1962-ம் ஆண்டு Dr Who திரைப்படத்தில் இருந்து உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் பெண்களைக் கவர்வதன் இரகசியத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். இதுவரை தயாரிக்கப்பட்ட 23 படங்களும் மக்களைக் கவர்ந்தவையே. இதன் மர்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் பாண்ட் பாத்திரத்தின் கவர்ச்சிக்கான காரணங்களை வெளியிட்டுள்ளனர்:
1. உச்ச தன்னம்பிக்கை: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் உச்ச தன்னம்பிக்கை உள்ளதாகப் படைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜேம்ஸ் பாண்டைப் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.
2. பதட்டப்படாமல் அமைதியாக இருத்தல்: கொல்ல முயற்ச்சிக்கப்படும் போதும் மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் போதும் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிப்பவர்கள் பதட்டப்படாமல் அமைதியாக இருந்து நிலைமையக் கையாள்வது பெண்களை மிகவும் கவர்கிறது.
3. தண்ணியடித்தல்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்கள் மதுவை லாவகமாக அருந்து சுய நினைவை இழக்காமல் இருப்பது போல் சித்தரிக்கப்படுவதால் அந்தப் பாத்திரத்தை பெண்கள் விரும்புகிறார்கள்.
4. நல்லவர்/கெட்டவர்களை இனம் காணும் திறன்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்கள் தன்னைச் சந்திப்பவர்கள் எத்தகையினர் - அதிலும் முக்கியமாகப் பெண்களை- என்பதை இலகுவாக இனம் காண்பதை பெண்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
5. ஒரு பெண் ஆணிடம் எதை எதிர் பார்க்கிறாள்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் ஒரு பெண் ஆணிடம் எதை எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாத்திரத்தின் இந்த அறிவு பெண்களைப் பெரிதும் கவர்கிறது.
6. உயரமான தோற்றம்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்த சகல நடிகர்களும் உயரமானவர்கள். பெண்கள் உயரமான ஆண்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.
7. கையில் பணப்புழக்கம்: ஜேம்ஸ் பாண்ட் பாத்திரங்கள் கையில் நிறையப் பணம் வைத்திருப்பதும் பெண்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு சூதாடுவதும் பெண்களை மிகவும் கவர்கிறது.
8. ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்வது: ஜேம்ஸ் பாண்ட்பாத்திரங்கள் எந்த மோசமான ஆபத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளும். ஆண்மை மிக்கவர்களால்தான் இதைச் செய்ய முடியும்
9. குறு நகைச்சுவை(பஞ்ச் டயலாக்): அவ்வப்போது ஒரு குறுகிய வசனங்களின் மூலம் ஜேம்ஸ் பாண்ட் நகைச்சுவைகளை சொல்வது பெண்களை மிகவும் கவர்கிறது.
10. அருகில் இருப்பவரை அருட்டுதல்(exciting): ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் அருகில் இருப்பவர்களிற்கு ஊக்கமளிக்கும் தன்மையுடையது. இது பெண்களிற்கு மிகவும் பிடிக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
40 comments:
பதிவு சூப்பர்//கொல்ல முயற்ச்சிக்கப்படும் போதும் மிக ஆபத்தான கட்டத்தில் இருக்கும் போதும் அமைதியாக இருத்தல்//ஊகும் முடியல
//ஒரு பெண் ஆணிடம் எதை எதிர் பார்க்கிறாள்:// காலாகாலமாய் இத கேட்டுக்கிட்டுத்தான் இருக்கிறம்.
ஜேம்ஸ் பொண்ட் பற்றிய பதிவு இது http://www.venkkayam.com/2012/07/blog-post_04.html எப்படி இருக்கு தல
Post a Comment