Wednesday, 1 December 2010
விக்கிலீக் நிறுவனர் மீது கற்பழிப்புக் குற்றச் சாட்டு - பழிவாங்குகிறதா அமெரிக்கா?
பன்னாட்டுக் காவற்துறையான Interpol தனது சிவப்புப் பட்டியலில் அமெரிக அரச இரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்கின் நிறுவனர் ஜூலியன் அசங் ( Julian Assange ) என்பவரை பதிவு செய்துள்ளது. சுவீடனில் இரு பெண்களை கற்பழிப்பு செய்ய முயற்சி செய்தார் என்பதே இவர்மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச் சாட்டு.
உலகெங்கும் உள்ள அமெரிக்க தூதுவராலயங்களின் தகவல் பரிமாற்றக் குறிப்புகள் 251,287ஐ விக்கிலீக் பெற்றுள்ளது. இவற்றில் 291 மட்டும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல அசிங்கங்கள் அம்பலமாக்கப் படவுள்ளது.
"சர்வதேச சமூகம்" என தம்மைக் கூறிக்கொள்ளும் ஒரு அசிங்கமான கொடுங்கோலர் கும்பலின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவந்துள்ள விக்கிலீக் இணையத்தளம் பல ஆட்சியாளர்களின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆடுகிறது. அவர்களுக்கிடையிலான உண்மையான உறவு என்ன அவர்கள் பாவிக்கும் அசிங்கமான வார்த்தைகள் செயற்பாடுகள் என்பன வெளிவரவுள்ளது.
இலங்கையைப்பற்றியும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட தகவல்கள் உள்ளன. அவை 2009 மேமாதம் நடந்த பல போர்க்குறங்களையும் போரின் இறுதிக் கட்டங்களில் எவர் இறந்தனர் எவர் தப்பிச் சென்றனர் என்ற உண்மைகளையும் அதில் இந்தியாவின் கேவலமான பங்களிப்பு பற்றியும் பல தகவல்கள் வெளிவரலாம்.
விக்கிலீக்கைப் பழிவாங்க அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியுள்ளதா. அதற்காக நதி மூலம் ரிஷிமூலம் தேடி உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ அதன் நிறுவனர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
எதோ அமரிக்கங்கரதுனால பரவயில்ல்ல...
நமமூர்னா அதே பொய் கேசுல அரஸ்ட் பண்ணி, அப்பவே போலிசை தாக்கி தப்பிக பர்த்தன்னு என்கவுன்டர் பன்னியிப்பங்க.
Post a Comment