லோவும் மார்க் போலும் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...