ஜப்பான் நாடு பல நெருக்கடிகளுக்கு இடையில் அகப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, கிழக்குச் சீனக் கடலில் சீனாவின் விரிவாக்கக் கொள்கையால் உருவான நெருக்கடி, வட கொரியாவின் படைவலுப் பெருக்க நெருக்கடி, ஜப்பானை ஒரு போர் புரியக் கூடிய அரசாக மாற்றும் தலைமை அமைச்சர் சின்சே அபேயின் திட்டத்துக்கு மக்களிடையே தோன்றியுள்ள எதிர்ப்பால் உருவாகியுள்ள நெருக்கடி என்பவை ஜப்பானிய அரசுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன. ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் தற்போது பன்னாட்டுக் கேந்திரோபாயங்களுக்கான நிறுவனத்தின் தலைவருமான ஹிட்டோசி தனக்கா எப்படி சீனாவை கையாள்வது என்பதிலேயே ஜப்பானின் எதிர்காலம் இருக்கின்றது என்றார்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சீனா
கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். 2016-ம் ஆண்டு ஓகஸ்ட் 5-ம் திகதி சீனாவின் 230 மீன்பிடிப் படகுகளும் 13 கரையோரப் பாதுகாப்புப் கப்பல்களும் செங்காகு/டயாகு தீவுக் கூட்டங்களில் இருந்து 12 கடல்மைல்களிலும் குறைந்த தொலைவு வரை சென்று மீன் பிடிப்பில் ஈடுபட்டன. இந்தத் தீவுக் கூட்டம் யாருக்கு சொந்தம் என்பதிலிரு நாடுகளும் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு இரண்டு மாதங்களிற்கு முன்னர் சீனாவின் கடற்படைக் கப்பல் ஒன்று ஜப்பானின் சக்கிஷீமாத் தீவுக்கு அண்மையாகச் சென்றது. 2010-ம் ஆண்டு சீனக் கப்பலும் ஜப்பானியக் கப்பலும் செங்காகு தீவிற்கு அண்மையாக முட்டி மோதிக் கொண்டன. 2016 ஜூலை இறுதியில் சீனா கிழக்குச் சீனக் கடலில் உள்ள தனது எரிவாயு மேடையில் ஒரு ரடாரைப் பொருத்தியமைக்கு சீனாவிடம் ஜப்பான் தனது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது.
ஜப்பானிய மக்களால் நெருக்கடி
ஜப்பானிடம் குறிப்பிடத்தக்க அளவிலான எந்த வளமும் இல்லை. தனக்குத் தேவையான முழு எரிபொருளையும் ஜப்பான் இறக்குமதி செய்கின்றது. பெரும்பாலான கனிம வளங்களை இறக்குமதி செய்கின்றது. இவை மத்திய தரைக்கடல், ஹோமஸ் நீரிணை, மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் ஆகியவற்றைக் கடந்தே வரவேண்டியிருக்கின்றது. இது ஒரு கேந்திரோபாய வலுவற்ற நிலையாகும். சினாவால் ஜப்பானிற்கான கடற்போக்குவரத்தின் பெரும் பகுதியைத் தடை செய்ய முடியும். அது ஜப்பானின் ஏற்றுமதியையும் இறக்குமதியையும் பெரிதும் பாதிக்கும். கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் சீனா அதிகரித்துக் கொண்டிருக்கும் ஆதிக்கம் அமெரிக்காவிற்குப் பிரச்சனைகளை மட்டும் கொடுக்கும் ஆனால் ஜப்பானின் இருப்பையே அச்சத்திற்கு உள்ளாக்கும். சீனாவும் அமெரிக்காவும் தமக்கிடையே உள்ள பிணக்குகளைத் தீர்த்து படைத்துறை மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைக்கத் தொடங்கினால் ஜப்பானின் நிலை பரிதாபத்திற்கு உள்ளாகலாம். அதைத் தவிர்க்க ஜப்பான் தனது பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்றே ஆக வேண்டும். அதற்கு ஜப்பான் தனது அரசியலமைப்பு யாப்பை மாற்றி ஒரு போர் புரியக் கூடிய நாடாக தன்னை உருவாக்க வேண்டும். ஆனால் ஜப்பானில் 52 விழுக்காட்டினர் அந்த மாற்றத்தை விரும்பவில்லை. தற்போது தலைமை அமைச்சர் சின்சே அபேயிற்கு பாராளமன்றத்தின் இரு அவைக்களிலும் அரசியலமைப்பு யாப்பை மாற்றக் கூடிய பெரும்பான்மை வலு இருக்கின்றது.
ஜப்பானியப் பேரரசரால் வந்த நெருக்கடி
ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ , தான் முடி துறக்க விரும்புவதாகக் கருத்து வெளியிட்டது ஜப்பானின் அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சுட்டிக் காட்டுகின்றது. பேரரசரின் உரை ஒளிபரப்பானவுடன், அவரின் விருப்பங்களை கவனத்துடன் கருத்தில் கொள்வதாக தலைமை அமைச்சர் சின்சே அபே கூறினார். ஜப்பானின் அரசியலமைப்பு யாப்பை மாற்றி ஜப்பானை அமைதியான மக்களாட்சி என்ற நிலையில் இருந்து விலக்கி போருக்குத் தயாரான அரசாக்குவதற்கு நாட்டு மக்களிடையே உருவாகி உள்ள எதிர்ப்பு பேரரசரை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2016 ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி தொலைக்காட்சியில் தோன்றி ஜப்பானியப் பேரரசர் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை ஆற்றினார். அவருடைய முதிய வயதும், உடல் நலமின்மையும், அரசப் பணிகள் முழுவதையும் நிறைவேற்ற இயலாமல் போக செய்யுமென கவலையடைவதாக தனது உரையில் 83 வயதான பேரரசர் குறிப்பிட்டிருந்தார். ஜப்பான் ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாற்றப் படுவதை பேரரசர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஜப்பானியப் பேரரசர் அரசியலில் தலையிட முடியாது. ஆனால் அவர் தனது முடியைத் துறப்பது தலைமை அமைச்சர் அபேயிற்கு நெருக்கடியைக் கொடுக்கக் கூடியதே.
அமெரிக்கா திணித்த அரசியலமைப்பு யாப்பு
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானைக் கைப்பற்றிய அமெரிக்கா அங்கு ஆட்சியில் இருந்தவர்களை முற்றாக ஒழித்துக் கட்ட விரும்பவில்லை. ஜேர்மனியில் நாஜிகளை ஒழித்துக் கட்டிய அமெரிக்கா, உலக வரலாற்றின் மிக மோசமான போர் குற்றவாளிகளான அப்போதைய ஜப்பானிய ஆட்சியாளர்கள் சோவியத் ஒன்றியத்தின் பக்கம் சேராமல் தடுப்பதில் அதிக அக்கறை காட்டியது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஏழு ஆண்டுகள் ஜப்பானைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா ஜப்பானுக்கான அரசியலமைப்பு யாப்பை 1947இல் உருவாக்கியது. ஜப்பான் எந்த ஒரு நாட்டின் மீது படையெடுக்க முடியாமலும் ஜப்பான் ஒரு பாதுகாப்புக்கு மட்டுமான ஒரு படைத்துறையை மட்டும் கொண்டிருக்கலாம் தாக்குதலுக்கான படைத்துறையைக் கொண்டிருக்க முடியாமாலும் அரசியலமைப்பு யாப்பு வரையப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவால் ஜப்பான் மீது நிர்ப்பந்திகப் பட்ட போர் புரிய முடியாத அரசியலமைப்பு யாப்பையிட்டு அமெரிக்காவே கொரியப் போரின் போது கவலையடைந்தது. கொரியா பொதுவுடமைவாதிகளின் பிடியில் போவதை இரண்டு நாடுகளுமே விர்ரும்பவில்லை. ஆனால் தனது அரசியலமைப்பு யாப்பை சுட்டிக் காட்டி கொரியாவிலும் வியட்னாமிலும் அமெரிக்காவுடன் இணைந்து போர் செய்வதை ஜப்பான் தவிர்த்துக் கொண்டது.
