இலண்டனில் இருந்து சென்னை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது அந்த விமானம். அதில் ஒரு சட்ட நிபுணரும் ஒரு அழகிய இளம் பெண்ணும் பக்கம் பக்கமாக அமர்ந்து கொண்டிருந்தனர். சட்ட நிபுணர் இளம் பெண்ணுடன் ரெம்பத்தான் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார். தனது கல்வியைப் பற்றியும், தனது வருமானம் பற்றியும் நிறையக் கூறினார். பல நகைச்சுவைக் கதைகள் சொல்லி அந்தப் பெண்ணை மடக்கவும் பார்த்தார். அவள் ஒன்றுக்கும் மசிவதாகத் தெரியவில்லை..
சட்ட நிபுணரும் விடுவதாகவில்லை. கடையில் அந்தப் பெண் தனக்கு போரடிக்கிறது என்று கூறினாள். சட்ட நிபுணர் விடுவதாக இல்லை. அப்படியாயின் நாம் ஒரு போட்டி விளையாட்டு விளையாடுவோம். முதலில் நான் உன்னை ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு நீ சரியாகப் பதில் சொன்னால் நான் உனக்கு ஐந்து டாலர்கள் தருவேன். பிழையாகப் பதில் சொன்னால் நீ எனக்குப் ஐந்து டொலர்கள் தரவேண்டும். பின்னர் நீ என்னை ஒரு கேள்வி கேட்க வேண்டும் அதற்கு நான் சரியாகப் பதில் சொன்னால் நீ எனக்கு ஐந்து டாலர்கள் தர வேண்டும். பதில் பிழையாயின் நான் உனக்கு ஐந்து டாலர்கள் தரவேண்டும். இப்படியே சென்னை போகும் வரை மாறி மாறிச் செய்வோம் என்றார். அதற்கு அந்தப் பெண் நீங்கள் நிறையப் படித்தவர். நான் படிக்காதவள். எப்படி நாம் இருவரும் போட்டி போட முடியும் என்றாள். அதற்கு சட்ட நிபுணர். சரி நான் தோற்கும் போதெல்லாம ஐநூறு டாலர்கள் உனக்கு நான் தருவேன். நீ தோற்கும் போதெல்லாம ஐந்து டாலர்கள் மட்டும் கொடுத்தால் போதும் என்றாள்.
அந்த அழகி சிறிது யோசித்துவிட்டு மவனே உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சரி அப்படியே செய்வோம் என்றாள்
சட்ட நிபுணர் தனது முதலாவது கேள்வியைக் கேட்டார். இலண்டனுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் எவ்வளவு என்று தனது முதற் கேள்வியை எடுத்து விட்டார். அழகி உடனே தனது கைப்பையில் இருந்து ஒரு ஐந்து டாலர் தாளை எடுத்து சட்ட நிபுணரிடம் கொடுத்தாள்.
சரி இப்போ உனது கேள்வியக் கேள் என்றார். மலையில் ஏறும் போது மூன்று கால்களுடன் ஏறி இறங்கும் போது நாலு கால்களுடன் இறங்குவது எது என்று தனது கேள்வியை எடுத்து விட்டாள் அழகி. சட்ட நிபுணர் நிறைய யோசித்தார். நீண்ட நேரம் எடுக்கக் கூடாது என்றாள் அழகி. அதற்கு அவர் போட்டி நிபந்தனையில் எந்த ஒரு கால அவகாசத்துக்குள்ளும் பதில் கூறப்படவேண்டும் என்று நாம் இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றார். அப்போது அழகி சரி தேவையான நேரத்தை எடுங்கள். நான் தூங்கப் போகிறேன். பதில் தெரியும் போது என்னை எழுப்புங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள்.
சட்ட நிபுணர் விமானத்தில் பயணம் செய்யும் மற்றவர்களிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. அதில் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு தகவல் தொழில் நுட்ப நிபுணர் தனது மடிக் கண்னி(Laptop) எடுத்து கூகிள் முழுக்கத் தேடு தேடென்று தேடினார். ஒரு கணக்காளர் தனது கைப் பேசியை எடுத்து உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தனது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு பதில் அறிய முயற்சித்தார். இப்படிப் பலரும் பலவிதமாக முயற்சித்தனர். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. இப்படிப் பலரும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க விமானம் தரை இறங்கும் நேரம் வந்து விட்டது. அழகி அமைதியான தனது தூக்கத்தில் இருந்து விழித்து பதில் என்ன என்று கேட்டாள் சட்ட நிபுணர் ஐநூறு டாலர்களை அழகியிடம் கொடுத்தார். பின்னர் பதில் என்ன என்று கேட்டார். அப்போது அவள் ஒரு ஐந்து டாலர்களை சட்டவாளரிடம் கொடுத்துவிட்டு போட்டி நிபந்தனையில் கேள்வி கேட்பவருக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கும் பதில் தெரியாது என்றாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
6 comments:
" கூகிள் முழுக்கத் தேடு தேடென்று தேடினார்"
"தனது கைப் பேசியை எடுத்து உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தனது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு பதில் அறிய முயற்சித்தார்"
விமானத்தில் பயணிகளின் தொலைபேசி இயங்காது ,இன்டர்நெட் இயங்காது....
அருமையான பதிவு
Kingsfisher flight il thaan irukkathu
international flight il irukkum...
Not even in International Flight. Its a Flight rules mate.
for in-flight wi-fi see below
http://www.delta.com/traveling_checkin/inflight_services/products/wi-fi.jsp
for in-flight mobile see this:
http://www.britishairways.com/travel/cwlcobconnectivity/public/en_gb
this is not a flight from delhi to mumbai guys.....
Post a Comment