நான் Facebookஇற்கு அடிமையாகவில்லை.
வேலை செய்யும் போது பாவிப்பேன்
ஓய்வு நேரத்தில் பாவிப்பேன்
காலையில் பாவிப்பேன்
மதியத்தில் பாவிப்பேன்
இரவு இரவாகப் பாவிப்பேன்
அவ்வளவுதான்.
கூகிளும் என் மனைவி போலே
வசனத்தை முடிக்கமுன்
தனது பரிந்துரையைத் தருவதால்.
அன்று பெற்றோர்
எனக்கு ஆப்பிளையும்
பிளக்பெரியையும்
கொடுத்து வளர்த்தனர்
இன்று ஆப்பிளையும்
பிளக்பெரியையும்
எப்படிப் பாவிப்பதென்று
என்னிடம் இருந்து
அறிந்து கொள்கின்றனர்.
காலையில்
புது உத்வேகத்துடன்
எழும்புவர்
பின்னர்
Facebook status
update செய்தவுடன்
எல்லாம்
நிறைவேற்றியது போல்
ஒரு போலித் திருப்தி
Wi-fiஇற்கும் Wifeஇற்கும்
என்ன ஒற்றுமை
இரண்டையும்
அயலவரிடமிருந்து
பாதுகாக்க வேண்டும்.
இருவர் மட்டும்
காதலைப் பற்றிச்
சிந்திக்கின்றனர்
மற்றவர் யாவரும்
உணவைப் பற்றிச்
சிந்திக்கின்றனர்
திருமணத்தில்
சில கணங்கள்
இன்பமாயிருக்க
தம்
சிறிது நேரம்
இன்பமாயிருக்க
குவாட்டர்
சற்று அதிக நேரம்
இன்பமாயிருக்க
காதல்
வாழ்நாள் முழுதும்
இன்பமாயிருக்க
இவை மூன்றையும் தவிர்.
இளமைப் பருவம்
என்பது குவாட்டர்
அடித்து விட்டு இருப்பது போல்
நீ செய்த லூட்டிகள்
உனக்கு நினைவிருக்காது
மற்றவர்களுக்கு நினைவிருக்கும்
நானும் ஆப்பிள் போல்
Jobஐ இழந்து நிற்பதால்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment