Saturday, 9 May 2009

வன்னியில் - இறந்தவர் மீண்டெழுந்த அதிசயம்


பிரபாகரனை அவரது தளபதி மாத்தையா கொன்றுவிட்டார் என்று இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டு பல ஆண்டுகள் சென்று விட்டன. பிரபாகரன் சுனாமியில் அடித்துச் செல்லப் பட்டுவிட்டதாகவும் இந்துப் பத்திரிகை அறிவித்தது. இறந்து உயிர்த்தெழுபவர்கள் தெய்வப் பிறவிகள் என்று சொல்வோரும் உண்டு.
விடுதலைப் புலிகளின் இராணுவத் துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையனை இலங்கை இராணுவத்திற்கு உளவு பார்த்தமையால் அவரைப் பகிரங்க இடத்தில் வைத்து மக்கள் முன் சுட்டுக் புலிகள் கொன்றதாக இலங்கை அரசு சென்ற மாதம் அறிவித்தது. இத்தகவலை இலங்கை அரசு வன்னியில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மகிழ்ந்தன.
இளந்திரையன் இப்போது உயிர்த்தெழுந்து வந்து அவுஸ்ரேலியாவில் இருந்து வெளி வரும் தமிழ் வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

இந்தியாவின் குட்டு உடைகிறது. இலங்கைக்கு பல இராணுவ உதவிகள்






இலங்கைக்கு இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளுடன் விடுதலைப்புலிகளை ஒழிக்க பல வகைகளிலும் உதவியது என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு இராணுவப் பயிற்ச்சி ராடார், உளவுத் துறைத் தகவல் என்பனவற்றை வழங்கியதுடன் விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிப்பதிலும் பல வகைகளிலும் உதவியது என்று அவர் கூறினார். புலிகளின் சர்வதேச கட்டமைப்பையும் இந்தியாவின் உதவியோடே சிதறடிக்கப் பட்டதென்றும் ரணில் கூறினார்.
யாருக்கு வாக்களித்தாலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்!
.
வரும் தேர்தலில் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
.
வீரத் தமிழன் முத்துக்குமாரை விதைத்தோம்! காங்கிரசை ஆழக் குழிதோண்டிப்புதைப்போம்
!

களைத்தாலும் சளைக்காத பிரித்தானியத் தமிழர்.


பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கம் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன்பாகவும் டயானாவின் இறுதிக்கிரியை நடந்த Westminster Abbey இற்கு அருகிலும் இருக்கிறது. தினமும் பல்லாயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் இங்கு வந்து பிக் பென் கடிகாரத்துடன் படமெடுத்துக் கொள்வர்.

பிக்பென் கடிகாரம் 12 மணிகாட்டுகிறது. வெள்ளிக்கிழமை விடை பெறுகிறது சனிக்கிழமை வருகிறது. நடன அரங்குகளிலும் விடுதிகளிலும் மதுபானச் சாலைகளிலும் உல்லாசங்கள் ஓய்கிறது. இலண்டன் நகரம் கேளிக்கையில் களைக்கிறது. களைத்தாலும் சளைக்காமல் நள்ளிரவிலும் பல நுாற்றுக் கணக்கான தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரம் மைல்களுக்க அப்பால் பரிதவிக்கும் தம் உறவுகளுக்காக. இது ஒரு மாதத்திற்கு மேலாக நடக்கிறது.

