Wednesday, 5 August 2009

காட்டுக்குள் புலிகள்: விகடன் நக்கீரன் புளுகுப் போட்டி!


விடுதலைப் புலிகளின் பலத்தைப் பற்றி விடனின் பிரசுரங்கள் 2008-ம் ஆண்டிலிருந்தே மிகைப் படுத்திக் கூறிக் கொண்டுவந்தன. இவையாவும் வெளிநாடுகளின் வாழும் தமிழர்களிடையே தனது விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் பொறுக்கித் தந்திரம். விடனுக்குப் போட்டியாக களத்தில் இறங்கியவர் நக்கீரன்.

விடுதலைப் புலிகளுடன் பணியாற்றிய "அரசறிவியலாளர்" திருநாவுக்கரசு அவர்களின் பேட்டியை அண்மையில் வெளியிட்ட விகடன் வன்னிக்காட்டுக்குள் இரண்டாயிரம் புலிகள் இருப்பதாக திருநாவுக்கரசு சொல்வதாக தெரிவித்தது. வன்னிமுகாமில் இருந்த திருநாவுக்கரசிடம் அம் முகாம்களில் நடைபெறும் மோசமான பாலியல் வதைளைப் பற்றியோ அல்லது மனித உரிமை மீறல்களைப் பற்றியோ கேட்டறியவில்லை. அதை வெளிக் கொண்டுவந்தால் அவர்களது "எஜமானர்களுக்கு" கோபம் ஏற்படலாம் என்று விட்டு விட்டதா?

இப்போது விகடனின் செய்திக்கு நக்கீரன் ஒருபடி மேலே போய்விட்டது. "புதிய பயிற்ச்சியில் புலிகள்... அதிரும் காடுகள்" என்று தலைபிட்டு ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றியும் பீற்றிக் கொண்டுள்ளது: நக்கீரனில் வெளியாகும் தகவல்களை உறவினர்கள் மூலமா போன் வழியா தெரிஞ்சுக்குறாங்க. அதுதான் இப்ப அவர்களுக்கு ஒரே ஆறுதலும் நம்பிக்கையுமாகும்.
மேலும் நக்கீரன் சொல்கிறார்: காட்டுப் பகுதியில் புது விதமான பயிற்சிகளோடு ஆயத்தமாகிவிட்ட புலிகள், இலங்கையின் முக்கிய நகரங்களை குறி வச்சுத் தாக்கத் திட்டமிட்டிருக்காங்க. முக்கியமான அரசு அலுவலகங்களும் தாக்கப்படும்.

கிளிநொச்சியை விட்டு விலகும் போது ஒரு புலிகளின் படையணி இலங்கை இராணுவ சீருடையுடன் கிளிநொச்சியில் இருந்து முதலில் தெற்குப் புறமாக நகர்ந்து பின்னர் மன்னார் காடுகளுக்குள் சென்று மறந்துள்ளது. இது இலங்கை இராணுவத்தைப் பின்புறமாக இருந்து தாக்கும் நோக்கதுடன் செய்யப் பட்டது. ஆனால் பின்னர் இப் படையணிக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. மே மாதம் பதினேழாம் திகதி இலங்கை இராணுவத்தால சுற்றி வளைக்கப் பட்ட விடுதலை புலிகள் சரணடையச் சென்ற அரசியற் பிரிவினரை கொன்றபின் பலமுனைகளில் ஊடறுப்புத் தாககுதல் செய் அல்லது செத்து மடி என்ற பாணியில் செய்து தப்பி ஓட முயற்சித்தனர். இதில் பலர் கொல்லப் பட்டதுண்டு. காயமடைந்த நிலையில் பலர் உயிருடன் புதைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் கைது செய்யப் பட்டதும் உண்டு. இதில் எத்தனை பேர் தப்பிச் சென்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
தப்பிச் சென்றவர்கள் மீண்டும் திரண்டு செயற்பாட்டில் இன்னும் ஈடுபடவில்லை. தேடிச் சென்ற இராணுவத்தினர் நூற்றி ஐம்பது பேர் கொல்லப் பட்டனர் என்பதெல்லாம் பொய் வதந்திகள். இலங்கை ஆரிய சிங்களக் கூட்டமைப்பினரிடமிருக்கும் நவீன கருவிகள் வசதிகளை மீறி புலிகள் காடு அதிரும் படி பயிற்ச்சி செய்யமுடியாது. அப்படிச் செய்தால் மோசமான எரி குண்டுகளை அக்காட்டுக்குள் வீசி எல்லோரையும் சாம்பலாக்கிவிட ஆரிய சிங்களக் கூட்டமைப்பினால் முடியும். நக்கீரனும் விகடனும் தங்கள் விற்பனையப் பெருக்கிக்கொள்ளப் போட்டியிருகின்றன.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...