பாதுகாப்புப் படையணி ஆனால் காரம் பெரியது
ஒரு பாதுகாப்புக்கு மட்டுமான படையணி என்னும் பெயரில் ஜப்பான் ஏற்கனவே உலகிலேயே மிகச்சிறந்த படைத்துறையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிடமிருந்து வாங்கிய பல நவீன போர் விமானங்கள் ஜப்பானிடம் உள்ளன. இஜுமோ ( Izumo) என்னும் பெயரில் ஜப்பான் ஒரு உலங்கு வானூர்தி தாங்கிக் கப்பலை வைத்திருக்கின்றது. ஜப்பான் ஒரு விமானம் தாங்கிக் கப்பலை வைத்திருக்க முடியாது. ஆனால் ஜப்பானின் இஜுமோ (Izumo) கப்பலில் ஐக்கிய அமெரிக்கா தற்போது உருவாக்கியுள்ள F-35 போர் விமானங்கள் ஓடு பாதை தேவையில்லாமல் உலங்கு வானூர்தி போல் எழும்பிப் பறக்கக் கூடியவை. அவற்றை அல்லது வேறு செங்குத்தாக எழும்பிப் பறக்கக் கூடிய போர் விமானங்களை ஜப்பான் தனது
இஜுமோவில் விரைவில் பாவனைக்கு உட்படுத்தி ஒரு விமானம் தாங்கிக் கப்பலாக எளிதாகவும் விரைவாகவும் மாற்ற முடியும். ஜப்பானின் சொரியு வகையைச் சார்ந்த டீசல் மின்வலு நீர் மூழ்கிக்கப்பல்கள் (Soryu-class Diesel Electric Submarines) உலகிலேயே அணுவலுவில் இயங்காத நீர்மூழ்கிக்க் கப்பல்களில் முதன்மையானவையாகும். ஜப்பானின் F-15 போர் விமானங்களும் எதிரி நாடுகளுக்கு அச்சமூட்டக் கூடியவை. அத்துடன் ஜப்பானிடம் இரண்டு வழிகாட்டல் ஏவுகணை தாங்கி நாசகாரிக்கப்பல்களும் இருக்கின்றன.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜப்பான்
உலகப் படைத் துறை தரவரிசையில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் ஏழாம் இடத்திலும் இருக்க்கின்றன. மக்கள் தொகை அடைப்படையில் சீனா ஜப்பானிலும் பார்க்கப் பத்து மடங்கு பெரியது. ஜப்பானிடம் 250,000 படையினரும் சீனாவிடம் 2,335,000 படையினரும் இருக்கின்றனர். ஜப்பானிடம் 287 போர் விமானங்களும் சீனாவிடம் 1385 போர் விமானங்களும் இருக்கின்றன. ஜப்பானிடம் 678 தாங்கிகளும் சீனாவிடம் 9150 தாங்கிகளும் இருக்கின்றன. ஜப்பானியப் படை வலுவிலும் பார்க்கச் சீனப் படைவலு பல மடங்கானதாகும். இதனால் ஜப்பான் தனது பாதுகப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஜப்பான் தனது படைவலுவைப் பெருக்குவதையும் ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறுவதையும் அமெரிக்கா பெரிதும் விரும்புகின்றது. அதன் மூலம் ஜப்பானுக்கு மேலும் படைக்கலன்களை அமெரிக்காவால் விற்க முடியும் என்பது மட்டுமல்ல ஒரு படைவலு மிக்க ஜப்பான் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் சிறப்பாக ஒத்துழைக்கவும் முடியும். ஆனால் ஜப்பானால் பெரிதும் பாதிக்கப் பட்ட அயல் நாடுகள் ஜப்பான் படைவலுவில் மீள் எழுச்சி பெறாமல் தொடர்ந்தும் அமெரிக்காவில் தங்கி இருப்பதையே பெரிதும் விரும்புகின்றன. ஜப்பானிய பேரரசின் அடக்கு முறை மிகுந்த கடந்தகால ஆக்கிரமிப்புக்கள் அதற்கான காரணமாகும். இதில் பெரும் கரிசனை கொண்டிருப்பது அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள தென் கொரியாவே. ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஜப்பான் பெரும் பாதுகாப்பு நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். 1960 -ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவும் ஜப்பானும் பாதுகாப்பு உடன்படைக்கை ஒன்றைச் செய்து கொண்டன. ஜப்பான் 2015-ம் ஆண்டு அமெரிக்கப் படையினர் ஜப்பானியப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அமெரிக்காவிற்கு 1.7 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. ஜப்பான் ஆண்டு தோறும் அமெரிக்காவிற்குச் செலுத்தும் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றார் டொனால்ட் ட்ரம்ப். ஜப்பானில் ஐம்பதினாயிரம் அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். பிரித்தானியாவும் ஜப்பானும் 2013-ம் ஆன்டு பாதுகாப்பு உபகரண ஒப்பந்தம் செய்துள்ளன. 02/12/2013 ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியக் கடற்படைத் தளபதியை சந்தித்து ஜப்பனின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடக்கும் போது பிரிதானியா ஜப்பானைப் பாதுகாக்க களத்தில் இறங்கும் என பிரித்தானியக் கடற்படைத் தளபதி உறுதியளித்தார். ஜப்பான் ஒரு முழுமையான சுதந்திர நாடாக மாறுவதற்கு டொனால் ட்ரம்ப் போன்றவர்கள் அமெரிக்காவிற்கு அதிபராக வேண்டும் என ஜப்பானின் தீவிர வலது சாரிகளும் தீவிர இடதுசாரிகளும் நம்புகின்றனர். அமெரிக்காவால் புறக்கணிக்கப் படும் போதுதான் ஜப்பான் படைத்துறையில் தன்னைத் தானே பாதுகாக்க வேண்டிய அவசியத்தை ஜப்பானிய மக்கள் முழுமையாக உணருவார்கள் என்பது அவர்களின் நிலைப்பாடு.
வட கொரிய அச்சுறுத்தல் நெருக்கடி
அணுப்படைக்கலன்களை தன் வசம் வைத்திருக்கும் வட கொரியா தனது ஏவுகணைகளையும் மேம்படுத்தி வருகின்றது. 2016 ஓகஸ்ட் மாத ஆரம்பதில் வட கொரியாவின் எறியிய ஏவுகணைகள் ( Ballistic missiles) 1000கிலோ மீட்டர் அல்லது 620 மைல்கள் தாண்டி ஜப்பானியக் கடல் எல்லைக்குள் சென்று விழுந்தமை ஜப்பானை கரிசனை கொள்ள வைத்துள்ளது. உலக வரலாற்றில் அணுக்குண்டால் தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடான ஜப்பான் வட கொரியாவின் அணுக்குண்டு வீச்சு எல்லைக்குள் இருப்பது ஜப்பானிய மக்களுக்கு மிகவும் அச்ச மூட்டக் கூடிய ஒன்றாகும். இந்த ஏவுகணைப் பிரயோகத்தை சின்சே அபே ஒரு மன்னிக்க முடியாத வன்முறை நடவடிக்கை என்றார்.
