Sunday, 31 January 2010

அமெரிக்காவின் சாயம் வெளுக்கிறது


சரத் பொன்சேக்கா ஒரு திறமையான இராணுவ அதிகாரியுமல்ல தரமான அரசியல்வாதியுமல்ல. ஆனால் இருதுறையிலும் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இலங்கைப் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதான வேட்பாளராக ஒரு அரசியல்வாதி போட்டியிடுவது ஒரு சாதாரணமானவரால் முடியாது ஆனாலும் சரத் அதைச் சாதித்தார். பாரதப் போரில் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் வைத்துக் பலர் சூழ்ந்து கொன்றது போல தமிழ்த் தேசிய விடுதலைப் போரை பன்னாட்டுச் சதியாளர்களுடன் கூடி மழுங்கடித்ததால் சிறந்த படைத்துறை அதிகாரி என்று பெயர் எடுத்தவர் சரத் பொன்சேக்கா.

சரத் பொன்சேக்கா நாட்டை விட்டுச் செல்லாத படி சகல ஏற்பாடுகளும் இரகசியமாக செய்யப் பட்டுள்ளது. அவர் எப்போதும் கைது செய்யப் படலாம். இபோது அவருக்கு ஆதரவானவர்கள் "வடிகட்டப்" படுகிறார்கள்.

இப்போது சரத் பொன்சேக்கா தன்னிடம் பல இரகசியங்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை அவை இரகசியங்கள் தமிழர்களைப் பொறுத்தவரை அவர் சொல்லவிருப்பது பகிரங்க உண்மைகள். யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யார் என்பது சிங்களத்தைப் பொறுத்தவரை இரகசியம். தமிழர்களைப் பொறுத்தவரை அது பகிரங்க உண்மை.

அமெரிக்கா இப்போது சொல்கிறது:
  • ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாது காப்பு தொடர்பில் உன்னிப்பாக கண் காணிக்கப்படும.
  • சரத் பொன்சேகாவுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும்.
  • அவரது எதிர் காலம் தொடர்பில் கவனம் செலுத்தப் படும்.
  • தேவை ஏற்படின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேக்காவில் அமெரிக்கா இப்படி அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் என்ன?
அவர் அப்படி உலக சமூகத்திற்கு என்ன செய்துவிட்டார்.
இலங்கையில் போர் குற்றம் இழைக்கப் பட்டது என்று அமெரிக்காவே கூறியது. அப்போர்குற்றத்தில் சரத் பொன்சேக்காவிற்கும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இருந்தும் ஏன் அமெரிக்காவிற்கு ஏன் இந்த அக்கறை?

சரத் பொன்சேக்கா ஒரு அமெரிக்க கைப்பொம்மை என்பதால் அவரை சிங்கள மக்கள் நிராகரித்தனர். அமெரிக்காவின் சதி இப்போது வெளிவந்துவிட்டது.

தொடர்ந்தும் சரத் பொன்சேக்காவை தனது பிராந்திய நலன்களுக்காக பயன்படுத்தப் போகிறது.

3 comments:

Yoga said...

பெரியண்ணனுக்கு முன் சின்னண்ணன் அவரை காக்கப் புறப்பட்டு விட்டார்!மேனன் சார் இலங்கை வருகிறார்! நீலிக் கண்ணீர் வடித்து பொன்சேகாவை காக்கப் போகிறார்!கைது செய்கிறோம்,தூக்கில் போடப் போகிறோம் என்றெல்லாம் மிரட்டல் விடுவது சரத்தை மிரட்ட அல்ல!யார் வருகிறார்கள்,என்ன சொல்கிறார்கள் என்று மகிந்தாஅன்கோ தெரிந்து கொள்வதற்காகத் தான் இந்த நாடகங்கள்!

sarath said...

எப்படிடா எவன் எது செய்தாலும் குறை கண்டு பிடிக்கிறதிலேயே இருகிர்கள்

Anonymous said...

எமக்குப் பிழை விடாதவன் எவண்டா இந்த உலகத்தில்?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...