Thursday, 12 August 2010

பிரபாகரன் பத்மநாதனை சிறைபிடிக்க முயன்றாரா?


நேற்றைய பதிவின் தொடர்ச்சி - நேற்றைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர்
கே பத்மநாதனின் பேட்டி தொடர்பான சந்தேகங்கள்
.

  • பத்மநாதன்: ஒரு கட்டத்தில் அதிகாரிகள் என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினர். "உங்களுக்கு தற்போதைய எல்.ரி.ரி.ஈ. பற்றி எதுவும் தெரியாது" என பகிடியாக கூறினர். அவர்கள் சொன்னது சரிதான். பல வருடங்களுக்கு முந்தைய கட்டமைப்புகள் பற்றி மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. 2002 ஆம்ஆண்டுக்கு பின்னரான சூழல் குறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதை அவர்கள் உணர்ந்துகொண்டு என்னை பார்த்து சிரித்தனர்.


சந்தேகம்: நீங்கள் தமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக நடக்கிறீர்கள் என்றுணர்ந்து உங்களுக்குத் தெரியாமல் பலவற்றை விடுதலைப் புலிகள் உங்களுக்கு மறைத்தார்களா? விடுதலைப் புலிகளைப் பற்றி உங்களிலும் பார்க்க இலங்கைப் புலனாய்வுத் துறைக்கு அதிகம் தெரிந்திருந்தது என்று ஏன் பெருமையுடன் சொல்கிறீர்கள்? இதனால் விடுதலைப் புலிகள் பலவீனமாகவும் அவர்களுக்குள் பல புல்லுருவிகள் இருந்தார்கள் என்றும் சொல்ல முயல்கிறீர்களா? விடுதலைப் புலிகளைப் பற்றி அவதூறான பிரச்சாரம் ஏன்? அவர்களை இப்போது நீங்கள்தான் வழிநடத்தப் போவதாகக் கூறினீர்களே?

  • பத்மநாதன்: 2002 ஆம் ஆண்டு சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு போர் நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், தலைவர் பிரபாகரன் புலிகள் அமைப்பை புதிய வழியில் மீளமைக்க முயன்றார். இவ்விடயங்கள் குறித்து நான் வன்னிக்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என அவர் விரும்பினார்.....2001 ஆம் ஆண்டின் செப்டெம்பர் 11 தாக்குதல் உலகின் உலகின் பாதுகாப்பு நிலைவரத்தை மாற்றியிருந்தது. நான் அப்போது இலங்கைக்கு பயணம் செய்யும்' ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை....எனவே நான் தயங்கினேன். இது எனது தலைவருக்கு (பிரபாகரனுக்கு) சினமூட்டியது.

சந்தேகம்: பிரபாகரன் கே பத்மநாதனின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கைது செய்து விசாரிக்க முயன்றாரா? அதற்காகத்தான் பத்மநாதனை வன்னி வரும்படி அழைத்தாரா? இதை உணர்ந்து தான் பத்மநதன் வன்னி செல்லவில்லையா?

  • பத்மநாதன்: அது(பத்மநாதனுக்கு எதிரான) ஒரு சதி. காஸ்ட்ரோ, தமிழ்ச்செல்வன் ஆகியோர் அதன் பின்னால் இருந்தனர். கவலையளிக்கும் விதமாக தலைவர் அதில் ஏமாற்றப்பட்டார். நாம் எம்மை நேரடியாக தற்காத்துக்கொள்ள முடியவில்லை. தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். எனது விசுவாசிகள் என அவர் கருதிய அனைவரையும் அவர் நீக்கினார். சில மாதங்களுக்குள் ஏறத்தாழ அனைத்தும் மாறின. புலிகளின் விசுவாசமான செயற்பாட்டாளர்கள் பலர் அவர்களின் பதவிகளிலிருந்து முறையற்ற விதமாக நீக்கப்பட்டனர்.

சந்தேகம்: கே பத்மநாதன் இனி தமது விடுதலை இயக்கத்திற்கு சரிவர மாட்டார் என அப்போதே சகலரும் உணர்ந்து விட்டார்களா? உங்களிடமிருந்து படிப்படியாக தமது பன்னாட்டு கட்டமைப்பை மீட்டெடுக்கத்தான் இந்த நகர்த்தல்கள் மேற்கொள்ளப் பட்டதா?

  • பத்மநாதன்: இலங்கை புலனாய்வு அதிகாரிகள் என்னுடன் பேச ஆரம்பித்த போது எனக்கு இரு தெரிவுகள் இருந்தன. ஒன்று எதிர்ப்பது, இரண்டாவது ஒத்துழைப்பது. நான் மோதினால் நான் நீண்டகால சிறையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். அதனால் யாருக்கும் பலன் இருக்காது. ஆனால் நான் ஒத்துழைத்தால் நான் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கலாம். இது எமது மக்களுக்கு சில சேவைகளையாற்றுவதற்கு வாய்ப்பை வழங்கலாம்.

சந்தேகம்: ராஜபக்சேக்கள் பலதடவை சொல்லிவிட்டார்கள் தாங்கள் கொடுப்பதைப் பெற்று அதன் மூலம் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று. இந்நிலையில் உங்களால் எதை உங்களது மக்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்திய விற்பன்னர்(?) கேர்னல் ஹரிகரன் தமிழர்களுக்கு Hobson choice மட்டுமே எஞ்சியுள்ளது என்று சொல்லிவிட்டார். இந்நிலையில் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.

(சந்தேகங்கள் இன்னும் வரும்)
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...