ஈரானிய அதிபர் தேர்தல் 14-ம் திகதி ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது. ஈரானின்
அரசியல் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பை ஈரானியத் தலைவருக்கு உரியது.
உச்சத் தலைவருக்கு அதிபரிலும் பார்க்க அதிக அதிகாரம் இருக்கிறது. அதிபர்
மக்களாலும் உச்சத் தலைவர் அறிஞர் சபையாலும்(Assembly of Experts)
தேர்ந்தெடுக்கப்படுவர். ஈரானிய அரசியலமைப்பு இசுலாமிய மதக்
கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் மக்களாட்சித் தத்துவங்களை
உள்ளடக்கியும் உருவாக்க்பபட்டது. தற்போதைய உச்சத் தலைவராக அயத்துல்லா அலி
கமைனி இருக்கிறார்.
ஈரானில் அதிபர் தேர்தலில் யார்
போட்டியிடுபவர்கள் முதலில் தேர்தல் சபையினதும் பின்னர் பாதுகாவலர் சபையின்
(Guardian Council) அங்கீகாரம் பெறவேண்டும். பெண்கள் போட்டியிடுதல் தடை
செய்யப் பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் உட்பட 689
பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டு
போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அயத்துல்லா அலி கமைனிக்கு உகந்தவர்கள்
மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனச் சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு போன்ற முக்கியமான அமைச்சர்களை உச்சத் தலைவரே நியமிப்பார்.
2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட Mir Hossein Mousavi, Mehdi
Karroubi ஆகிய இரு சீர்திருத்தவாதிகள் அத் தேர்தலில் செல்லுபடித்தன்மை
பற்றிச் சவால் விட்டதால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்
இம்முறை போட்டியிடவில்லை.
வேட்பாளர்கள்
1. மொஹமட் கராஜி
(Mohammad Gharazi) முன்னாள் எண்ணெய் வள அமைச்சரான இவர் பணவிக்கத்திற்கு
எதிரான வேட்பாளராக தம்மை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் ஒரு தாராண்மைவாதி
எனக் கருதப்படுகிறார்.
2. மொஹமட் ரிஜா அரிஃப் (Mohammad Reza
Aref) இவர் ஒரு மிதவாத வேட்பாளர் ஆவார். ஈரானி பொருளாதாரம் எண்ணெய்
ஏற்றுமதியில் தங்கி இருப்பதைக் குறைக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
3. மொஹ்சென் ரிஜை
(Mohsen Rezai) ஒரு பொருளியல் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் ஈரானியப்
பொருளாதாரம் தவறாக நிர்வகிப்பதாகக் கருதுகிறார். பணவீக்கத்தையும்
வேலையில்லாப் பிரச்சனையையும் கட்டுப்படுத்துவதே இவரது நோக்கம் என்கிறார்.
4. அலி அக்பர் வெலயதி
(Ali Akbar Velayati): உச்சத் தலைவர் கமைனியின் பன்னாட்டுத் துறை தலமை
ஆலோசகரான இவரை மிகை-பழமைவாத மதபோதகர்கள் சபை பலமாக ஆதரிக்கிறது. ஈரானின்
பன்னாட்டு உறவை தாம் மேம்படுத்துவேன் என்கிறார் இவர்.
5. ஹசன் ரொஹானி
(Hassan Rohani) இவர் முன்னாள் அணுவலுத் துறைப் பேரப்பேச்சாளராக
இருந்தவர். அதிபர் பதவி வேட்பாளர்களிடையான தொலைக்காட்சி விவாதத்தின் போது
ஈரானின் அணுவலு தொடர்பான இரகசியங்களை வெளிச் சொன்னார் எனக் குற்றம்
சாட்டப்படுகிறார். இதற்காக இவர் போட்டியிடுவது தடை செய்யப்படலாம் என
எதிர்பார்க்கப்பட்டது,
6. மொஹம்மட் பக்கீர் கலிபாஃப் (Mohammad
Baqer Qalibaf); இவர் இரண்டாவது முன்னணி வேட்பாளராகக் கருதப்படுபவர்.
