சீனாவிற்கென்று மிகப் பெரிய உற்பத்தித் துறை இருக்கிறது. அது தனது மனித வளததைக் கொண்டு இதைக் கட்டி எழுப்பியது. இதை இந்தியாவும் செய்கிறது.
சீனா நிறைய இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கர்களை போல் சீனாவின் மலிவான பொருட்களை கடனுக்கு வாங்கித் தொலைக்காமல் இந்தியா தானும் சீனாவிற்கு நிறைய ஏற்றுமதி செய்ய வேண்டும்.
சீனா தனது படைபலத்தை அபரிமிதமாகக் கட்டி எழுப்புகிறது. இந்தியாவும் அப்படியே செய்கிறது.
சீனா மோசமான ஆட்சியாளர்களின் பிடியில் இருக்கிறது. இந்தியாவும் அப்படியே.
சீனாவில் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை. இந்தியாவிலும் அப்படியே.
சீனா சிங்களவர்களுக்கு தமிழர்களைக் கொன்று குவிக்க உதவியது. இந்தியாவும் அதையே செய்தது.
சீனாவில் தொடரூந்து வண்டிகள் தாமதமாக வந்தால் ஆத்திர மடையும் பயணிகளை சாந்தப் படுத்த அங்கு ஒரு மென் தூண் அமைத்து வைத்திருப்பார்கள். அதற்கு பயணிள் தங்கள் ஆத்திரம் தீரும்வரை குத்துவது காலால் உதைப்பது குங்கு பூ தாக்குதல் செய்லாம். இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும் சிறு மாறுதலுடன். அந்த மென் தூணில் சோனியா காந்தி அம்மையாரினதும், மன் மோகன் சிங்கினதும் படங்களைப் பதிவு செய்ய வேண்டும். இந்தியர்களை இது நன்கு சாந்தப்படுத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
2 comments:
Excellent.
idoits
Post a Comment