பொருளாதார நெருக்கடி
குறைந்த பிறப்பு விகிதாசாரமும் மிகக் குறைந்த குடிவரவும் கொண்ட ஜப்பானின் மக்கள் தொகை அடுத்த நாற்பது ஆண்டுகளில் மூன்று கோடிகளால் குறையவிருக்கின்றது. ஜப்பானில் இளையோர் தொகை குறைந்து வயோதிபர் தொகை அதிகரித்துக் கொண்டும் போகின்றது. அது ஜப்பானில் பொருளாதார நெருக்கடியையும் கொடுக்கவிருக்கின்றது. ஜப்பானியப் பொருளாதாரத்தினுள் ஜப்பான் செலுத்திய பல ரில்லியன் டொலர்கள் போதிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை. ஜப்பானியப் பணவீக்கத்தை இரண்டு விழுக்காட்டிற்கு உயர்த்தும் முயற்ச்சியும் வெற்றியளிக்கவில்லை. ஜப்பானியப் பொருளாதாரக் கட்டமைப்பில் சரியான மாற்றத்தையும் தலைமை அமைச்சர் சின்சே அபேயால் கொண்டு வரமுடியவில்லை. அபே ஜப்பானிய நிறுவனங்களை ஊழியர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்கும்படி வேண்டு கோள் விடுத்து ஜப்பானிய கூட்டாண்மை வரியை(corporation tax) 32இல் இருந்து 30 விழுக்காடாகக் குறைத்தார். ஜப்பானியக் கடன் பளுவும் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 250 விழுக்காடாக உள்ளது.2016-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஜாப்பானின் தேசிய உற்பத்தி வளர்ச்சி ஏதும் அடையவில்லை. ஆண்டு அடிப்படையில் 0.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இது திட்டமிட்டிருந்த 0.7விழுக்காட்டிலும் பார்க்கக் குறைவானதே. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்தவுடன் உலகச் சந்தையில் ஜப்பானிய நாணமான யென்னின் மதிப்பு அதிகரித்து. அதனால் ஜப்பானின் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது.
பன்முகப்பட்ட ஜப்பானின் நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வுகள் இல்லை.
Monday, 15 August 2016
Tuesday, 9 August 2016
புது டில்லியின் எலும்பு சுவைக்கும் நாய்களே இது இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை?
எண்பத்தி மூன்றில் இலங்கையில் நடந்தது
இனக்கொலை என்றார் இந்திரா காந்தி
இந்திய சட்டவாளர் சபையும் சொன்னது
அது இனக்கொலையே இனக்கொலையே என்று
ஆனால் இங்கு சில சில்லறைக் கைக்கூலிகள் எல்லாம்
இலங்கையில் இனக்கொலையே நடக்கவில்லையென
ஏதோ எல்லாம் சின்னத்தனமாகச் சொல்கின்றன
எலும்புத் துண்டு நக்குவதற்காகச் சொல்கின்றன
எங்கோ இருந்து துரத்தப்பட்ட
கயவர் கூட்டம் எம்மண்ணில் குடியேறியது
கட்டுப்பாடற்ற கலப்புத் திருமணங்களால்
கலாச்சார விட்டுக் கொடுப்புகளால்
கயமை தாண்டவமாடியதால்
ஓர் இனம் உருவாகியது சிங்களமென்றானது
தூய தமிழினம் சிறுபான்மையாகியது
குணரத்தினம் குணரட்னாவாக
குணசிங்கங்கள் குணசிங்கவாக
தென்னகக்கோன்கள் தென்னக்கோன்களாகின
வளவன்கள் வளவ ஆகின
கமம் என்னும் கிராமங்கள் கம என்றாக
குளம் என்னும் பொருள் கொண்ட வில்கள் வில ஆக
இனம் ஒன்று அழிவுக்குள்ளானது சிறுபான்மையானது
இனக்கொலை தொடங்கி ஆயிரம் ஆண்டுகளாகிவிட்டது
ஈனர்கள் இன்றும் தொடர்கின்றனர் இனக்கொலை
பெரும்பான்மையினத்தை வந்தேறு குடிகள்
சின்னா பின்னமாக்கிச் சிறுபான்மையாக்கியது
இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை
ஆண்டாண்டு நாம் ஆண்டு வந்த பூமியில்
வியாபாரத்துக்கென வந்த ஐரோப்பியர்
எம்மைப் பிரித்தனர் பிளவுபடுத்தினர்
காட்டிக் கொடுக்கும் கயமை மிகு
துரோகிகளைப் பயன்படுத்தினர்
எம் ஆட்சியைப் பறித்தினர்
எம் இறைமையை இல்லாததாக்கினர்
நம் நிலங்களான நன்னிலங்களை
ஒன்று படுத்தினர் ஒரு நாடாக்கினர்
அவர் எம்மை விட்டுச் செல்கையில்
எம் இறைமை எம்மிடம் இல்லை
இது இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை
எத்தனை இடர்கள் எத்தனை துயர்கள்
எத்தனை ஒதுக்கல்கள் எத்தனை புறக்கணிப்புக்கள்
அத்தனைக்கும் நடுவிலும் தனித்துவம் இழக்காமல்
தமிழினம் நின்றதால் தனித்துவம் அழிக்க
தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தனர்
அதை அமைதியாக ஆனால் ஆணித்தரமாக
தட்டிக் கேட்ட தலைவர்களை
காடையரை ஏவிக் கால்களால் உதைத்தனர்
உள்ளாடையுடன் பாராளமன்றத்தில்
கொதிந்தெழுந்து உரையாற்றினார் நாகநாதன்
அமிர்தலிங்கம் தலையில் இருந்து
இரத்தம் வடிய வடிய உரையாற்றினார்
கடைகளைக் கொழுத்தினர் கன்னியரைச் சிதைத்தனர்
குழந்தையைக் கொதிதாரில் போட்டுக் கொன்றனர்
கோவில் பூசாரியை உயிருடன் கொழுத்தினர்
இத்தனை கொடுமைகளின் பின்னரும்
இது இனக் கொலை இன்றேல்
எதுதானிங்கு இனக்கொலை
1961இல் தமிழ் நிலமெங்கும் அரசப் பொறியை
அசையாமற் செய்தது அறப்போர்
சிலாபத்து வேங்கை ஃபிரான்ஸிஸ் பெரேரா
என்னும் தமிழ்ப்போராளி கச்சேரி வாசலில் இருந்து
காவற்துறை இழுத்து எறிய எறிய15 தடவைகள்
மீண்டும் மீண்டும் பாய்ந்து வந்து படுத்தான்
கச்சேரிக் கதவு திறக்கவிடாமல் தடுத்து நின்றான்
ஆண்களும் பெண்களுமாய் அடி வாங்கி உதை வாங்கி
அகிம்சை வாழியில் அனைத்த்தும் தாங்கி
கச்சேரியை நடக்கவிடாமல் தடுத்தனர்
பின்னர் சிங்களப் படையினரை
சிறிமாவோ ஏவி தமிழர் அடக்கினர் அறப்போரை
அது இனக்கொலை இன்றேல்
இங்கு எதுதான் இனக்கொலை
எழுபத்தி நான்கில் தமிழை ஆராய்ச்சி செய்ய என
யாழ்நகரில் கூடிய தமிழர்தம் கூட்டத்தை
தடியடி செய்து கண்ணீர்ப் புகை வீசி
மின்கம்பியை வேண்டுமென அறுத்து
அப்பாவிகளை வதைத்து அக்கிரமம் புரிந்து
பதினொருவரைக் படுகொலை செய்ததமை
இனக்கொலை இன்றேல் எது இனக்கொலை
காலம் காலமாய் வளர்த்து
கலைத்தாயின் பெட்டமாய்ப் பேணி
கல்வித் தாகத்தின் தடாகமாய் போற்றி
தமிழர் துதித்த கோவிலாம் நூலகத்தை
ஓரீரவில் அமைச்சர்கள் இருவர்
சாம்பல் ஆக்கிய கொடுமையைக் கண்டு
பட்டது போதும் போராட்டம் இனி வேண்டாம்
என சலிப்படையவில்லை தமிழர்கள்
தொடர்ந்தூ போராடினார்கள்
நாம் தோற்கடிக்கப்பட்ட இனம்
எனச் சொல்லவில்லை
தொடர்ந்து போராடினார்கள்
இனக்கொலை இன்றேல்
எதுதான் இனக்கொலை
ஐந்து சின்னஞ்சிறு கைக்குழந்தைகள்,
நாற்பத்திரெண்டு பத்துவயதுச் சிறுவர்கள்,
85 பெண்கள், 28 முதியவர்கள்
அத்தனை பேரையும் அநியாயமாகச்
சத்துருக்கொண்டானில் கொன்றது
கருணைக்கொலையா இனக்கொலையா
அரச படைகள் போட்ட துண்டுப் பிரசுரத்தை நம்பி
நவாலிப் பேதுருவானவர் தேவாலயத்திலும்
முருக மூர்த்தி கோவிலிலும் தஞ்சமடைந்த
அப்பாவிகள் மேல் புக்காராவில் வந்து
குண்டு போட்டுக் கொன்றது
இனக்கொலை இன்றேல்
எது இனக்கொலை
வல்வை நூலகத்திற்கு மக்களைச்
செல்லுமாறு பணித்து விட்டு
பின்னர் அதைக் குண்டு வைத்துத் தகர்த்ததும்
குமுதினியில் பயணம் செய்த
அப்பாவி மக்களை நடுக்கடலில் மறித்து
கூரிய கத்திகளால் கதறக் கதறக் குத்திக் கொன்றதும்
வெலிகடைச் சிறைச்சாலையில் கொன்றதும்
களுத்துறைச் சிறைச்சாலையில் கொன்றதும்
யாழ் குருநகரில் கொன்று ஒழித்ததும்
அம்பாறை உடும்பன் குளத்தில் கொன்று குவித்ததும்
பிந்துருவேவாவில் பிணந்தின்னிகள் செய்ததும்
கிளாலிப் படகில் உயிர்களை கிள்ளி எறிந்ததும்
இனக்கொலையின்றேல்
எது இனக்கொலை
ஈழ விடுதலைக்கான
படைக்கலப் போராட்டம்
எமது உறுதியான போராட்டம்
மற்ற நாடுகளின் விடுதலைக்கு
முன் மாதிரியாகும் என
ஆதிக்க நாடுகள் அச்சம் கொண்டன
சக்கர வியூகத்தில் அபிமன்யுவைப் போல
எம் போராளிகளை இருபதிற்கு மேற்பட்ட நாடுகள்
வஞ்சகமாகச் சூழ்ந்து கொண்டன
அயல் நாட்டுப் படைகள் இருபதினாயிரம்
பின்கதவால் வந்து ஈழத்தில் இறங்கியது
உணவும் போகாமல் நீரும் போகாமல்
கடலிலும் நிலத்திலும் காவல் காத்தன
தமிழர்க்கு எதிரான இந்தக்கொலைகள்
இனக்கொலை இன்றேல் எதுதான் இங்கு இனக்கொலை
வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த
அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள்
பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது
பட்டறையல்ல கல்லறை இதுவென
புக்காராக்கள் சீறிவந்த சதியது
பட்டுடல்கள் சிதைய குண்டுகள்
வீசிச் சிங்களம் கொன்ற கதியது
தமிழர் வரலாறு மறக்குமோ
வஞ்சியரைக் கொன்ற வடுக்களை
தமிழனின் வலிகளை வரலாறு மறக்குமோ
அது இனக்கொலை இன்றேல் இங்கு எதுதான் இனக்கொலை
கொத்தணிக் குண்டுகள் போட்டனர்
பொஸ்பரஸ் குண்டுகளும் வீசினர்
கண்மூடித்தனமாக கண்ட இடமெங்கும்
எறிகணை மழை பொழிந்தனர்
பாடசாலைகளும் அழிந்தன
மருத்துவ மனைகளும் தரை மட்டமாகின
வழிபாட்டிடங்களும் சிதைக்கப்பட்டன
அது இனக்கொலை இன்றேன் இங்கு எதுதான் இனக்கொலை
ஒரு சிறு நிலப்பரப்பினுள் மூன்று இலட்சம் பேரை முடக்கி
உணவு மறுத்தி நீர் தடுத்து மருந்துகள்தானும் மறுத்து
குண்மழை பொழிந்து கொன்ற கொடூரம்
காயப்பட்டோரை உயிருடன் புதைத்த கொடூரம்
சரணடைய வந்தோரைச் சல்லடையாக்கிய கொடூரம்
எஞ்சியோரைத் தடுத்து வைத்து வதை செய்த கொடூரம்
இனக்கொலை இன்றேல் எதுதான் இங்கு இனக்கொலை
வந்தாரின் வயிறு நிறைத்த விருந்தோம்பிகள்
வன்னி நில முத்துக்கள்
குடிக்கக் கூட நீரின்றி வதங்கினர்
ஒரு சிறு நிலப்பரப்புக்குள்
ஒடுக்கப்பட்டனர்
எத்தன ஆண்டுகள் ஆயினும் ஆறுமோ
அந்த வடுக்கள் முள்ளிவாய்க்கால்
மகாவம்ச சிங்களத்தின் மிருகத்தனத்தின் வடிகாலானது
ஆளவிடக்கூடாது தமிழனை என்னும்
ஆரிய சாதியத்தின் உயிரோடை ஆனது
அது இனக்கொலை இன்றேன் இங்கு எதுதான் இனக்கொலை
டப்ளின் தீர்ப்பாயம் சொன்னது இனக்கொலை என்று
பிறீமன் தீர்ப்பாயமும் சொன்னது இனக்கொலை என்று
அமெரிக்கச் சட்டப் பேராசிரியர் பொயிலும்
சொன்னார் இனக்கொலை என்று
புது டில்லி வீசும் எலும்புத் துண்டை
சுவைக்கும் நாயிற் கேவலமானோரே
இது இனக்கொலை இன்றேல்
இங்கு எதுதான் இனக்கொலையாம்
Monday, 8 August 2016
படைத் துறை முதல் கட்சி அரசியல்வரை இணைய வெளி ஊடுருவல்
2016-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அமெரிக்கப் படைத்துறையினர் இணையவெளிப் படைப் பிரிவிற்கு என ஒரு கட்டளைப் பணியகத்தை உருவாக்கியதுடன் அமெரிக்கப் படைத்துறைக்கான பொதுக் கட்டளையகத்தின் ஒரு பகுதியாக இணையவெளிப் படைத்துறையையும் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கப் படைத்துறையின் இணையவெளியில் செய்யும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாக்குதல் நடவடிக்கைகளையும் மற்றப் படைத்துறைகளுடன் ஒத்திசைவு நிகழ்வுகளாக்குவதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்கப் படைத்துறை செய்துள்ளது. 6200 பேரை மொத்தமாகக் கொண்ட 133 இணையவெளிப் படையணிகள் உருவாக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டு நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. தரைப்படை, கப்பற்படை வான்படை போலவே இணைய வெளிப்படைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கும் இணைய வெளி ஊடுருவல்கள்
தற்போது எல்லா முன்னணி நாடுகளும் இணையவெளிப் படைத்துறையில் கவனம் செலுத்தும் வேளையில் இணையவெளி ஊடுருவல்கள் படைத்துறை, வர்த்தகம், விஞ்ஞான ஆராய்ச்சி, எனப் பரவி இப்போது கட்சி அரசியலுக்குள்ளும் நுழைந்துள்ளது. ஓர் அரசியல் கட்சியின் இரகசியங்களை மற்ற அரசியல் கட்சியினர் ஊடுருவி தகவல்களைப் பெற்று அவற்றை அம்பலமாக்குவது நாடுகளுக்குள் மட்டுமல்ல நாட்டு எல்லைகளையும் தாண்டிச் செல்கின்றது.