தற்போது தெஹ்ரான் நகர பிதாவான இவர் முன்னாள் விமானப் படைத் தளபதியாவார்.
1999இலும் 2003இலும் நடந்த மாணவர் எழுச்சிகளையும் 2009-ம் ஆண்டு அதிபர்
தேர்தலில் முறைகேடு நடந்ததாக கிளர்ச்சி செய்தவர்களையும் வன்முறையால்
அடக்கியவர் என்று மனித உரிமை அமைப்புக்கள் இவரைக் குற்றம் சாட்டுகின்றன.
நலிவடைந்த ஈரானியப் பொருளாதாரத்தை இரண்டு ஆண்டுகளிச் சரிபடுத்துவேன் என
முழங்குகிறார் இவர்.
7. சயீத் ஜலீலி (Saeed Jalili)
பெண்கள் இருக்க வேண்டிய இடம் வீடு என்ற கொள்கை உடைய இவர் தற்போதைய அணுவலுத்
துறைப் பேரப்பேச்சாளராகும். தீவிரவாதப் போக்குடைய இவர் அயத்துல்லாக்
கமைனிக்கு வேண்டப்பட்ட ஒருவராகும். இதனால் இவர் முன்னணி வேட்பாளராகக்
கருதப்படுகிறார்.
ஒரு வேடபாளரான முன்னாள் பராளமன்ற அவைத்தலைவரான
கலாம் அலி ஹதாத் அடெல் (Gholam-Ali Haddad-Adel) போட்டியில் இருந்து
10-03-2013இலன்று விலகியுள்ளார்.
ஈரானின் அணுவலு உற்பத்தி ஓர்
அணுக்குண்டுத் தயாரிப்புக்கு வழிவகுக்கும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளும்,
வட அமெரிக்க நாடுகளும் இஸ்ரேலும் கருதுகின்றன. இதனால் ஈரானின் மீது ஐக்கிய
நாடுகள் பாதுகாப்புச் சபையூடாகவும், இந்த நாடுகள் தனித்தும் பொருளாதரத்
தடையை விதித்து அதை மேலும் மேலும் இறுக்கி வருகின்றன. இதனால் ஈரானிய
ரியாலின் பெறுமதி பெரும் சரிவுக்கு உள்ளானது. ஈரானுடனான எந்த ஒரு
நிதிக்கொடுப்பனவும் செய்ய முடியாமல் பன்னாட்டு வங்கிக் கொடுப்பனவு முறைமையை
அமெரிக்கா சாதுரியமாக தடுத்து விட்டது. சீனாவும் இந்தியாவும் ஈரானுடன்
பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்கின்றன. பொருளாதாரத் தடையால் ஈரானில்
விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சனை ஆகியன பெரும்
பிரச்சனைகளாக இருக்கின்றன. இதனால் தேர்தல் பிரச்சாரம் அணுவலு பற்றியதாகவும்
அதனால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனையை ஒட்டியதாகவும் இருக்கின்றது.
தீவிரப் போக்குடைய முன்னணி வேட்பாளரான சயீத் ஜலீலி மேற்கு
நாடுகளுக்கு எந்த வித விட்டுக் கொடுப்புக்களையும் செய்யக் கூடாது என்ற
கருத்துடையவர். மேற்கு நாடுகளுடன் எந்த வித சமரசமும் செய்யக் கூடாது என்ற
கருத்துடையவர் இவர். “No compromise, no submission, only Jalili!”என்கின்றனர்
இவரது ஆதரவாளர்கள். ஏழு வேட்பாளர்களும் ஈரானின் அணுவலு மேம்பாட்டை
ஆதரிக்கின்றனர். அதை எப்படி மேற்கு நாடுகளுடன் கையாள்வது என்பது
தொடர்பாகவும் பெண் உரிமை தொடர்பாகவும் பொருளாதாரக் கொள்கை தொடர்பாகவும்
வேட்பாளர்கள் வேறு படுகின்றனர். ஈரானிய அதிபர் தேர்தலில் யார் வெற்றி
பெற்றாலும் அதன் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் கொள்கையில் எந்த மாற்றமும்
இருக்காது என்கின்றனர் இஸ்ரேலியர்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment