ஒரு நாள் 40 நிமிடங்கள் படி வாரத்தில் மூன்று தடவை துரிதமாக நடந்தால் உங்கள் மூளை கூர்மையடையும். ஊடகம் ஒன்று இப்படிக் கூறுகிறது: By studying brain scans, psychologists at Illinois University found cognitive function levels among nearly 100 self-confessed couch potatoes improved dramatically after a year in which they walked a few times a week, compared with participants who only did stretching exercises.
நடப்பது மூளையினுடனான மற்ற உறுப்புகளின் தொடர்புகளை மேம்படுத்தி முதுமையடைவாதால் மூளையில் ஏற்படும் குறைபாடுகளையும் சரி செய்கிறது. அமெரிக்க இலினொய்ஸ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி குண்டானவர்கள் நடக்கத் தொடங்கியபின் அவர்களின் மூளையின் செயாற்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளதாம்.
பிரித்தானிய Northumbria University இன் ஆய்வின்படி சூயிங்கம் சப்புவது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறதாம். இந்த சப்பல் உங்கள் இருதயத்தின் செயற்பாட்டை அதிகரித்து அதிக அளவு இரத்தம் மூளைக்குப் பாய வழி வகுக்கிறது. இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
அதிகம் மது அருந்துவது உங்கள் மூளையைப் பாதிக்கும். அதிலும் 25வயதுக்குக் குறைவானவர்களிற்கு இந்த அதிக மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றவர்களிலும் அதிகம்.
நல்ல சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்ணுவது உங்கள் மூளையை மேம்படுத்தும்.
மீன் சாப்பிடுதல் மூளைக்கு நல்லது. சில வகை மீன்களில் காணப்படும் omega 3 oils உங்கள் மூளைக்கு மிகச் சிறந்தது.
புகைத்தல் மூளைக்கு கூடவே கூடாது.
மூச்சுப்பயிற்ச்சி மூளையை வளப்படுத்தும். பிராணாயாமம் யோகா போன்றவை மன அழுத்தங்களை நீக்கி மூளையின் செயற்பாட்டை மேம்படுத்தும்.
நல்ல ஆழ்ந்தநித்திரை தினமும் செய்தால் மூளைக்கு ஓய்வு கிடைத்து அது பொலிவடையும்.
உடலுக்கு உடற்பயிற்ச்சி போல மூளைக்கும் பயிற்ச்சி அவசியம். மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய விளையாட்டுக்கள் தினமும் விளையாட வேண்டும். Researchers from the German Institute For Quality And Efficiency In Health Care showed brain training products do improve certain functions, but only the ones they are aimed at.
For instance, a crossword may improve your ability to do crosswords but it won't boost your memory.
உங்கள் இரத்த அழுத்தத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இரத்தம் அழுத்தம் சீராக இருப்பது மூளையின் சிறந்த செயற்பாட்டிற்கு அவசியம்.
விட்டமின் -பி மூளைக்குத் தேவை. Vitamin B is found in a wide range of foods - broccoli, milk, and fortified breakfast cereals.
5 comments:
பதிவு,பயனுள்ளதுதான்..ஆனால் தலைப்ப சற்று திருத்தி வெளியிடுங்கள்....
நன்றி...
தயவு செய்து தலைப்பை மாத்துங்க சேர்.......
தலைப்பில் இருக்கும் பிழையை விரைவாக சரி செய்யவும்...
தவறுக்கு மன்னிக்கவும்
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அன்பர்களே...
நல்ல பயனுள்ள பகிர்வு
Post a Comment