ஹிலரியின் மின்னஞ்சல் ட்ரம்பின் பொன்னூஞ்சல்
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுத்துறைச் செயலராக இருந்த போது மின்னஞ்சல்களைப் பிழையான விதங்களில் கையாண்டார் என்ற குற்றச் சாட்டு தீவிரமாக முன் வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அவர் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக தனது பணிமனை மின்னஞ்சல் வசதிகளைப் பாவித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் பல மிக இரகசியமாகச் செய்ய வேண்டிய மின்னஞ்சலூடான தகவல் பரிமாற்றங்களை தனது சொந்த மின்னஞ்சலூடாகச் செய்து அரச இரகசியங்களை ஆபத்துக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டது. ஹிலரி தான் மேற்கொண்ட மின்னஞ்சல்களை அமெரிக்க உள்துறையினரிடம் கையளிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டார். அவரும் தனது முழு கணனித் தொகுதி தொடர்பான தகவலகளை வழங்கினார். அவற்றில் முப்பதினாயிரம் மின்னஞ்சல்கள் ஏற்கனவே அழிபட்டு காணமல் போய்விட்டதாக ஹிலரி தெரிவித்தார். இதனால் முன்னாள் அமெரிக்க உள்துறைப் பாதுகாப்பு உயர் அதிகாரி ஹிலரி மிகவும் கவலையீனமாகச் செயற்பட்டார் என்ற குற்றச் சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார். அவரது கருத்து வெளிவந்தவுடன் கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருந்த ஹிலரி தனது ஆதரவுத் தளத்தை இழந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னணிக்குச் சென்றார்.
இரசியா ஹிலரியின் கட்சியை இணையவெளியில் ஊடுருவியதா?
சென்ற ஆண்டே குடியரசுக் கட்சியின் தேர்தல் பணிமனைக் கணனிகள் இரசியாவில் இருந்து இணையவெளியூடாக ஊடுருவப் பட்டு அதன் வேட்பாளரான நான்கரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான செல்வந்தர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான தகவல்களை இரசியா பெற்றுக் கொண்டதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஹிலரி கிளிண்டனை முறைப்படி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் மக்களாட்சிக் கட்சியின் தேசிய அவையின் மின்னஞ்சல்களை ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியது. அந்த மின்னஞ்சல்கள் இரசியாவில் இருந்தே ஊடுருவிப் பெறப்பட்டவை என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது. ஊடுருவல் செய்வதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் மக்களாட்சிக் கட்சியின் கணனிகள் இரசியாவில் இருந்து ஊடுருவப் படலாம் என அக் கட்சியை எச்சரித்திருந்தனர்.
பழிவாங்கினாரா அசாஞ்சே?
அமெரிக்காவின் உலக நாடுகல் பலவற்றில் உள்ள பல்வேறு தூதுவரகங்களில் இருந்து அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொண்ட விக்கிலீக்ஸ் அவற்றை அம்பலப் படுத்தி அமெரிக்க அரசுக்குப் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருந்தது. அப்போது விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேயை தண்டிக்க வேண்டும் என்பதில் ஹிலரி கிளிண்டன் தீவிரமாக இருந்தார். அதற்காக அவரது ரிஷி மூலம் சுவிஸ்ற்லாந்தில் தோண்டி எடுக்கப் பட்டு இரு பெண்களுடன் அவர் முறை தவறி உடலுறவு கொண்டார் என்ற குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு அவரைப் பிரித்தானியாவில் இருந்து சுவிஸ்ற்லாந்துக்கு நாடுகடத்தும் உத்தரவை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்த வேளை அவர் இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து இன்றுவரை அதனுள்ளே இருக்கின்றார். தனக்குத் தண்டனை கிடைக்க முன்னின்ற ஹிலரியைப் பழிவாங்க ஜூலியான் அசாஞ்சே முயன்றதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஹிலரி மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுவதைத் தடுக்க அசாஞ்சே முயன்றார் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் மக்களாட்சிக் கட்சியின் தேசிய சபையின் நிர்வாகி மின்னஞ்சல்கள் ஊடுருவப் பட்டமைக்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஹிலரியைக் காப்பாற்றினார். தங்களிடம் ஹிலரியின் மக்களாட்சிக் கட்சியினரின் பல உள்ளக மின்னஞ்சல்கள் பல மேலும் இருப்பதாக விக்கிலீக்ஸ் சொல்கின்றது. அவற்றைத் தாம் படிப்படியாக வெளிவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டுகின்றார்கள். இரசியாவிடமிருந்தா இந்த மின்னஞ்சல்களைப் பெற்றீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
இரசியாவை ஊடுருவச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்
மக்களாட்சிக் கட்சியின் தேசியப் பணிமனையை இரசியாவில் இருந்து இணையவெளியூடாக ஊடுருவப்பட்டது என்ற செய்தி தீவிரமாக அடிபடும் வேளையில் மிகவும் சர்ச்சைகுரிய கருத்துக்களை மிகவும் இலகுவாக முன்வைப்பதற்குப் பெயர் போன டொனால்ட் ட்ரம்ப் ஹிலரியின் கணனித் தொகுதிகளை இரசியா ஊடுருவி காணாமற் போன முப்பதினாயிரம் மின்னஞ்சல்களைக் கண்டு பிடித்து அவற்றை ஊடகங்களுக்குக் கொடுக்காமல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையிடம் கையளிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். ஏற்கனவே இரசியாவுடன் பல வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டு டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக முன்வைக்கப் படுகின்றது. இரசியாவிற்கு ஏற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அவர் இருப்பார் என்ற கருத்து இப்போது இரசியாவில் பகிரங்கமாகவும் பரவலாகவும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தி அட்லாண்டிக் என்ற ஊடகம் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியை இரசியாவின் கட்சியாக மாற்றிவிட்டார் என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையையும் வெளிவிட்டிருந்தது.
