Friday, 3 September 2010

நிருபாமா ராவ் முன் நகர்ந்ததில் நெகிழ்ந்த வலம்புரிப் பத்திரிகை.


நிருப்ப-மா? திருப்பமா?
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் இருந்து ஒரு பன்னாடைக் கூட்டம் பாராளமன்ற உறுப்பினர் என்ற பெயரில் வந்து இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவிற்கு பொன்னாடை போர்த்திச் சென்றது. அதில் வந்த டி ஆர் பாலுவை சனீஸ்வரன் என்று வர்ணித்துப் புகழ் பெற்றது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வலம்புரி நாளேடு. அதே நாளேடு இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபாமா ராவ் யாழ் நூலகத்தில் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் பேச்சை அக்கறையுடன் கேட்டதை "ஒரு திருப்பு முனை" என புளுகித் தள்ளியுள்ளது. வலம்புரியின் "வாக்குஸ்தானத்தை" சனீஸ்வரன் பார்க்கிறாரா? அல்லது "இலாபஸ்தானத்தை" இந்தியா பார்த்துக் கொள்கிறதா தெரியவில்லை. அதன் செய்தி இப்படிக் கூறுகிறது:

  • பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் முன்வைத்த கருத்தை மிக நிதானமாகவும் அங்கீகரிப்பதுபோன்ற பாவனையுடனும் நிரு பமா ராவ் ஏற்றுக்கொண்டார். இது நிருபமா ராவ் தகைசார் வெளியுறவுச் செயலர் என்பதை நிரூபிப்பதாக இருந்தது.பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் கருத்துரை கூற எழுந்தபோது நீங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்துங்கள் என நிருபமா ராவ் கேட்டார். அதற்கு நான் பேராசிரியர் சிற்றம்பலம் என்றார்.
  • அந்த அவை அமைதிகொண்டது. நிருபமா ராவ் தனது ஆசனத்திலிருந்து சற்று முன் நகர்ந்து பேராசிரியரின் கருத்தை கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்தியதை பார்த்தபோது நெஞ்சம் நெகிழ்ந்தது.
இந்திய முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஜீ பார்த்தசாரதியிலிருந்து இன்று நிருபாமா ராவ் வரை பல வெளியுறவுச் செயலர்கள் தமிழர்களைக் சந்தித்து "அக்கறையுடன்" தமிழர் பிரச்சனைகளைக் கேட்டுக் கொண்டனர். அப்போதும் பலர் ஒரு "ஒரு திருப்பு முனை" வரப்போகிறது என்று கூறிக்கொண்டனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை ஜீ பார்த்தசாரதி இலங்கை வந்தபோது இலங்கையில் தமிழர்கள் இருந்த நிலைக்கும் இப்போது தமிழர்கள் இருக்கும் நிலயையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திருப்பு முனைகள் எதை நோக்கி இருந்து வந்தது என்று புரிந்து கொள்ளலாம்.

நிருபாமா சிங்களவர்களிடம் மீள் குடியேற்றத்திறிகான சகல உதவிகளும் இலங்கை அரசினூடாக வழங்கப் படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மீள் குடியேற்றத்திற்கான உதவி தமிழர்களுக்கு நேரடியாகவே வழங்கப் படும் என்றும் கூறினார். இது இந்தியாவின் வழமையான சிங்களவர்களுக்கு தலையையும் தமிழர்களுக்கு காலையும் காட்டும் செயல்.

நிருபாமா ராவ் எந்த நிலையில் இலங்கை வந்தார்?
  • அம்பாந்த்தோட்டையில் சீனர்கள் .
  • நுரைச் சோலையில் சீனர்கள்.
  • மீரிகம சிறப்புப் பொருளாதார வலயத்தில் சீனர்கள்.
  • ஏ-9 நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்ய சீனர்கள்.
  • கிளிநொச்சியில் கணனிப் பாகங்கள் உற்பத்தி செய்ய 500ஏக்கர் நிலத்தில் சீனர்கள்.
  • முல்லைத்தீவில் சீனர்கள்.
  • யாழ்ப்பாணத்தில் இலங்கைப் படையினருக்கு வீடுகள் கட்ட சீனர்கள்.
  • காங்கேசந்துறைக்கும் பலாலிக்கும் இடையில் தொடரூந்துப் பாதை அமைக்கச் சீனர்கள்.

இந்தச் சீனர்கள் திரும்பிச் செல்வார்களா? சுன்னாகம் மின்னிலையத்தை புனரமைக்க வந்த 50 சீனர்கள் தங்கள் வேலை முடிந்தவுடன் திரும்பிச் செல்லவில்லை. அங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். இப்பொது இலங்கையில் சீனர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
இவை மட்டுமா? நிருபாமா ராவ் இலங்கையில் கால் பதிக்க இரு சீனக் கடற்படைக் கப்பல்கள் மியன்மாரில் இறங்கியது.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்ட சபைத் தேர்தலை இலக்கு வைத்து இலங்கைக்கு ஒரு அரசியல்வாதிகள் குழுவை அனுப்பி அதன் மூலம் தாம் இலங்கைத் தமிழர்களுக்கு பெரிதாக எதையோ செய்துவிட்டதாக தங்கள் ஊடக பலம் மூலம் பொய்ப்பிரச்சாரம் செய்யவிருந்தது திமுக-காங்கிரசுக் கூட்டணி. ஆனால் இலங்கையில் மாறிவரும் சூழல் வெறும் தேர்தல் நோக்கத்திற்கு அப்பால் இந்தியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு மிக அண்மையாக வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தால் தடம் மாறி அது இந்தியாவின் வெளிவிவகாரத்துறையின் விவகாரமாக மாறிவிட்டது. இம்முறை பொன்னாடை போர்த்தி ராஜபக்ச தரும் பரிசைப் பெறமுடியாது போய்விட்டது. பாவம் சிதம்பரம். இலங்கையில் தமது நிலைப்பாட்டை குறைந்த அளவாவது உறுதி செய்வதும் அங்குள்ள தமிழர்களின் மனோ நிலையை அறியவும் இந்தியா முனைப்புக் காட்டியது. நிருபாமாவின் இலங்கைப் பயணம் ஒரு தமிழர்களுக்கு திருப்பு முனையாக அமையும் என்று வாசுதேவ நாணயக்கார கூறவில்லைல்; மனோ கணேசன் கூறவில்லை; தமிழரங்கம் கூறவில்லை; இந்தியாவில் உள்ள தமிழின உணர்வாளர்கள் கூறவில்லை; கேவலம் கருணாநிதியே கூறவில்லை.

நிருபாமா ஆசனத்தில் இருந்து முன் நகர்ந்து அக்கறையுடன் கேட்டது வலம்புரியை நெகிழச் செய்துவிட்டது நல்ல வேளை முன் நகரும் போது நிருபாமாவில் மேலாடை விலகவில்லை. விலகியிருந்தால் வலம்புரி இடம்புரியாக மாறி உருகியே போயிருக்கும்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...