இலங்கையில் தமிழர்கள் ஆயுதவன்முறையைக் கைவிட்டு "ஜனநாயக வழியில்" தமது பிரச்சனையைத் தீர்துக்கொள்ள வேண்டும் என்று போதித்துக் கொண்டு சர்வதேசப் பயங்கரவாத நாடுகள் ஒன்று கூடி தமிழ்த் தேசியவாதத்தை "ரவுண்டு கட்டி" தடை செய்யப் பட்ட பயங்கர ஆயுதங்களைப் பாவித்துத் தாக்கி மழுங்கடித்தன.
இலங்கையில் "ஜனநாயகம்"
இலங்கையின் "ஜனநாயகம்" பற்றி 1981இல் நடந்த மாவட்ட சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். 1981இல் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு என்று அமெரிக்க நிர்பந்தத்துடன் இலங்கையில் அதிகாரமற்ற மாவட்ட சபைகள் உருவாக்கப் பட்டது. இதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்காவால் இலங்கைக்கு அனுப்பபட்ட அமெரிக்க பேராசிரியர் ஏ. ஜே வில்சன்(தந்தை செல்வாவின் மருமகன்) மாவட்ட சபையைப் பற்றிக் குறிப்பிடுகையில் இதற்குக் கூடிய அதிகாரத்தை ஒரு (சிங்கள) அரசு தமிழர்களுக்கு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானது என்றார். மாவட்ட சபைத் தேர்தல் நடாத்தியது சிங்கள் ஜே ஆர் ஜயவர்தனே அரசு. ஜே ஆர் ஜயவர்தனே மேற்குலக நாடுகளாலும் சில தமிழ் அரசியல் வாதைகளாலும் அ அமிர்தலிங்கம் உட்பட சிறந்த "ஜனநாயக வாதி" என கூறப்பட்டவர். 1981இல் நடந்த மாவட்டசபைத் தேர்தலில்தான் இலங்கையில் முதல் முதலாக வாக்கு மேசடி இடம்பெற்றது. வாக்குப் பெட்டி நிரப்புதல் என்றால் என்ன என்று முதல் முறையாக தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். தேர்தல் முடிந்த பின் யாழ் சுபாஸ் விடுதியில் ஒரு வாக்குப் பெட்டி கூட கண்டு எடுக்கப் பட்டது. அங்குதான் ஜே ஆர் அவர்களால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பப் பட்ட காமினி திசநாயக்க சிறில் மத்தியூ ஆகியோர் தங்கி இருந்தனர். அப்போதுதான் யாழ் நூலகமும் கொழுத்தப் பட்டது. இது ஜனநாயக வழியில் தமிழர்கள் பிரச்சனை எப்படி சிங்களவர்கள் தீர்ப்பர் என்பதற்கு கிடைத்த முதல் எடுத்துக்காட்டு.
மாவட்டசபை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் மாகாணசபை முறை இந்திய நிர்பந்தத்துடன் 1987இல் அறிமுகப் படுத்தப் பட்டது. ஆனால் மாகாண சபைக்கான தேர்தல் தமிழ்பிரதேசங்களில் 2008வரை நடத்தப் படவில்லை. 2008 தமிழர் மாகாணம் துண்டாடப் பட்டு கிழக்கு மாகாணசபைக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. பிரதான தமிழ்கட்சிகள் இத் தேர்தலைப் புறக்கணித்தன. இருந்தும் வாக்குப்பெட்டிகள் பலவந்தமாக நிரப்பப்பட்டமை, வாக்காளர்கள் தாக்கப்பட்டமை, அச்சுறுத்தப்பட்டமை போன்ற வன்முறைச் சம்பவங்களுடன் தேர்தல் நடத்தப் பட்டது.
இப்படிப்பட்ட"ஜனநாயக" அனுபவங்களைக் கொண்ட தமிழர்களுக்கு "ஜனநாயக" வழிநின்று செயற்படும் படி போதிக்கப் படுகிறது.
2010 ஜனவரி 26இல் நடந்தஇலங்கை குடியரசுத் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்ததா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
- தேர்தல் ஆணையாளர் பலத்த அழுத்தத்துக்குள்ளானார்.
- தேர்தல் ஆணையாளர் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டார்.
- தேர்தல் ஆணையாளர் பதவி விலகுகிறார்.
- தேர்தல் தினத்தன்று காலை 7 முதல் மாலை 4 மணிவரை வன்முறைகள் இன்றி அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது. எனினும் அன்றைய தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தமது வன்முறை குழுக்களுடன் பிரவேசித்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிடச் சென்ற பலரை விரட்டியடித்தனர்.
தமது கட்சியின் ஆதரவாளர்களை தவிர ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. - கணனிகளில் பெரும் மோசடி இடம் பெற்றது.
- வாக்குக்கள் எண்ணும்வரை வேட்பாளர் இராணுவ முற்றுகையில்.
தேர்தலை ஒட்டி தளர்த்தப் பட்ட தமிழ்மக்கள் மீதான கெடுபிடிகள் தேர்தலுக்குப் பின் இறுக்கப் படுகின்றன தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தம்மால் வெற்றி பெறமுடியும் என்று அறிந்தவர்கள் இனி தமிழ் மக்களைப் பற்றி கொஞ்சமாவது கவலைப் படுவார்களா? தமக்கு வாக்களிக்காத தமிழர்களை ஜே ஆர் ஜயவர்தன எப்படிப் பழிவாங்கினார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். மிக மோசமான தோல்விகளை தமிழர் வாழும் பிரதேசங்களில் பெற்ற ராஜபக்சேக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? வரலாற்றில் அறியாத மிக மோசமான அடக்கு முறை இனித் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும்.
1 comment:
atkanavea rajapaksa seirathaiyea tamil pesum muddalkal velanki kollaliyea....
Post a Comment