ஒத்துவராத கிலரியும் புட்டீனும்
விளடிமீர் புட்டீன் இரசியாவின் தலைமை அமைச்சராக இருந்த போதே அவருக்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் இடையில் ஒத்து வராது. ஹிலரி அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது புட்டீனுடன் கடுமையாகவே நடந்து கொண்டார். விளடிமீர் புட்டீன் தேர்தலில் முறைகேடுகள் செய்தே இரசியாவின் அதிபரானார் என்ற குற்றச்சாட்டையும் ஹிலரி முன்வைத்திருந்தார். அந்த தேர்தல் முறைகேடாக நடந்தது என ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக் கூடியவகையிலும் ஹிலரி பேசியிருந்தார். 2010-ம் ஆண்டு இருவரும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டில் பேச முன்னர் ஹிலரியை புட்டீன் வேண்டுமென்றே நீண்ட நேரம் காக்க வைத்திருந்தார். ஹிலரியின் உரைகளை எழுதுபவர் ஓர் இரசிய வெறுப்பாளரானவர் ஆவார். உக்ரேன் விவகாரத்தில் புட்டீனை ஹிலரி ஹிட்லருக்கு ஒப்பிட்டிருந்தார். அது தொடர்பாக பிரெஞ்சு ஊடகம் புட்டீனிடம் கேள்வி எழுப்பிய போது பெண்களுடன் வாதிடுதல் வேண்டாம் என்றார் புட்டீன்.
டொனால்ட் ட்ரம்பிற்கு இரசியா உதவுகின்றதா?
தற்போது அமெரிக்கத் தேர்தல் களத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வி இரசியா நேரடியாக அல்லது மறை முகமாக அல்லது இரண்டு வழியிலும் டொனால்ட் ட்ரம்பிற்கு உதவி செய்கின்றதா என்பதுதான். இரசியப் படைகள் உக்ரேனுக்குள் போகாது என டொனால்ட் ட்ரம்ப் முதலில் தவறுதலாகச் சொல்லியிருந்தார். பின்னர் உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமையை தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றார். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தான் நீக்குவேன் என்றார். எஸ்தோனியா போன்ற சிறு நாடுகளை இரசியா ஆக்கிரமித்தால் அதை தான் குடியரசுத் தலைவராக வந்தால் தடுக்கப் போவதில்லை என்றார். இவையாவும் இரசியாவிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக டொனால்ட் ட்ரம்பை மாற்றியுள்ளன. நேட்டோவின் உடன்படிக்கையின் படி ஒரு நாடு அந்நிய நாடு ஒன்றினால் தாக்கப் பட்டால் மற்ற நேட்டோவின் உறுப்பு நாடுகள் தமது நாட்டுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப்பட்டது போல் அதை எடுத்து தாக்கப்படும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானால் நேட்டோ உடன்படிக்கைக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேட்டோவின் விழ்ச்சி இரசியாவிற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்து மீண்டும் சோவியத் ஒன்றியம் போல ஒரு பெரும் நாடுகளின் கூட்டமைப்பைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கனவு நனவாகலாம். கட்சிகள் ஒன்றின் இணையவெளியில் ஊடுருவுதல் ஒரு நாட்டுக்குள் நடப்பது என்பதைத் தாண்டி இன்னும் ஒரு நாட்டில் இருந்து ஊடுருவி தகவல்களைத் திருடுதல் 2016 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் இரசியாவிற்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் உள்ள தொடர்புகளுக்கும் தொடர்புண்டா? உலகப் பூகோள அரசியலை ட்ரம்ப் சரியாக அறிந்து வைத்திருக்காத படியால்தான் அவர் உக்ரேன் தொடர்பாக தவறுதலாகவும் தப்பாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றார். 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜெரால்ட் போர்ட் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கம் இல்லை எனச் சொன்னது அவர் புவிசார் அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற கண்டனத்துக்கு உள்ளாகியதுடன் அவரது தோல்விக்கும் வழிவகுத்தது. டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்தமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவர்களாகும்.
ட்ரம்பின் வர்த்தகமும் இரசியாவும்
ஹிலரியின் மக்களாட்சிக் கட்சியின் கணனிகள் ஊடுருவப்பட்டமை இரசியாவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன என இரண்டு தனியார் நிறுவனங்கள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் "TRUMP TOWER." "TRUMP," "TRUMP INTERNATIONAL HOTEL AND TOWER," "TRUMP HOME", "THE TRUMP CREST DESIGN." ஆகிய வர்த்தகப் பெயர்களை இரசியாவில் காப்புரிமை செய்ய விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் எண்ணியிருந்த எந்த ஒரு கட்டிடமும் இரசியாவில் கட்டப்படவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டு இரசியாவில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்தும் உரிமம் ட்ரம்பின் நிறுவனம் ஒன்றிற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதை ஒட்டி ட்ரம்ப் தனது டுவிட்டரில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் திகதி புட்டீன் தனது நண்பராகப் போகின்றார் எனத் தெரிவித்திருந்தார். 2008-ம் ஆண்டு ட்ரம்ப் புளோரிடா மாநிலத்தில் உள்ள தனது மாளிகையை இரசியச் செல்வந்தர் ஒருவருக்கு 94மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து 54மில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டியிருந்தார். 2013-ம் ஆண்டு ட்ரம்ப் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழில் இரசிய அதிபர் புட்டீனைப் பாராட்டி ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். ட்ரம்பின் தேர்தல் பரப்புரை முகாமையாளர் இரசியாவின் கைப்பொம்மையாக உக்ரேனில் அதிபராக இருந்த விக்டர் யனுக்கோவிச்சின் ஆலோசகராகவும் இருந்தவர். விக்டர் யனுக்கோவிச் தற்போது இரசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். 2016 ஓகஸ்ட் மூன்றாம் திகதி டொனால்ட் ட்ரம்பிற்கு பொது மக்களிடம் இருந்து அதிக நிதி கிடைத்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அது ஹிலரியின் நிதிக்கு இணையானதாகவும் இருக்கின்றது. ட்ரம்பிற்கு வெளிநாட்டில் இருந்து காசு வருகின்றதா?
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் இணையவெளி ஊடுருவல்கள் ஹிலரிக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கவிருக்கின்றது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

Monday, 1 August 2016
உலக நகரங்களும் அச்சத்திற்குள்ளான இலண்டனின் உச்ச நிலையும்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில்
இருந்து வெள்யேற வேண்டும்
என்ற கருத்துக் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர்
இலண்டன் மாநகர் உலகின்
முன்னணி நகரமாக தொடர்ந்து
இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து
பிரித்தானிய வெளியேறிய பின்னர்
பல பன்னாட்டு நிறுவனங்கள்
ஐரோப்பாவின் மிகப்பெரிய நிதிச்
சந்தையைக் கொண்டிருக்கும் இலண்டனில்
இருந்து வெளியேறலாம் என்ற
அச்சம் பரவலாக நிலவுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா
இருக்கும் வரையில் இலண்டன்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஐரோப்பாவின்
அசைக்க முடியாத முதற்தர
நகராக இருந்தது. பிரித்தானிய வெளியேற்றக்
கருத்தின் வெற்றியின் அதிர்ச்சியில்
இருந்து பிரித்தானியப் பொருளாதாரம்
மீள இன்னும் சில
ஆண்டுகள் கூட எடுக்கலாம். அது முன்னணி
உலக நகரான இலண்டனை எப்படிப்
பாதிக்கப் போகின்றது?
நாடுகளிலும் பெரிய நகரம்
இலண்டன் பொருளாதாரம் ஈரான்,
சுவீடன் போன்ற நாடுகளின் பொருளாதாரத்திற்கு இணையாகும் அளவில் பெரியது.
அது
2015-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 8,615,246 மக்களைக் கொண்ட
ஒரு மாநகரமாகும். அங்கு 841,000 தனியார் நிறுவனங்கள்
உள்ளன. இரண்டாம் உலகப் போரின்
பின்னர் மற்ற ஐரோப்பியப் பெரு
நகரங்களை முந்திக் கொண்டு
இலண்டன் சேவைத் துறையில்
முன்னணி நகரமாகிவிட்டது. பிரித்தானிய அரசு
தனது வருமானத்திற்கு இலண்டனில்
தங்கியுள்ளமை அதிகரித்துக் கொண்டே
போகின்றது. 2005-ம் ஆண்டு பிரித்தானிய
அரச வருமானத்தில் 5 விழுக்காடு
இலண்டனில் இருந்து பெறப்பட்டது.
2015-ம் ஆண்டு அது 30ஆக
அதிகரித்துவிட்டது. இலண்டனில் இருந்து
கிடைக்கும் வருமானம் மற்றப்
பெரிய 37 நகரங்களின் மொத்த
வருமானத்திற்கு ஈடானதாகும்.
உலக நகரம் என்றால் என்ன?
உலக நகரம் என்பதற்கு வேறு
வேறு நிறுவனங்களும் நிபுணர்களும்
வேறு வேறு வரைவிலக்கணங்களைக் கொடுத்துள்ளனர்.
1.
சிறந்த பங்குச் சந்தையும்
நம்பகரமான வங்கித்துறையும்
2.
பொருளாதாரத்தை சரியாக அளவிடக்
கூடிய பங்குச் சுட்டெண்
3.
உலக அரசியலில் செல்வாக்குக்
செலுத்தக் கூடிய அரசு
4.
சிறந்த ஊடகங்கள்
5.
சிறந்த கலாச்சார மையங்கள்
6.
சிறந்த போக்கு வரத்து
வசதிகள்
7.
பன்னாட்டு விமான நிலையங்கள்
8.
வனாளாவிய கட்டிடங்கள்
9.
திறன் மிக்க ஊழியர்களை இலகுவில்
பெறுதல்
10.
பன்னாட்டு மாநாடுகள் நடத்தக்
கூடிய வசதி
ஆகியவை ஒரு உலக நகரத்தில்
இருக்கும். இவற்றை எல்லாம் இலண்டன்
மாநகரம் கொண்டிருப்பதுடன் பல
நாடுகளில் உலக வர்த்தகங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தை எழுதவும்
பேசவும் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
உலக நகரங்கள்
A.T.
Kearney என்ற பன்னாட்டு முகாமைத்துவ
ஆலோசனை நிறுவனம் உலக
நகரங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
அதன் 2015-ம் ஆண்டிற்கான தரவரிசைப்
பட்டியலில் முதலாமிடத்தில் நியூயோர்க்,
இரண்டாம் இடத்தில் இலண்டன்,
மூன்றாம் இடத்தில் பரிஸ்,
நான்காம் இடத்தில் டோக்கியோ,
ஐந்தாம் இடத்தில் ஹொங்கொங்,
ஆறாம் இடத்தில் லொஸ்
ஏஞ்சலிஸ், ஏழாம் இடத்தில் சிக்காக்கோ,
எட்டாம் இடத்தில் சிங்கப்பூர்,
ஒன்பதாம் இடத்தில் பீஜிங்,
பத்தாம் இடத்தில் வாஷிங்டன்
ஆகியவை இருக்கின்றன. தனிமனித நலங்கள்,
பொருளாதாரம், கண்டுபிடிப்புக்கள், நல்லாட்சி ஆகியவற்றை
அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் எவை உலக நகரங்களாக
இருக்கப் போகின்றன என்பதையும்
அந்த நிறுவனம் பட்டியலிட்டுள்லது.
அதில் சன் பிரான்சிஸ்கோ முதலாமிடத்திலும்,
இலண்டன் இரண்டாம் இடத்திலும்,
பொஸ்டன் மூன்றாம் இடத்திலும்
நியூயோர்க் நன்காம் இடத்திலும்
சூரிச் ஐந்தாம் இடத்திலும்,
ஹுஸ்டன் ஆறாம் இடத்திலும் மியூனிச்,
ஏழாம் இடத்திலும் ஸ்ரொக்கோம்
எட்டாம் இடத்திலும் அம்ஸ்ரடம்
ஒன்பதாம் இடத்திலும் சியோல்
பத்தாம் இடத்திலும் இருக்கின்றன.
பரிஸும் பீஜிங்கும் முதற்பத்து
இடங்களில் இருந்து காணாமல்
போய்விடும். கண்டுபிடிப்பில் சன்
பிரான்சிஸ்கோ தன்னிகரில்லாமல் இருக்குமாம்.
Instititute for Urban Strategies என்ற தன்னார்வுத் தொண்டு
நிறுவனம் வெளிவிட்ட Global Power City
Index 2015இல் இலண்டன் முதலாம்
இடத்தில் இருக்கின்றது. சி.என்.என் ஊடகம்
இலண்டன் உலகின் முதற்தர
நகரமாக இருப்பதற்கு ஐம்பது
காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.
இலண்டனின் சிறப்பு
பல முன்னணி உலக
நிறுவனங்கள் இலண்டனில் இருந்து
செயற்படுகின்றன. Fortune
500 எனப்படும் ஐநூறு நிறுவனங்களில் 75 விழுக்காடு
நிறுவனங்கள் இலண்டனில் இருந்து
செயற்படுகின்றன. உலகின் சிறந்த
விமான நிலையமாக ஹீத்ரூ
விமான நிலையம் திகழ்கின்றது.
இலண்டன் நகரின் 40 விழுக்காடு
நிலம் பசுமையானது. சிறந்த பூங்காக்களைக்
கொண்டது. எந்த நாட்டுச் சாப்பாடுகளையும் வாங்கக் கூடிய நகராக
இலண்டன் இருக்கின்றது. இலவச நுழைவு
அனுமதியுடன் 240 அருங்காட்சியகங்கள் இலண்டனில்
இருக்கின்றன. உலகில் பிரெஞ்சு மக்கள்
வசிக்கும் நகரங்களில் இலண்டன் ஆறாவது இடத்தில் இருக்கின்றது. பிரான்ஸில் உள்ள பல
நகரங்களிலும் பார்க்க இலண்டனின் அதிக அளவு பிரெஞ்சு மக்கள் வசிக்கின்றார்கள். இலண்டனில் வசிப்பவர்களில்
37 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்
என்பதால் உலகக் கலாச்சார நகரமாக
இலண்டன் இருக்கின்றது. முன்னூற்றுக்கும்
மேற்பட்ட மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. 43 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. ஐநூறு
திரை அரங்குகள் இலண்டனில் உண்டு. உலகக் கலைகள் கலாச்சாரங்கள், வர்த்தகம், விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப
மேம்பாடு ஆகியவற்றின் முக்கிய நகரமாக முன்னணி நகரமாக இலண்டன் இருக்கின்றது.
இலண்டனும் உலக நேரங்களும்
வேலை நேரம் எனப் பார்க்கும்
போது இலண்டன் உலக
வர்த்தகத்திற்கு உகந்ததாக இருக்கின்றது.
இலண்டன் நகர நிதிச் சந்தை
காலை திறக்கும் போது
தூர கிழக்கு நாடுகளில்
உள்ள நிதிச்சந்தையும் திறந்திருக்கும்.
நியூயோர்க்கில் சந்தை திறக்கும் போது
தூர கிழக்கு நாடுகளில்
மக்கள் ஆழ்ந்த நித்திரையில்
இருப்பார்கள். நியூயோர்க் நிதிச்சந்தை
காலை திறக்கும் போது
இலண்டன் நிதிச் சந்தை
உச்சக் கட்டப் பணியில்
இருக்கும். Deloitte, Ernst & Young, KPMG,
PricewaterhouseCoopers, ஆகிய உலகின் முன்னணி
கணக்காய்வு நிறுவனங்கள் சிறந்த
நிதிச் சந்தையாக இலண்டனையே
கருதுகின்றனர்.
இலண்டன் இடங்களும் பொருள்களும்
இலண்டனிலும் அமெரிக்காவிலும் இடங்களின்
பெயர்கள் வேறுவிதமான பொருளைக்
கொடுக்கும். Whitehall
என்றால் பிரித்தானிய அரசு
எனப் பொருள்படும். முக்கிய பிரித்தானிய
அரச பணிமனைகள் Whitehall என்ற
தெருவில் அமைந்திருப்பதால் பிரித்தானிய
அரசி Whitehall என்னும் பெயரால்
அழைக்கின்றனர். Downing Street என்றால் பிரித்தானிய
தலைமை அமைச்சகம் என்று
பொருள்படும். இந்தத் தெருவின்
பத்தாம் இலக்கத்தில் தலைமை
அமைச்சரின் பணிமனையும் உறைவிடமும்
அமைந்துள்ளது.
Fleet
Street என்றால் பிரித்தானிய ஊடகத்
துறை எனப் பெருள்படும். முன்னணி அச்சு
ஊடகங்களின் பணிமனைகள் இந்தத்
தெருவில் அமைந்துள்ளன. City என்றால்
இலண்டனின் நிதிச் சந்தை
என்று பொருள்படும். இலண்டன் மையவங்கியான
Bank of Englandஐச் சுற்றவுள்ள ஒரு
மைல் சுற்றாடல் Cityஆகும்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை City என்பது
ஒரு பெரும் தேவாலயத்தைக்
(cathedral) கொண்டிருக்க வேண்டும். பிரித்தானிய மைய
வங்கியான Bank of Englandஐ The Old Lady எனவும்
அழைப்பர். The Old Lady of
Threadneedle Street என்பதும் அதன் இன்னொரு
பெயராகும்.
சீனாவின் தெரிவு இலண்டன்
சீனா தனது ரென்மின்பி நாணயத்தை
உலக நாணமாக்குவற்கான முயற்ச்சிக்கான தளமாக இலண்டன் நிதிச்
சந்தையையே தெரிந்தெடுத்தது. பிரித்தானியா ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து வெளியேறிப
பின்னர் சீனா தனது நிலைப்பாட்டை
மாற்றவில்லை. பிரிவெளியேற்றம் முடிவு
செய்யப்பட்டபின்னர் சில உலக
நிதி நிறுவனங்கள் முழுமையாக
தமது வர்த்தகத்தை இலண்டனில்
இருந்து வெளியேற்றாமல் தமது
ஊழியர்கள் சிலரை மட்டும் பிராங்பேர்ட்,
டப்ளின், பரிஸ், அம்ஸ்ரடம், லக்சம்பேர்க் போன்ற
நகரங்களுக்கு மாற்றின. பிரித்தானியா ஐரோப்பிய
ஒன்றியத்துடன் இனிவரும் காலங்களில்செய்ய விருக்கும் பேச்சு வார்த்தைகளின்
முடிவைப் பொறுத்தே மற்ற
சில உலக நிறுவனங்கள் இலண்டனில்
தாம் தொடர்வதா அல்லது
தமது நடவடிக்கைகளைக் குறைப்பதா
என்பது பற்றி முடிவு செய்யும்.
இலண்டனில் தமது நடவடிக்கைகளை முற்றாக
மூடிவிடும் நிலையில் எந்த
உலக நிறுவனங்களும் இல்லை.
இலண்டனில் 15,000 பேரை வைத்திருப்பதா அல்லது
5,000 பேரை வைத்திருப்பதா என்பது
பற்றித்தான் சில நிறுவனங்கள் முடிவெடுக்கும்.
பிரிவெளியேற்றப் பாதிப்பு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில்
இருந்து வெளியேறிய பின்னர்
பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு என்ன
நடக்கும் என்ற அச்ச நிலை
எல்லாத் துறையினரையும் கலங்க
வைத்துள்ளது. தற்போது பிரித்தானியாவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல
உலக நிறுவனங்களின் யூரோ
நாணம் தொடர்பான பல
வர்த்தகங்களை இலண்டன் இழக்க
நேரிடும். ஐரோப்பிய ஒன்றிம் என்பது
இறுக்கமான கட்டுப்பாடுகளை எல்லாத்
துறைகளுக்கு விதித்துக் கொண்டுள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில்
இருந்து வெளியேற வேண்டும்
என்பதற்கு ஆதரவு வழங்கிய பல
உலக நிதி நிறுவனங்கள் ஐரோப்பிய
ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை பெரிதும்
வெறுத்தன. அவை இனி இலண்டனில்
தமது வர்த்தகத்தை அதிகரிக்கும்.
உலக அரங்கில், நியூயோர்க், டோக்கியோ, ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகிய
நகரங்களில் செயற்படும் நிறுவனங்களுடன் அவை இனி திறமையாகப்
போட்டி போட முடியும். இலண்டன் தனது
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம்
ஐரோப்பிய நிதிச் சந்தையில்
தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து
தக்க வைக்கலாம். அந்தக் கட்டுப்பாடு
குறைந்த நிலையில் உலகெங்கும்
இலண்டனின் நிதித் துறை
மேலும் விரிபு படுத்தலாம்.
இலண்டன் வருமானவரிப் புகலிடமாகலாம்
பிரிவெளியேற்றத்தின் பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள்
இலண்டனில் இருந்து வெளியேறாமல் இருக்க கூட்டாண்மை (Corporates) நிறுவனங்களுக்கான வரி கடுமையாகக் குறைக்கப்படலாம். 20விழுக்காடான
கூட்டாண்மை வரி இருக்கும் போதே G-7 நாடுகளில்
பிரித்தானியாவில் தான் கூட்டாண்மைகளுக்கான குறைந்த வரி இருந்தது.
பிரிவெளியேற்றத்துடன் அது 15ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் பல வரிச்சலுகைகள்
வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு பிரித்தானியாவில் ஒரு
ரில்லியன் டொலர்கள் பெறுமதியான் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டன. இதன் மூலம் 85,000
வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன.
ஹொங்கொங் தீவு பிரித்தானியாவிற்கான குத்தகை முடிந்து
சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது அது முன்னணி நிதிச் சந்தை என்ற நிலையை இழக்கும்
என்ற பூச்சாண்டி 1997இல் முன்வைக்கப்பட்டது பொய்யாகிப் போனது. ஐரோப்பிய ஒன்றியம்
உருவாக முன்னரும் இலண்டன்
உலகின் முன்னணி நகரமாக
இருந்தது. இலண்டன் இரு உலகப்
போர்களையும் 1930களில் ஏற்பட்ட
உலகப் பொருளாதார மந்த
நிலையையும் தாக்குப் பிடித்த
இலண்டனால் ஐரோப்பிய ஒன்றிய
வெளியேற்றத்தில் இருந்தும் தாக்குப்
பிடிக்க முடியும் எனப்
பல பொருளாதார நிபுணர்கள்
எதிர்வுகூறுகின்றனர்.
Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...