கடந்த ஏப்ரல் ஆறாம் திகதிபாராளமன்ற சதுக்கத்தில் சில மணித்தியாலங்களில் முடிப்பதாக அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்பாட்டம் ஈழத்தில் ஆயிரக் கணக்கில் அப்பாவித் தமிழர்கள் வேதியியல் ஆயுதங்கள் பாவித்து கொல்லப் பட்டனர் என்ற சேதி வந்தவுடன். கைத்தொலைபேசிகளூடாகப் பல குறுந்தகவல்கள் பறந்தன. மேலும் பல தமிழர்கள் அங்கு திரண்டனர். தாம் தெருவில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள் முதலில் காவல் துறையினரிடம் மன்றாட்டமாகக் கேட்டனர். அவரகள் மறுக்கவே அவர்களைத் தள்ளி விட்டு சாலை மறியல் போராட்டத்தில் கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் ஈடுபட்டனர். இரவு முழுக்க இது தொடர்ந்தது. மறுநாள் காலை கலைந்து செல்லும் படி காவலர்கள் விடுத்த வேண்டு கோளிற்கு செவி சாய்க்கவில்லை. விளைவு பெரும் போக்கு வரத்து நெருக்கடி. காவலர்கள் பின்னர் அவர்களை பலவந்தமாக அப்புறப் படுத்தினர். ஆனால் தமிழர்கள் பாராள மன்ற சதுக்கத்தில் மீண்டும் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில பாராளமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொடுத்தனர். இந்த ஆர்பாட்டம் இன்று வரை தொடர்கிறது. இரவு பகலாக நடக்கிறது. பல பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பபை இடை நிறுத்திவிட்டு இங்கு தினசரி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முகங்களில் தெரிகிறது அவர்கள் எவ்வளவு துாரம் களைத்துப் போய் இருக்கின்றனர் என்று. களைத்தாலும் அவர்கள் சளைக்கவில்லை.

Friday, 8 May 2009

சட்ட விரோதச் செயலுக்கு இந்தியா 100கோடி தமிழ்நாடு 25 கோடி.


இலங்கை அரசு சட்டத்திற்கு விரோதமாகவும் பன்னாட்டு நியமங்களுக்கு எதிராகவும் 192000 தமிழர்களை தடுத்து வைத்திருக்கிறது. இங்கு இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்திருந்து சொல்லோணாக் கொடுமைகளைச் செய்து வருகிறது. பெண்கள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு. சிசுக்கள் கொல்லப் படுவதாகவும் தகவல். நாளைய புலிகள் என்று!!! மனைவிகள் கணவன்மார்களிடமிருந்து பிரிக்கப் பட்டு பாலியல் வதை. இராணுவத்தினர் வீடுகளில் கொத்தடிமைகள். படையினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குளிக்க வேண்டும் உடை மாற்ற வேண்டும்.

இளைஞர்கள் தனியாக்கப் பட்டு நிர்வாணமாக்கப் பட்டுஇருவரை ஒன்றாகச் சேர்த்து கைகால்கள் கட்டப் பட்டு வைக்கப் பட்டுள்ளனர்.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையுடன் நல்ல நட்புறவைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக்கேடு.
இந்தக் கொடுமைகள் புரியும் இலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டைப் பேண விரும்புகிறது இந்தியா!!! வெட்கக் கேடு!!! வெட்கக் கேடு!!!
இத்தோடு நிற்கவில்லை இந்தியாவின் வெட்கங் கெட்ட செயல். கேவலமான இலங்கைக்கு இப்போது மோசமான பொருளாதாரப் பிரச்சனை. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதில் தாமதம். இப் பிரச்சனையை தீர்க்க இந்திய ஆட்சியாளர்கள் ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றனர். இடைத்தங்கல் முகாம் எனப்படும் வதை முகாம்களைப் பராமரிக்க என்று சொல்லி இந்திய மத்திய அரசு 100கோடியும் உண்ணாவிரத நாடகக் கலைஞரின் அரசு 25 கோடியும் கொடுத்து உதவிசெய்ய விருப்பதாக இலங்கைப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
16 தொகுதிகளிலும் காங்கிரசு தோற்கட்டும்.

மாபெரும் இனக்கொலைத் திட்டம்


இனிவரும் இறுதிப் போரில் இலங்கை இராணுவம் பாரிய இழப்பைச் சந்திக்கவிருக்கிறது. அப்படி ஒரு சந்தர்பத்தைப் பயன் படுத்தி மும் முனைத் திட்டம் கொண்ட இன அழிப்பு நடக்க விருக்கறது.
.
பயங்கர ஆயுதப் பிரயோகம்
ஒரு திட்டம் போர் முனையில் பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப் பயன் படுத்தி தமிழர்களைக் கொன்று குவித்தல். இதற்கான ஆயுதங்கள் இப்போதே குவிக்கப் பட்டுள்ளன. இடைத் தங்கல் முகாம்களில் உள்ள மக்களைப் பராமரிப்பதற் கென்ற போர்வையில் இந்தியா பல கோடி ரூபாக்களை இந்தியா வாரி இறைக்கவிருக்கிறது. இப் பணம் மேலும் பயங்கர ஆயுதங்களை பாக்கிஸ்தானிடமிருந்து வாங்கவிருக்கிறது.
.

