Wednesday, 31 October 2012

பாலியல் லீலைகளால் கப்பலேறும் பிபிசியின் மானம்

பிபிசியிற்கு என்று ஒரு பெரு மதிப்பு ஒரு காலத்தில் எல்லா நாட்டிலும் இருந்தது. பிபிசி சொல்வது உண்மை என உலகெங்கும் பலர் நம்புவதுண்டு. கொக்கட்டிச் சோலையில் நடக்கும் படை நடவடிக்கை பற்றி படுவான கரை மக்கள் பிபிசி செய்தியைக் கேட்டு அறிந்து கொள்வர். இலங்கை இனக்கொலைப் போரைப் பற்றி பிபிசி தனது செய்திகளில் சொல்வதை வைத்துக் கொண்டு தமிழர்கள் பலர் பிபிசியின் நம்பகத் தன்மையில் சந்தேகம் கொள்ளத் தொடங்கினர். பிபிசி பல செய்திகளை இருட்டடிப்புச் செய்வதாக இலண்டனில் பிபிசி பணிமனையின் முன்னர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் பல தடவை செய்ததுண்டு.

2009இன் ஆரம்பப் பகுதியில் பிரித்தானியப் பாரளமன்றத்தின் முன்னர் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடாத்திய போது பிபிசி செய்தியாளர் காவல் துறை அதிகாரியிடம் கவலையுடன் கேட்டது: "இடது சாரிகள் செய்யும் ஆர்ப்பாட்டங்களை அடக்க கடுமையாக நடந்து கொள்ளும் நீங்கள் தமிழர்களின் போராட்டத்தை அடக்க ஏன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை?"

பாலஸ்த்தீனியப் பிரச்சனையை பிபிசி மூலமாக அறிந்து கொள்வது சியோனிஸ்ட் கண்ணாடி போட்டுக்கொண்டு பாலஸ்த்தீனத்தைப் பார்ப்பது போன்று என்று பலர் சொல்வதுண்டு. இக்கருத்து வலுப்பெற அல் ஜசீரா உருவானது.

பிரித்தானியா என்றால் ஷேக்ஸ்பியர், ஐசாக் நியூட்டன், பல்கலைக்கழகங்கள், பிபிசி போன்றவைதான் பலருக்கும் நினைவில் வரும். ஆனால் பிபிசி என்றால் Biased Broadcasting Corporation என்பார்கள்
ஜிம்மி சவைல்

தற்போது பிபிசியின் ஊழியர் ஒருவர் பல சிறுவர்களைப் பாலியல் ரீதியில் தவறாகப் பாவித்த செய்திகள் அம்பலமாகி உள்ளது. தனது 84 வயதில் 2011 அக்டோபர் மாதம் காலம் சென்ற ஜிம்மி சவைல் என்பவர் ஒரு காலத்தில் பிபிசியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி வழங்குனர். பொப் பாடல் நிகழ்ச்சி சிறுவர்களுக்கான ஜிம் வில் ஃபிக்ஸ் இற் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். இவர்  disc jockey, television presenter, media personality and charity fundraiser எனப் பல திறமைகளைக் கொண்டிருந்தார். இவருக்கு பிரித்தானிய மகராணியார் கௌரவப் பட்டங்களையும் வழங்கி இருந்தார். இவரால் சிறுமியாக இருந்த போது பாதிக்கப்பட்ட பெண்(இப்போது முதியவர்) தனக்கு நேர்ந்தவற்றை அம்பலப்படுத்தினார். பிபிசி நிகழ்ச்சிகளில் பங்கு பெற வருபவர்களை ஜிம்மி சவைல் பாலியல் ரீதியில் பயன்படுத்தினாராம். இப்படி 12 பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை அம்பலப்படுத்தினர். இது தொடர்பாக பிபிசியில் சிலர் விசாரணை ஆரம்பித்தனர். விசாரணை அம்பலமானால் பிபிசியின் கௌரவத்திற்கு இழுக்கு வரும் என்று அதை மூடி மறைக்க பிபிசியின் உயர்பீடம் முயன்றது. எல்லாம் சேர்ந்து அம்பலத்திற்கு வந்தது. ஜிம்மி சவைல் செய்த லீலைகள் பல தொடர்ந்து அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. முதலில் விசாரணையை மூடி மறைத்தமையை பிபிசி மறுத்தது. பின்னர் விசாரணையை இடையில் நிறுத்தியமைக்கு பிபிசி வருத்தம் தெரிவித்தது.

ஜிம்மி சவைலின் லீலைகளை முதலில் ஐரீவி தொலைக்காட்சி அம்ப்லப்படுத்தியது. தொடர்ந்து ஸ்கொட்லண்ட்யார்ட் விசாரணையைத் தொடங்கியது. ஜிம்மி சவைலால் பாதிக்கப்பட்டவர்கள் 300இற்கு மேல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

லீட்ஸில் உள்ள ஒரு மருத்துவ மனையின் தாதியர் தங்குமிடத்தில் ஜிம்மி சவைலின் லீலைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டதாம். மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்களையும் இவர் விட்டு வைத்ததில்லையாம்.

1 comment:

Seeni said...

ada paavi......


nalla pakirvu...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...