Monday, 1 February 2010

இணைந்து நின்றால் உயிர்த்தெழும் ஞாயிறு


வாக்களித்துத் தீராதது வாக்கெடுப்பில் தீர்ந்திடுமோ?
களத்தில் போராடிக் கிடைக்காதது புலத்தில் கூவிக் கிடைத்திடுமோ?
வட்டுக்கோட்டையில் தொடங்கிடவில்லை
முள்ளிவாய்க்காலில் முடிந்திடவுமில்லை
சர்வதேசச் சமூகம் என்னும் சண்டியர் கூட்டம்
ரவுட்டிகட்டித் தாக்கிய ரவுடிக் கும்பல்
பன்னாட்டுப் பன்னாடைப் பன்றிகள் கொட்டம்
கருத்துக் கணிப்பைக் கண்டு அடங்கிடுமோ
கருத்தைத்தான் மாற்றிடுமோ
துணையாய் வந்தோர் துரோகிகளன்றோ
தீர்க்க வந்தவன் தீர்த்துக் கட்டினானே

எதை மௌனித்ததால் எது சுழியமானது?
மௌனித்தது மீண்டும் பேசும்வரை
சுழியமானதுதான் பலமாகிடுமோ?
நாடிழந்தோர் நாடிநிற்பது
நாடுகடந்தோர் பலமன்றோ
இணைந்து நின்றால்
உயிர்தெழும் ஞாயிறு

2 comments:

Yoga said...

அப்பத்தப் புட்டுக் காட்டியிருக்கிறீங்க தர்மா!

pandiyan-tamilnadu said...

கவிதை அருமையாக வந்திருக்கிறது கவிஞர் வேல்தர்மா.. தற்போதைய நிலையை படம் பிடித்து காட்டுவதாக உள்ளது .. இதில் உள்ள பெரிய குறை ஆரிய பிணந்தின்னிகளை பற்றி கிழிக்காமால் விட்டது.. இரண்டு வரி அது பற்றி சேர்த்து மீள்பதிவிட்டால் மகிழ்ச்சியடைவேன்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...