இடைத்தங்கல் முகாம்களில் கலவரம்
1983இல் வெலிகடைச் சிறைச்சாலையில் செய்தது போல இடைத்தங்கல் முகாம்களில் பாரிய கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பெரும் தமிழின அழிப்பை ஏற்படுத்துதல்.
.

நாடாளாவிய இனக் கலவரம்
நாடாளிவிய ரீதியில் ஒரு இனக் கலவரம் ஏற்படுத்தி தமிழர்களுக்கு பெரும் உயிரழிப்பும் சொத்தழிப்பும் ஏற்படுத்துதல். இதன் மூலம் பொருளாதாரப் பிரச்சனையால் தவிக்கும் சிங்களக் காடையர் கூட்டத்தின் பணப் பிரச்சனையையும் தீர்கும் திட்டமும் அடங்கும்.
இனிப் பல தலைமுறைக்கு தமிழர்கள் உரிமைப் போராட்டத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் முடியாமல் செய்வோம் என்று கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கூறியதை இங்கு நினைவு

Thursday, 7 May 2009

கணவனுக்கு 40வது பிறந்த நாள் பரிசு - ஒரு வருட உன்னத பாலியல் உத்தரவாதம்



பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுப்பது என்பது பலருக்கு பெரிய பிரச்சனை. சார்லா என்ற அமெரிக்காவின் வட கரோலினாவைச் சேர்ந்த பெண் ஒரு புதுமையான பரிசாகத் தனது கணவனின் 40வது பிறந்த நாளுக்கு வழங்கினார்.
அவர் கொடுத்த பரிசு ஒரு வருட கட்டிலின்பத்திற்கான உத்தரவாதம். இதை அவரது கணவர் பிரட் முல்லர் தனது 365 இரவுகள் என்ற நூலில் வெளியிட்டுள்ளார்.
.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
.
முகநூலில் (Facebook) அழவைத்த அறிமுகம்

முக நூலில் நண்பர்கள் பலர் கண்டதுண்டு
அறிமுகத்திலேயே பாராட்டுவோருண்டு
கேலி செய்வோருண்டு திட்டுவோருண்டு
சில நிமிடங்களில் நட்பைத் துண்டித்தோருமுண்டு
ஆனாலும் அழ வைத்தார் ஒரு நண்பன்
அறிமுகமான சில நொடியில் ஹாய் என்றான்
முகவரியில் அழகிய சிறுமியின் படம்
அமைதியான அழகு முகமுடைய சிறுமி
எப்படி என்றேன் துக்கம் என்றார்
ஏன் என்றேன் தன்னூர் புதுக்குடியிருப்பென்றார்.
பலிகொடுத்தேன் என் சிறு தங்கையை என்றார்
அவள் படம் தான் தன் முகவரிப் படம் என்றார்.
மெல்லக் கசிந்தன என் கண்கள்

பொருளாதார மந்தத்திலும் கவர்ச்சீகரமான உள் ஆடை விற்பனை பிரித்தானியாவில் அதிகரிப்பு


பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலையால் பல வியாபார நிறுவனங்கள் தமது விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவித்த வேளையில் பிரபல கவர்ச்சிகரமான உள்ளாடை உற்பத்தி நிறுவனமொன்று தமது விற்பனை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பிறப்பு வீதமும் அதிகரிக்குமாம்.
பொருளாதாரப் பிரச்சனையால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே சென்று கேளிக்கைகளில் ஈடுபடாமல் வீட்டிலேயே கேளிக்கயில் ஈடுபடுவதால் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிக்கும் என்று ஒரு பத்திரிகை எதிர்வு கூறியுள்ளது.


இத்தாலிச் சனியாளிற்கு
தமிழினக் கொலையாளிக்கு
வாக்களிப்போரை
வரலாறு மன்னிக்காதே!

முத்துக் குமாரனை விதைத்தோம்
காங்கிரசைப் புதைப்போம்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...